ஜெயானந்தன்
ஒரு
போதி மரத்தின்
கீழ்
நான்கு சந்நியாசிகள் .
ஒருவர்
தியானம்.
அடுத்தவர்
தூக்கம்.
மூன்றாமவர்
புல்லாங்குழல் வாசித்துக்கொண்டருந்தார் .
நான்கமவர் மரத்திற்கு
தண்ணீர் விட்டார்.
வரும்போகும்
சம்சாரிகள்
தியான சந்நியாசி
காலில் மட்டும் விழுந்து
எழுந்துச்சென்றனர்.
மற்ற
மூன்று சந்நியாசிகளும்
அவரவர்
பணிகளை
அவரவர் செய்துக்கொண்டிருந்தனர்.
-ஜெயானந்தன்.