-ரவிஅல்லது
எனக்கான
சாத்தியக்கூறுகள்
வாழ்க்கை முழுவதும்
விரவிக்கிடக்கையில்
உன்னிடம்
நான்
பேசியிருக்கலாம்.
எத்தனையோ பேரிடம்
எத்தனையோ
மணி நேரம் பேசினேன்.
உன்னிடமும்
சிரித்து
மகிழ்ந்து என
இதில்
ஏதோ
ஒரு நிமிடத்தை
மன்னிப்பிற்காக
நான்
மாற்றி இருக்கலாம்.
தயக்கம்
என்
வாழ்வின்
பல
போக்குகளை
பலியாக்கி
மாறியதை
நான்
அறிந்தே
இருக்கிறேன்.
என்
தயக்க வியாதி
உன்னிடம்
தயக்க அச்சமாய்
வாழ்வோடு
உள்
உறுத்தலாய்
இதுவரை
என்னை
கொண்டு வந்துவிட்டது.
என்
உயிர் அசைவின்
இறுதி துடிப்பு
நாட்கள்
நெருங்கிடும் வேலையில்
வழிந்திடும்
கண்ணீர்
உன் விரல்களை
குழுமையாக்கட்டும்.
நீ
என்
மனைவியானதில்
சௌகரிய சுகத்தை
அனுபவித்தவன்.
நீயே
என்
உயிரானாய்.
எனக்குள்ளான
கவலைகள்
எழும் முன்னே
உன்
கண்ணில்
நீர் வடித்து
என்
உயிருக்குள் கலந்தவள்.
நீ
ஒன்றும்
பேரழகி
இல்லைதான்.
என்
உள்ளத்தோடு
ஒத்துப்போன
குண அழகி.
சிதை ஏறும்போது
சீதை
சினம் கொண்டிருக்கலாம்.
மாதவியை
நினைத்து
கண்ணகி
கோவலன் மேல்
கடுஞ்சினமாகியிருக்கலாம்.
அவதாரங்களின்
சகிகள்
வரலாற்று
நாயகிகள்
எல்லாம்
நம்பிக்கையற்றே
கணவர்களை
அணுகிட்டப்போது
முற்று முழுமையாய்
என்னை
நம்பிய
தனி பிறவி
நீ.
ஒவ்வொரு முறை
தாலி தொடும்போதும்
என்னை பத்திரமாக இருக்க நினைப்பாய்.
அது
பத்திரமாக
உனக்கு
முன்
அனுப்புவதும்
உள்ளதை
இப்போதுதான்
அறிந்தேன்.
என்
பீ
மூத்திரம்
உனக்கு
மட்டும்
நறுமணமாக
மாறியது எப்படி.
ஒரு
உண்மையை
சொல்லி
மன்னிப்பு கோராத
பாவியல்லவா
நான்.
உன்
உடம்பின்
ஒவ்வொரு
பகுதியையும்
எவர் தொடாதும்
கற்பறம்
காத்து வந்து
கண்ணகியையும்
வியக்க வைத்தவள்.
என்
தலையணை
உறை மாற்றும்போது
ஒவ்வொரு முறையும்
மறக்காமல்
உறை பிரிக்காத
கடிதத்தை
உனக்கானது என்று
அறியாமல்
மாற்றி
வைக்கிறாய்.
இதுவரை
என்
கடிதத்தையும்
கைபேசியையும்
பணப்பையையும்
தொட்டுப்பிரித்திடாத
தூயவள்.
என்
கண்கள்
திறக்க முடியாமல்
போகிறது.
நெஞ்சுக்குள்
துடிப்படங்க
நேரம் பார்க்கையில்
கடிதத்தை
நீ
கையிலெடுத்தது
என்னால்
உணர முடிகிறது.
அங்கு
உங்கள் அருகில்
எனக்காக
ஒரு
இருக்கை பிடித்து வைத்து காத்திருங்கள்.
அவசரம் கொண்டு
வர வேண்டாம்.
நாம்
மறுபடியும்
கணவன்
மனைவிமாகவே
பிறக்க வேண்டுமென
அன்பு
கூட்டுகிறாய்.
உனக்குள்
வருடும்
மௌன
மன்னிப்பு
கோரலும்
என்
உற்சாக
உணர்வு தழுவளும்
என்னை
சந்திக்கும்வரை
உனக்கு
போதுமானதாகவே
இருக்கும்.
காதோரோம்
பிரிக்காத
கடிதத்தை
கிழிக்கும்
ஒலியும்
நெற்றி தொடும்
உன்
முத்த சுகமும்
இனிக்கிறதடி
என்
சகியே.
போய்
வராமல்
காத்திருக்கிறேன்.
***
-ரவிஅல்லது.
***