– பா.சத்தியமோகன்
மழைத்தூறலின் தெளிப்பை
முகமெல்லாம் புள்ளியிட்ட மூவயது மகளின் முகத்தில்
வடியும் நீர்த்துளிகளோடு
கொண்டு சென்றுவிடலாம்
டூவிலர் சாலையில்
பாய்ந்து முன்னேறும் போக்குவரத்து நெரிசலில்
முதுகுப்புறம் கடக்கும்
அந்தி மழை வானவில்லை
வீட்டுக்குள் எப்படி கொணர்வது?
***