ஜஸ்விந்தர் ஸீரத்
மொழிபெயர்ப்பு : வசந்ததீபன்
______
(1)
நான் உன்னை நதி என்று எழுதுகிறேன்
நீ தண்ணீர் என்று எழுதி
ஓட விடு வடக்கை நோக்கி.
பார்… எங்கு வரை ஓடுகிறேன்
எங்கே மூழ்குகிறது நட்சத்திரம் என்னுள்.
நூற்றாண்டு முழுவதும் போதும்
மூழ்க விடாதே மலைகளை
என் பிரதிபிம்பத்தில்
நான் உனக்கு வர்ணம் தருவேன்
மஞ்சள் நீலம் ஆரஞ்சு சிவப்பு மற்றும் பின்னர் கருமை.
நீ உடைப்பது மஞ்சள் புல்லின் துரும்பு
மற்றும் எண்ணுவது மீன் காயங்கள்
மற்றும் சொல்வது எத்தனை கேலன் கண்ணீர்
நதியின் நெஞ்சுள் அடங்கிப் போனது
(2)
நதி மரணத்தின் பக்கம் முன்னோக்கி செல்கிறது
நிரம்பியிருக்கிறது பூமி பேராசையால்.
அவள் திரும்புகிறாள்
ஒரு கர்ஜனையில் எவ்வளவு சின்ன _ சின்ன
மாயாஜாலங்களால் கிளர்ச்சியுண்டாகி இருக்கிறது.
அது முதலிலும்
பல உடல்களில் இறந்து இருக்கிறது
சூரியனின் ஆசைகள்
மற்றும் நீர்ப்பறவைகளின் களைப்புக்காக.
நதி மரணத்தின் பக்கம் முன்னோக்கி செல்கிறது
பாய்ந்து கொண்டிருக்கிறது
மெதுவாக _ மெதுவாக
உறைந்து போகும்
தனது நியதிக்கு எதிராக
சற்று நேரம் நின்று போகும்
மெதுவாக _ மெதுவாக
ஊடுருவிப் பாயும் சிவப்பு நிற கற்களில்.
அது துக்கத்தில் இருக்கிறது
ஒருவேளை அதே சமயம்
வெகு தொலைவில் நீந்துகிற மீன்களின் நிறம் மாறிக் கொண்டிருக்கிறது.
(3)
நதி மரணத்தின் பக்கம் முன்னோக்கி செல்கிறது
நான் நாவல் பழ நிறத்துள் அமிழ்த்தப்படுகிறேன்
எனது கட்டைவிரலின் நுனி பாகம்
முறைத்துப் பார்க்கிறது எனது மொழியை
உயிரை எடுப்பது போல விரும்புகிறது
என்னுடைய நெஞ்சினுடைய ரகசியங்கள்.
நான் சொல்லமாட்டேன்
எங்கே வைத்து இருக்கிறேன் நான் தங்கத்தின் மணல்
அதன் மேல்
ஜொலிக்கின்றன
இரண்டு வெள்ளை மீன்கள்.
நீ இந்த எல்லா மாயைகளை உருவாக்கி வைத்திருப்பதை
நான் கேட்க முடிந்திருக்கிறது
ஒரு நேரம் வரை
நதியின் உண்மை.
(4)
நதி மரணத்தின் பக்கம் முன்னோக்கி செல்கிறது
வறண்டு கொண்டிருக்கின்றன
எவ்வளவோ தான் மரங்களின் அடிபாகங்கள்.
தேடுகிறது
கொஞ்சம் போல மங்கலான வெளிச்சம்
சாலையின் மீது பரவிக் கிடக்கும் இலைகளின் நிறம் மாறிக் கொண்டிருக்கவில்லை
ஒருவேளை சிருஷ்டி
வலியில் இருக்கிறது.
தண்ணீருக்கு சூடு ஏற்பட்டிருக்கிறது
முழுவதும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன கரைகள்
மரணம் எழுந்து கொண்டிருக்கிறது
மனம் சமுத்ரம் போல
ஓடுகிறது
தின்று கொண்டிருக்கிறது நதியின் ஏகாந்தம்.
(5)
நதி மரணத்தின் பக்கம் முன்னோக்கி செல்கிறது
பார்க்கிறது போவதற்கு முன்பு
வெயிலில் வழுக்கிற இரவை.
பார்வை வருகிறது அதற்கு
எல்லா முகங்கள் ஒன்று போல
தெளிவில்லாத மனம் தளர்ந்து
களைப்பு _ களைப்பாக மரங்களின்
இலையுதிர் காலத்தைப் போல
அவற்றின் எல்லா இலைகள்
உதிர்ந்து போயிருக்கின்றன.
மற்றும் இப்போதும் எந்தக் காட்சியும்
தழுவிக் கொள்ளாது அவைகளை
முழு காடு ஏதோ திருப்தியடையாத காதலி போல
மெளனத்தை குறிச் சொல்லாக்குகிறது
போய் அமரும் தன்னுடைய கர்ப்பத்தில்.
எங்கே மொழிக்கும் கனவிற்கும் இடையே
பட்டாம்பூச்சிகள் நீந்தி இருந்தன
சிக்கிப் போகும்
உன்னுடைய கைகளின் தொடுதலில்.
மற்றும் நதி தன்னுடைய தேகத்தில் தான்
கழிந்து போகும்
நிசப்தம்
மூழ்கிப் போன சூரியனுக்கு.
(6)
நதி மரணத்தின் பக்கம் முன்னோக்கி செல்கிறது
அதிகத் தூசு கிளம்புவதால் ஏற்படும் இருட்டால் சூழப்பட்டுள்ளதை
பார்த்து இருக்கிறது வயதான சந்திரனின் பக்கம்.
எழுந்து பறந்து கொண்டிருக்கின்றன மின்மினிப் பூச்சிகள் அதனுடைய நெஞ்சின் மேல்
என்னால் தூங்கிக் கொண்டிருக்க முடியவில்லை
அவை பறக்கிறதோ துன்பக்குரலாக இருக்கிறது
எனது முதுகுத்தண்டில்.
நான் உடைகிற வருத்தத்தின் சாட்சியாகிக் கொண்டிருக்கிறேன்
பிணைப்பை பெற்றுக் கொண்டிருக்க முடியவில்லை
காலம் மற்றும் விண்வெளியில் தன்னை
நீந்திக் கொண்டிருக்கின்றன படகுகள்
மறையும் சூரியனை நோக்கி.
போ… தேடு இருட்டின் வெளிச்சத்தில்
பாறையை
நதி மறைவதாய் இருக்கிறது.
(7)
நதி மரணத்தின் பக்கம் முன்னோக்கி செல்கிறது
நான் அறிகிறேன்
அது ஏமாந்து கொண்டிருக்கிறது.
மெளனத்தால்
அன்பால்
பிறகும் அது கனவு காண்கிறது
தினம் மழையில் பாய்கிறது படகானது.
நான் எறிந்து இருந்த போது
பிரம்மபுத்திராவில் காசையோ அறிந்திருந்ததில்லை
என்ன பெற்று இருக்கிறேன்
நிற்க தொலைவு வரை பரவி இருந்தது பார்வை
பார்த்து இருந்து அதை.
உள்ளங்கையில் மூடப்பட்ட காசு உருகுகிறது
மற்றும் எவ்வளவு இரும்புத் துகள்கள்
அலையத் தொடங்குகின்றன என்னுடைய ரத்தத்தில்.
மிதந்திருந்தன எத்தனை உடல்கள்
என்னுடைய வடிவத்தில் தான்
நீ வஞ்சனை செய்து கொண்டிருந்தது
உன்னுடையது மட்டும்.
என்னுடைய
வெற்று நாகரீகத்தில் ஒலித்துக் கொண்டு மவுனம்
எரிந்து கொண்டிருக்கிறது காய்ந்த புல்
மறைந்து கொண்டிருக்கிறது நதி தன்னுடைய வெப்பத்தில்.

பஞ்சாபியில் : ஜஸ்விந்தர் ஸீரத்
ஹிந்தியில் : ருஷ்தம்
தமிழில் : வசந்ததீபன்

ஜஸ்விந்தர் ஸீரத்
____________________
அமிர்தசரஸ் நகரில் வாழ்கிறார். ” அடுப்புக்கரி ” ( 20 16 ) என்ற கவிதை நூல் வெளியாகியுள்ளது . மற்றொன்று விரைவில் வெளியாக உள்ளது. இக்கவிதைகள் புதிய கவிதைகள்.