அங்காடி வண்டியை
வீட்டுக்குத் தள்ளிவந்து
வீதியில் விட்டேன்
வெயிலில் மழையில்
பனியில் கிடந்தது
துரு தின்றது
குப்பைகள் கொண்டது
காலவீச்சில்
அதன் கால்கள் முறிந்தது
வண்டிக்கும்
வலியுண்டோ?
என்னால்தான் இக்கதி
தப்புதான் வண்டியே
மன்னிப்பாயா?
வண்டி சொன்னது
தொழுது வாழ்ந்தேன் இன்று
தொழுநோய் கொண்டேன்
சித்திரமாயிருந்தேன்
சிதைத்தாய்
என் சாபம் தொடரும்
தர்மம் தண்டிக்கும்
நீ தீயில் முகம் கழுவும்
தேதிக்குக் காத்திரு
அமீதாம்மாள்
- அங்காடி வண்டி
- கவிதைகள்
- கரை திரும்புமா காகம் ?…