Articles Posted by the Author:

 • கனவில் வருகிறது !

  ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   மீண்டும் மீண்டும் கொட்டிக் கொட்டி அளந்ததில் துயரங்களின் கொள்ளளவு கூடித்தான் இருக்கிறது   எல்லா நிஜங்களும் தம் நிழல்களை என்னிடம் தந்துவிட்டுப் போனது எப்படி ?    கண்முன் தெரியும் பசுமைக் கணநேரத்தில் நிறம் மாறிப் போகிறது   என்முன்  அணிவகுத்து நிற்கும் கேள்விகள் ஏதோ ஒரு பதிலை என்னிடம் யாசிக்கின்றன   மௌனத்தைப் பதிலாக்கியதில் காலத்தின் இரைச்சல் கூடிக்கொண்டே போகிறது   மணற்பிரதேசம் மறைந்து நீர் சுழித்தோடும்  ஆறொன்று அடிக்கடி என் […]


 • அந்தப் பார்வையின் அர்த்தம் !

  அந்தப் பார்வையின் அர்த்தம் !

  ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   நடைப்பயிற்சியின் போது அவன் இடது கையில் இருந்த அரைக்கீரை கட்டைப் பார்த்தது அந்தக் கருப்பு வெள்ளை ஆடு   அதன் பக்கத்தில் நின்று கொண்டிருந்தது கருப்பு வெள்ளைக்குட்டி   அம்மா ஆட்டின் கண்களில் யாசித்தல் ததும்பி நின்றது   ஒரு கணம் யோசித்த அவன் நொடிப் பொழுதில் கீரைக்கட்டின் நாரை  அவிழ்த்து உதற அவை தின்னத் தொடங்கின   அவன் நாளை கீரை உண்டால் என்ன ?          […]


 • கதவு திறந்திருந்தும் …

  கதவு திறந்திருந்தும் …

      ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   கதவு திறந்திருந்தும் அவன் இன்னும் உள்ளே போகவில்லை   பயணிக்கிறோம் என்ற நம்பிக்கையில் அவன் அதே புள்ளியில் நிற்கிறான்   இலக்கிய தாகத்தில் அவன் சில வடிவங்களில் தன்னை நிரப்பிப் பார்த்தான் எங்கும் நிலைக்க முடியவில்லை   அவன் மனத்தில்  சில எழுத்துகள் இருக்கின்றன அவை சொற்களாவதில்லை    சில சொற்கள் இருக்கின்றன அவை வாக்கியங்களாவதில்லை   சில வாக்கியங்கள் இருந்தும் அவை கவிதையாவதில்லை   அவன் கோப்பையில் நிரம்பி […]


 • மாயவரம் பாட்டி

  மாயவரம் பாட்டி

                          ஸ்ரீரங்கம் சௌரிராஜன்    அந்தப் பாட்டியின் மனக்காயங்கள் இப்போது ரணமாகிவிட்டன   புலம்பல்களில்  தத்தளித்துக் கொண்டிருக்க ஆறுதல் திசை தேடி அலைகிறது   ” ரெண்டு காலும் போச்சு … ரெண்டு கையும் போச்சு … ரெண்டு கண்ணும் போச்சு … ”  என்ற ஆதங்கம் பேரன் ரவி திலகனுக்கு பெரிய காமெடி ஆகிவிட்டது   பாட்டியைப் போல் பேசி […]


 • வெற்றுக் காகிதம் !

  வெற்றுக் காகிதம் !

      ஸ்ரீரங்கம் சௌரிராஜன்    வெற்றுக் காகிதம் மௌனமாக  இருப்பதாகவே தோன்றும்    ஆனால் அது மனிதனை எழுத்து வடிவத்தில் மகிழ்விக்கவோ துன்பம் தரவோ காத்திருக்கிறது    ஒரு வெற்றுக் காகிதம் வேலைக்கான உத்தரவாக மாறி ஓர் இளைஞனைத் துள்ளித் குதிக்க வைக்கும்   ஒன்று ஒருவனைச்  சிறையில் தள்ளும்   மற்றொன்று   ஓர் ஏழை நோயாளியைப் பதற வைக்கும்   நேற்று படித்த நல்ல கவிதை ஒன்றைத் தாங்கி இருந்ததும் வெற்றுக் காகிதமாக இருந்ததுதானே […]


 •  ஒரு கவிதை எழுத வேண்டும் !

   ஒரு கவிதை எழுத வேண்டும் !

      மனம்  சொல் முளைக்காத  பாழ்நிலமாய் என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறது   எங்கே என் சொற்கள்  என்ற கேள்வி பதில் கிடைக்காமல் தவிக்கிறது   ஒரு கவிதை எழுத வேண்டும் யோசித்துப் பார்க்கிறேன் என்னுள் சொற்கள் கூடுவதும் கலைவதுமாய்க் கணங்கள் நழுவுகின்றன   மனம் பழைய பக்கங்களைப் புரட்டுகையில்  எல்லாம் மங்கி மறைகின்றன   அறுவடைக்குப் பின்னான வயல் ஒன்று முட்கள் முளைத்த முகமென என் மனத்தை ஆக்ரமிக்கிறது   ஒரு நீண்ட […]


 • நிரம்பி வழிகிறது !

  நிரம்பி வழிகிறது !

  அவன் மனம் முழுவதும்  பணத்தாட்கள்  முளைத்துக் கிடக்கின்றன தன்னை  ஒரு கஜானாவாக எண்ணியெண்ணி அவன் மகிழ்கிறான் பணத்தேடலில் அவன் கோரமுகம் பரிதாபமாய்ச் சிரிக்கிறது தலை சீவி முயலும் போது கொம்புகள் தடுக்கின்றன கற்ற கல்வியோ அவனிடமிருந்து விலகியே நிற்கிறது  பிறர் உழைப்பின் பயன் அவனும் நிரம்பி வழிகிறது …


 • பக்கத்து வீட்டுப் பூனை !

  பக்கத்து வீட்டுப் பூனை !

        பக்கத்து வீட்டு வெள்ளை நிறக் கொழு கொழு பூனை நேற்று இரவில்கூட குழந்தைக் குரலில் ” ஆவு … ஆவு … “என அழுத்து அதன் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் சொல்ல அம்மா விரல்கள் இல்லை அழுகையின் பின்னணியில் பசியா ? வருத்தமா ? தன் துணையை அழைக்கும் உத்தியா ? மர்மத்தில் மயங்கி நிற்கிறது உண்மை அழுகையில் முட்களின் வருடல்கள் தொடர்கின்றன அந்த ஒற்றைக் குரல் அடிக்கடி மௌனம் கிழிக்கிறது ! […]


 • காலம் மகிழ்கிறது !

  காலம் மகிழ்கிறது !

                              அந்த இடைவெளியின் இக்கரையிலும் அக்கரையிலும் ஆசைகள் குவியல் குவியலாய் … அந்த ஆசைகளின் சஞ்சாரம் மனவெளியில்  நிரந்தரமாகக் கால்பாவ இயலாமல் துவண்டு விழுகிறது ஆயிரமாயிரம் மனமாளிகைகள் கட்டப்படும் போதே இடிந்து விழுகின்றன ஒவ்வொரு மலரிலும் அவள் முகத்தைப் பொருத்திப் பார்த்து புளகாங்கிதம் அடைகிறான் அவன்  எல்லா பாடல்களிலும் சோகராகம் இழைவதைக் கேட்கிறாள் அவள்  —- அவர்கள் பாதையில் […]


 • திருநீலகண்டர்

  திருநீலகண்டர்

  அவன் உணவு மேஜையில் அவனுக்கென்று தயாரிக்கப்பட்ட விஷ உணவை அவன் அடிக்கடி உண்டு தீர்க்கிறான் அவனைச் சிறைப்படுத்தும் பிரச்சனைகள் பின்னர் அவன் காலடியில் மிதிபடுகின்றன வெட்டப்பட்ட சிறகுகள் அவனுக்கு மட்டும் மீண்டும் வளர்ந்துவிடுகின்றன அவ்வப்போது  துயரங்களை உள்வாங்கி அவன் சீரழித்து வாழ்கிறான் கிட்டாதனவற்றின் பட்டியலை அவன் உதறிவிட்டு நடக்கிறான் —- இதோ இன்னும்கூட  விஷ உணவுகள் அவன் மேஜையில் காத்துக் கொண்டிருக்கின்றன.