இழுத்துவிட்டதன் அசௌகரியம்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 6 of 7 in the series 26 ஜனவரி 2025

ரவி அல்லது

வரப்பைத் தலையணையாக்கி

வானத்தை

உள் நோக்கிக்

கிடக்கும் பொழுது

வருடுகின்ற

கொப்பின்

இலைகள்

பறக்க வைக்கிறது

பாரிய சுகத்தில். 

தேங்கி இருந்த

பனிச் சொட்டொன்று

சிரமப்பட்டு

பயணித்து

சிரசுக்குள்

புகுந்து

சிந்தை கலைத்து

சிறையில்

தள்ளியது

பூமிக்கு அழைத்து. 

***

ரவி அல்லது

ravialladhu@gmail.com

Series Navigationசங்கஇலக்கியங்களில் அடிக்கருத்தியல் சிந்தனைசென்னையில் நடந்த 48வது புத்தகத் திருவிழா
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *