நிலவும் போர்ச்சூழலும், நிரந்தர மேம்போக்கு மனித நேயவாதிகளும்
(அல்லது)
கொடும் போர்ச்சூழலும் காகிதக் கிளர்ச்சியாளர்க ளும் காரியார்த்தக் கலகக்காரர்களும்
……………………………………………………………………………………………………………………………………
_ லதா ராமகிருஷ்ணன்
ஒரு போர்ச்சூழலைப் பயன்படுத்தி தம்மை மனிதநேய, பெண்ணுரிமை, மனித உரிமை ஆர்வலராக, போராளியாக முன்னிலைப்படுத்திக்கொள்ள முயற்சிப்பவர் களைப் பற்றி என்ன சொல்ல? எழுத்தாளர்கள் கூடவா இப்படி இருப்பார்கள்? ஒரு போரை உரிமைப்போர் என்று சொல்லி உயர்த்திப்பிடிப்பார்கள் -ஒரு போரை வன் முறை என்று வரையறுப்பார்கள். பல நேரங்களில், வசதிக்கேற்ப வேறு வேறு அளவுகோல்களை, தரநிர்ண யங்களைப் பயன்படுத்தி.
பஹல்காம் படுகொலைகள் அரசின் பாதுகாப்பு நிர்வாகத் தில் நேர்ந்த குறைபாடு என்பது உண்மை. உளவுத்துறை யிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவல், திடீர்த் தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இரண்டு வாரங் கள் முழுக்கத் தேடி அப்படி எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பாதுகாப்பை விலக்கிக்கொண்ட அதே நாள் (ஏப்ரல் 22) பஹல்காம் தாக்குதல் நடைபெற்றதாக செய்திகள் வாசிக்கக் கிடைக்கின்றன. இன்னொரு செய்தி தாக்குதல் நடந்த இடத்தில் இன்னும் இரண்டு மாதங்கள் கழித்துத் தான் பாதுகாப்பு வளையமிட்டு சுற்றுலாவாசிகள் அனுமதிக் கப்படுவார்கள் என்றும் ஆனால் உள்ளூர் சுற்றுலா வழிகாட்டிகள் அதை அறிந்தும் அங்கே ’ஊர் சுற்றிப்பார்க்க வந்திருந்தவர்களை அழைத்துச்சென்றார் கள் என்று இன்னொரு செய்தி. எப்படியிருந்தாலும் இது அரசின் பாதுகாப்புநிர்வாகஞ்சார் குறைபாடு என்றே வைத்துக்கொள்ளலாம். அதற்காக, இந்திய அரசு தன்னைத் தானே குற்றவாளியாக உணர்ந்து கூனிக்குறுகி நின்றுகொண்டிருந்தால் எல்லாம் சரியாகிவிடுமா? இதற்கு முன்பாகவும்கூட அந்தப் பகுதியில் தீவிரவாதத் தாக்குதல்கள் அவ்வப்போது நடந்துகொண்டுதானிருந்தன.
இன்னொருவர் ‘ஆபரேஷன் ஸிந்தூர்’ என்ற பெயரைக் குறைகூறுகிறார். பெண் ணுக்கு ஸிந்தூர்(குங்குமம்) மங்கலச்சின்னம் என்று பேசுவதே பெண்ணடிமைத் தனம் என்று பழிக்கிறார். பஹல்காமில் குடும்பத்தோடு சென்ற ஆண்களை சுட்டுக் கொன்றவர்களால் கணவனை இழந்த பெண்களை இவர் மதிப்பழிக்கிறார் என்றே கொள்ளவேண்டியிருக்கிறது.இந்த மாதிரி வெறுப்புப் பேச்சுகளால் பெண்ணுரிமை எங்ஙனம் மேலோங்க முடியும்? வெறுப்பு தான் விரிந்து பரவும்.
பஹல்காம் படுகொலைச் சம்பவத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் பயங்கர வாதிகள் சொல்லச் சொன்னதாகச் சொன்னதை அப்படியில்லவேயில்லை என்று இங்கே சிலர் அடித்துச்சொல்லவேண்டிய அவசியமென்ன? பஹல்காம் படு கொலையில் கணவரை, ஆண் உறவினர்களைப் பறிகொடுத்தவர்கள் ஒரு மதத்தின் பெயரால் தாம் அப்படி நடத்தப்பட்டதை எடுத்துரைத் திருக்கிறார்கள். அவர்களைப் பேட்டி கண்டவர்கள், களத்திற்கு சென்று நிலவரம் அறிந்த ஊடகவியலாளர்கள் (இவர்கள் மோடி ஆதரவு ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல) கொலையாளிகளின் இந்த அணுகு முறையை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள். அன்று அந்த இடத்தில் இருந்த உள்ளூர்வாசிகள் இதைக் கூறியிருக்கிறார்கள். ஆனாலும், இங்கேயுள்ள சில அறிவுசாலிக் குழுமங்கள் அப்படியொன்று நடக்கவேயில்லை என்று இங்கிருந்தே எப்படிக் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.
ஊரில், நாட்டில் நடக்கும் கொலை கொள்ளைகளிலெல் லாம் பல்வேறு சாதி, மதம் சார்ந்த மனிதர்கள் ஈடுபடுகிறார்கள். அதற்காக அந்தப் பிரிவுகளைச் சார்ந்த அத்தனை பேரையும் மக்கள் குற்றவாளிகளாக பாவிப்ப தில்லை; குறைத்துப் பேசுவதில்லை. அப்படிச் செய்பவர்கள் (எடுத்துக்காட்டாக, எங்காவது ஒரு பார்ப் பனர் குற்றச் செயலொன்றில் ஈடுபட்டால் உடனே அதை ஒட்டுமொத்த பார்ப்பனகுலத்தின் தலைமீது ஏற்றிவிடுபவர்கள் இங்கே சாதாரண மக்களில்லை; தம்மை மனிதநேயவாதிகளாக, சமூகப்பிரக்ஞையாளர்களாக பிரகடனம் செய்து கொள்ளும் அறிவுசாலிகளே).
இந்த நேரத்தில் அரசியல்வாதிகளான ஒமார் அப்துல்லா, ஒவைஸி போன்றோர் கூட கவனமாகப் பேசுகிறார்கள். பாகிஸ்தானின் தொடர் அத்துமீறலைக் கண்டிக்கி றார்கள். ஆனால், காகிதக் கிளர்ச்சியாளர்களுக்கு அந்தப் பொறுப்புணர்வு கொஞ்சமும் இல்லை. இது வருத்தத்திற்குரியது; கண்டிக்கத்தக்கது.
இன்னும் சிலர் மதரீதியான வெறுப்பை வளர்க்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்ப டுத்திக்கொள்கிறார்கள். மிகவும் வேதனையளிக்கும் விஷயம் இது.
இன்னும் சிலர் போர்நடவடிக்கைகளை romanticize செய்கி றார்கள். வன் முறையை நம் சினிமாக்களும் , சீரியல்க ளும் தொடர்ந்தரீதியில் Heroismஆக வரையறுத்துக் கொண்டேயிருப்பதுபோல். (சமீபகாலமாக ஊரில் நடக்கும் வெட்டு குத்துக்களையும், கோர விபத்துகளை யும் காட்சி ஊடகங்கள் எல்லா நேரமும் காட்டிக்கொண் டேயிருக்கின்றன; இதற்கென்றே தனி ‘க்ரைம் டைம்’ நிகழ்ச்சிகள் பரபரப்பாக, ஏற்ற இறக்க தொனிகளிலான விவரிப்புடன் தினமும் எல்லா செய்தி ஊடகங்களிலும் ஒளிபரப்பப்படுகின்றன. இது நீடிக்கலாகாது; நிறுத்தப்பட வேண் டியது.
வெளிநாடுகளுக்குப் பயணமாகும் படைப்பாளிகள் பலர் இந்தியாவை மதிப்பி றக்கிப் பேசுவதும், இந்துமத நம்பிக்கைகள், நியமங்கள், நெறிமுறைகளை நிந்திப் பதும் வழக்கமாக இருக்கிறது. அதற்கென்றே அயல்நாடுகளில் இயங்கிவரும் அமைப்புகள் சிலவற்றால் அவர்கள் அழைக்கப்படுவதும் நடக்கிறது.
’எம்மைத் தவிர வேறு எந்த படைப்பாளியும் ஊரில் நடக்கும் சாதிக்கொடுமை களுக்குக் குரல் கொடுப்பதில்லை – நிலா, மழை என்று மட்டுமே எழுதிக்கொண்டி ருக்கிறார்கள்’ என்று சக படைப்பாளிகளைச் சாடுபவர்கள் என்றேனும் சாதிக் கலவரப் பகுதிகளுக்குச் சென்று ஆதிக்கசாதி யினரோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட தாகவோ, அல்லது அங்கே நிகழ்ந்த சாதிக்கொடுமைக்கு எதிராக போராட்டம் நடத்தியதாகவோ, அல்லது, சட்டம்-ஒழுங்குக்கு நேரடி பொறுப்பான மாநில அரசிற்கு எதிராக போர்க்குரல் எழுப்பியதாகவோ தெரியவில்லை.
போர் வேண்டாம் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. அதேபோல்தான், நிஜமான போர்ச்சூழல் நில வும் இந்நேரத்தில் இந்த மேம்போக்கு மனிதநேய வாதிகளுக்கும் ‘காகிதக் கிளர்ச்சியாளர்களுக்கும் காரியார்த்தக் கலகக்காரர்க ளுக்கும்’ இடமளிக்கலாகாது.
*
- மக்களே!
- எழுத்தாளர் குரு அரவிந்தனின் சிறுகதைகள் பற்றிய ஓர் ஆய்வு
- குரு அரவிந்தனின் சிறுகதைகள் பன்முகப்பார்வை
- இரு கவிதைகள் – 1) வாழ்வின் விரிபரப்பு 2) தன்வரலாற்றுப்புனைவு
- நிலவும் போர்ச்சூழலும், நிரந்தர மேம்போக்கு மனித நேயவாதிகளும்
- இரு கவிதைகள்
- நிலவும் போர்ச்சூழலும் தமிழக அரசின் பேரணியும்