விடை தெரியா வினாக்கள்

  விடை தெரியா வினாக்கள்

                                                 -------வளவ. துரையன் இந்த ஆற்றங்கரையில் இருள் வரப்போகும் இச்சூழலில் என் சொற்களால்  ஒரு நிலவை வரைந்து கொண்டிருக்கிறேன் அச்சந்திரனின் கிரணங்கள் வெண்மை பொழியத் தொடங்கிவிட்டன. உறவுகளின் கைவிடுதல்களுக்குப்பின் உள்ளம் எல்லாவற்றையும் குருதி நிறத்திலேயே காண்கிறது. குளுமையான இந்தக் காற்று கூட…

இரு கவிதைகள்

.பசுமையும் பதற்றமும்                    சில துளிகள் மழை பெய்தால் கூட  வந்துவிடுகின்றன  எங்கிருந்தோ தவளைக் குஞ்சுகள். கூட்டமாக அவை  குதித்துத் தாவுகின்றன.  கும்மாளமிடுகின்றன. சிறிய முன்னங்கால்களால்  உடலைத் தாங்கும்  அவற்றின் மகிழ்வுக்கெல்லையில்லை. பழுப்பு நிறப் புள்ளிகளாய்  பாய்ந்து பாய்ந்து செல்லும். வாய்க்கால் மழைநீரில்…
”வினை விளை காலம்”

”வினை விளை காலம்”

                                   வளவ. துரையன் அந்தத் தெருவின் தொடக்கத்திலேயே இருந்த வேப்ப மரத்தின் நிழலில் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தினான் சங்கரன். இதுபோன்ற விசாரணைகளுக்கெல்லாம் நேராகப் பாதிக்கப்பட்டவரின் வீட்டுக்குப் போகக் கூடாது என்பது அவன் பணியில் சேர்ந்தபோது சொல்லப்பட்ட பாலபாடம். வேப்பமர நிழல் சற்றுப்…

 வாழ்வு

                                                                                     வளவ. துரையன்                                மீண்டும் மீண்டும்                                 கூடு கட்ட நல்ல                                 குச்சிகள் தேடும் காகம்                                எத்தனை பேர் வந்தாலும்                                 ஏறச்சொல்லி                                 முன்னாலழைக்கும்                                 நகரப் பேருந்து                                கொடுத்ததைப் பாதுகாத்து                                 அப்படியே அளிக்கும்                                 குளிர்சாதனப் பெட்டி                                குழல்விளக்கினைக்                                 கருப்பாக்க நினைக்கும்                                 கரப்பான பூச்சிகள்                                பெட்டியைத்…
கானல் நீர்

கானல் நீர்

                                 .                                                       வளவ. துரையன்                          மாரியம்மன் கோயில்                          வாசலில் வானம் தொட்டு                           வளர்ந்திருந்த வேப்ப மரங்கள்                          தான் பூத்த மகிழ்ச்சியைத்                           தலையாட்டிக் காட்டி வரவேற்கும்                           கரும்புச் சோலைகள்                           மேதிகள் கூட்டம்                           குளித்துக் கலக்குகின்ற                           குளம் போன்ற குட்டைகள்                          கதிரவனை மறைத்து மறைத்துக்                          கண்ணாமூச்சி…
கவிதைகள்

கவிதைகள்

எனக்கில்லை                                                                       மத்திய சிறைக்குள்ளே                              நுழைவதென்றாலே                              மனத்தில் ஓர் அச்சம்தான்.                              மாறாத ஒரு நடுக்கம்தான்.                              நான்கைந்து தடுப்பு                              வாசல்களிலும்                              நல்லமுறைச் சோதனைகள்.                              கோரிக்கைகளை வென்றெடுக்க                              ஆசிரியர் போராட்டத்தில்                             …
சாம்பல்

சாம்பல்

வளவ. துரையன் வீடு முழுவதும் உன்பெருஞ்சினத்தைஇறைத்து வைத்திருக்கிறாய்அதன் வெப்பம்வீதியெலாம் கனக்கிறதுஎப்பொழுது அதுஅணையுமென்று சிலபுறாக்கள் காத்திருக்கின்றனவிதையே இல்லாமல்பெரிய மரமாக வந்துநிற்கும் மாயம்உன்னிடம் உள்ளதுஎந்த அறைக்குள்நுழைந்தாலும் உன்வெப்ப வாசனைதான்நாசியைக் கருக்குகிறதுஅணைப்பதற்குஅறுசுவை நீர் தேடிஅலைவதே என்வாழ்வின் பெரும்பயணம்எந்த எரிமலையும்தணிந்துதான் தீரவேண்டும்சாம்பல் எப்போது வரும்?

போலி சிரிக்கிறது 

வளவ. துரையன்                     அரியாசனம் யாரும்                     அமைத்துத் தராததால்                     அரற்றுகிறது அசல்                     போலிகள் தம்                     பொக்கை வாயால்                     சிரித்துக் கொண்டிருக்கின்றன.                     போலிகள் எப்படியும்                     பொய் எனும் ஆயுதம்                     கொண்டு வெற்றி…

எல்லாமே ஒன்றுதான்

வளவ. துரையன்                              எங்கள் வீட்டு                             நாய்க்குட்டி                             சேற்றில் புரண்டு                             வந்தது.                             அதைக்குளிப்பாட்டினேன்                             எங்கள் வீட்டு                             பூனைக்குட்டி                             அணிலைப் பிடித்துத் தின்று                             வாயில் குருதிக் கறையுடன்                             வந்தது.                                                     …

பாட்டியின் கதை

வளவ. துரையன் பாட்டி எப்பொழுதும்படுத்துத் தூங்கவைக்கும்போதுகதை சொல்வார்.எல்லாக்கதைகளிலிலும்எங்கள் பாட்டி தன்வலைகளை அறுத்துக் கொண்டுவெளியே வருவார்.உளுத்துப் போன உத்தரந்தான்எனினும் இவ்வீட்டைஉறுதியாகத் தாங்குவார்.கதைகளில் சிலநேரம்அவர் உள்ளே சென்றுகாணாமல் போய்விடுவார்.பேய்க்கதைகள் சொல்லும்போதுபேயாக மாறிவிடுவார்,சாமி கதை சொன்னாலோசாமியாட்டம்தான்.கதை முடிந்துவிட்டதுஎன எண்ணுகையில்சற்றுநேரம் பேசாமல் இருப்பார்.திடீரென கதையைமுன்பைவிட வேகமாகத்தொடங்குவார்.ஒரு கதையிலிருதுஇன்னொரு…