பா.சத்தியமோகன்
நனைகிறேன் பரவசமாய்
காதுமடல்,கண் இமை, சட்டை
எல்லாமாக நனைகிறேன்
தெரிந்தவர் எவரேனும் எதிர்பட்டு
“ஏன் சார் நனையறீங்க?” எனக் கேட்பதற்குள்
முழுதுமாய் சொட்டச் சொட்ட
நீள தார்ச்சாலையில் ஆசையாய் நனைந்தபடி
ஓடும் போக்குவரத்து பஸ் டயர்கள்
வாரி வீசும் சாலை மழை நீர்
பக்கவீட்டில் வீசும்போது
கடந்துவிட வேண்டும்
தற்செயல் போல் நனைந்துகொள்ளவும் வேண்டும்!
இந்த மகிழ்ச்சியெல்லாம் மனக்குதிப்பெல்லாம்
அங்கங்களில் காட்டி
ஆறு வயதில்
அப்பாவிடம் அடி வாங்கிய சுகம்
உள் நெஞ்சில் வசிக்க
தற்சமயம் மறைக்கிறேன் தந்திரமாய் கண்படாமல்
குழந்தையாயிருக்க சமூகத்தில் அனுமதியில்லையே
“தாத்தா சேற்று தண்ணீல நனையறார் பார்!” என்பார்கள்.
***
- மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் – 3
- வண்டி
- காடன் கண்டது – பிரமிள் – சிறுகதை குறித்த கலந்துரையாடல்
- குளிர்வித்தால் குளிர்கின்றேன்
- பூஜ்யக் கனவுகள்
- அசோகமித்திரனின் “ஒற்றன்”
- அப்பாவின் திண்ணை
- சொல்லவேண்டிய சில…..மூத்த குடிமக்களும் சமூகமும்
- யாசகப்பொழுதில் துளிர்த்து
- நடக்காததன் மெய்
- அருகில் வரும் வாழ்க்கை
- கவிதைகள்
- மகிழ்ச்சி மறைப்பு வயது
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 10
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 11
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 12