ரவி அல்லது
நம்பிக்கைகளைச்
சுருள விடும்
பசி
சிவப்பு விளக்கின்
சகாயத்தில்
திரைக் கண்ணாடிகள்
திறக்க ஏங்குகிறது
பரிதவித்து.
முண்டி வெளிவரும்
கருணையைப் பற்ற
எரிந்து விடும்
பச்சை விளக்கை
நிறுத்த
யாதொரு
உபாயமில்லை
ஏக்கத்தைத் தவிர.
இனிவரும்
புண்ணியவான்கள்
குளுமைப்படுத்தலாம்
தற்காலிக
விடுதலையாக
காசு, பணங்களை
அவைகளின்
ஆசுவாசத்திற்கு.
சகாய நேரத்திற்குள்
கையளித்துவிடும்
கருணை
நம்பிக்கையை
உயிர்ப்பிக்கிறது
பசியை வென்று
எரிதணலில் குளிர்ந்து.
***
-ரவி அல்லது.
ravialladhu@gmail.com