கடைசி வரை
அவன் சொல்லவில்லை.
காலி மைதானத்தின் நடுவில் அமர்ந்துக்கொண்டு
தலையை கிழக்கும் மேற்காக
அசைத்துக்கொண்டு
உற்சாகத்தில்
துள்ளி குதித்தான்.
ம்…ம்…ஓடுங்கள். .ஓடுங்கள் என்று
விசில் அடித்தான்.
கோல் என்று துள்ளி குதித்தான்.
ஆடுகள் மேய்க்கவந்த
மலைச்சி
யாருமற்ற
மைதானத்தைப் பார்த்தாள்
கையசைத்து துள்ளிக்குதிக்கும்
இவனைப்பார்த்தாள்.
அவளும் அவன் உற்சாகத்தில்
கலந்துக்கொண்டு
துள்ளிக்குதித்தாள்.
வறண்டுப்போன
மலச்சிக்கும்
மகிழ்ச்சி வந்தது.
கொஞ்ச நேரத்தில்
மனநல காப்பக வேனில்
அவனை ஏற்றினார்கள்
அவளையும் தான்.
மலச்சி
சத்தோஷமாக ஏறிக்கொண்டாள்.
எங்கிருந்தாலும்
பையத்தியக்கார்கள் தான்
நிரம்பியுள்ளனர்.
நேற்றுக்கூட
காம பைத்தியக்காரன்
மலச்சியை
காட்டிற்குள் அழைத்தான்.
தப்பியோடிய
அவள்
ஜமின்தார் மகனிடம் மாட்டினாள்.
பட்டியில் அடைக்கும்
வாழ்க்கையிலிருந்து விடுபட
பையத்தியங்களோடு
இருந்து விடலாம் என
அவள்
மனநல காப்பக
மைதானத்தில் நடந்தாள்.
- கவிதைகள்
- ஆடுகளம்
- ஶ்ருதி கீதை – 3