வணக்கம்,
யாவரும் நலமா?
இவ்வாரம் (வெள்ளிக்கிழமை – 03/10/2025) இரவு லண்டன் நேரம் 8.15 மணிக்கு(இரவு பிரதான செய்திகளுக்குப் பிறகு)(தமிழக நேரம்:அதிகாலை:1.46 மணி) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் (www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் இதழ் 353 வானொலி சஞ்சிகை நிகழ்வு ஒலிபரப்பாகும்.
நிகழ்வில்,
கவிஞர்.டீன் கபூர்(இலங்கை) (கவிதை:வெற்றுக் கதிரைகளின் நிழல்),
கவிஞர். ஐ.தர்மசிங்(நாகர்கோயில்)(கவிதை:புதிய முகம்),
எழுத்தாளர்.கே.பாலமுருகன்(மலேசியா)(கதை:கால்கள்—நன்றி:கே பாலமுருகன் அகப்பக்கம் ),
எழுத்தளர். கீதா மதிவாணன்.(அவுஸ்திரேலியா),
கவிஞர்.அ.சீனிவாசன்(கவிதை:களையும் பூக்கின்றது..),
எழுத்தாளர்.சங்கர சுப்பிரமணியன்(மெல்பேர்ன்),
எழுத்தாளர்.லோகேஸ் ரகுராமன்(மங்களூர்.இந்தியா)(கதை:நான் பூக்களில் இருந்து…),
கவிஞர்.சேஹு மொஹம்மது பெனாஸிரா (முஸ்லிம் ஹல்மில்லாவ- மதவாச்சி) (கவிதை:அழகிய தமிழ்மொழி)
ஆகியோரது படைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இது ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பாகும் நிகழ்வு.
படைப்பாளர்களுக்கு எமது நன்றி.
தொடர்ந்துவரும் இலக்கியப்பூக்களுக்காக படைப்புகளை(குரலில் ஒலிப்பதிவுசெய்து)அனுப்புங்கள்.படைப்புக்கள் தெளிவான பதிவாக இருத்தல் அவசியம்.
கவிதை,உருவகம்,சிறுகதை,நூல் வாசிப்பனுபவம்…என படைப்புக்கள் அமையலாம்.
நட்புடன்,
முல்லைஅமுதன்
இலக்கியன்(தொழில்நுட்பம்)
அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலி
https://onlineradiofm.in/stations/ilc-tamililcjamil
Posted inகடிதங்கள் அறிவிப்புகள்