பாச்சுடர் வளவ. துரையன் களம் காட்டல் கூழுண்டுக் களித்து வாழ்த்துப் பாடிய பேய்கள், சிவபெருமானுக்கும் உமையம்மைக்கும் தக்கனின் வேள்விக் களத்தை, வீரபத்திரர் போர்க்களத்தைக் காட்டியதைக் கூறும் இது. ===================================================================================== ஒரு மருங்குடைய மூலநாயகியொடு ஒற்றை வெள்ளைவிடை ஊர்தி மேல் இருமருங்கும் மறைதொழ எழுந்தருளி இராசராசபுரி ஈசரே. 778 [ஒரு மருங்கு=ஒரு பக்கம்; மூலநாயகி=ஆதி சக்தி; வெள்ளை விடை=வெள்ளை இடபம்; […]
பாச்சுடர் வளவ. துரையன் எரிகலன் இமைக்கும் கோலத்து இறைமகள் அமுது செய்யப் பரிகலம் பண்டை அண்ட கபாலமாம் பற்ற வாரீர். 751 [எரி=ஒளிவிடும்; கலன்=அணிகலன்; இமைக்கு=விளங்கும்; கோலம்;காட்சி; பரிகலம்=உண்கலம்; பற்ற=எடுத்து] ஒளிவிடும் அணிகலன்கள் திகழத் திருக்கோலம் பூண்ட தேவிக்குக் கூழ் படைக்க உண்கலமாக மிகப் பழைய அண்டகோளமாகிய கபாலமே ஏற்றதாகும். எனவே அதை எடுத்து வருக. ================================================================================== பிரமனைப் பண்டு பெற்ற […]
வளவ. துரையன் அண்மையில் தோழர் கோவி. ஜெயராமன் எழுதி உள்ள நூல் சடையப்ப வள்ளல் [கம்பர் காவலர்] என்பதாகும். இது மிகச்சிறந்த ஆய்வேடாகத் திகழ்கிறது. “இந்த சிறு நூலைப் பொருத்தவரையில் புதிய செய்திகள் பலவற்றை நமக்கு இது அளிக்கிறது “ஆதவன் புதல்வன் முத்தி அறிவனை அளிக்கும் அண்னல்” என்று தொடங்கும் பாடலைச் சான்றாகக் கொண்டு கோவி, செயராமன் கம்பரின் தந்தை பெயர் ஆதித்தன் எனக் […]
வளவ. துரையன் கூழ் அடுதலும் இடுதலும் காளியிடம் பேய்கள் தம் பசித்துன்பத்தைச் சொல்லி அழக் காளி பேய்களுடன் களம் சென்று அவை உணவு பெறச் செய்ததை விளக்கும் பகுதி இது. ===================================================================================== எண்ணுதற் கரிய கூளிபுடை சூழ விடையோன் யாகசாலை புகவான் மிசை எழுந்தருளி எம் கண்ணுதற் கடவுள் வென்றகளம் என்று முடியக் கட்டுரைப்பது எனநின்றிறைவி கண்டருளியே. 728 [விடையோன்=சிவபெருமான்; […]
பாச்சுடர் வளவ. துரையன் பாழி வாய்மதி தன்னைப் பரிப்பதோர் ஆழி ஈரப்பிறை இரண்டாகவே. 688 [பாழி=வட்டம்; மதி=சந்திரன்; பரித்தல்=சுமத்தல்; ஈரப்பிறை=குளிர்நிலா] வட்ட வடிவமான ஒரு விமானத்தில் சந்திரன் வந்தான். பூதகணங்கள் அவ்விமானத்தையே அவன்மீது ஏவ அதுவே அவனை இரண்டாகப் பிளந்தது. ===================================================================================== மாறு கூர் வடகீழ்த்திசை வானவன் ஏறு மார்பம் திறப்ப இறப்பவே. 689 [மாறுகூர்=மாறுபட்ட;வானவன்=ஈசானன்; ஏறு=எருது] வடகிழக்குத் […]
வளவ. துரையன் வளையும் ஆழியும் மருங்கு பற்றியதோர் இந்த்ர நீலகிரி மறிவதொத்து இளைய வாசவன் விசும்பி னின்றும்விழ எரிசினந்திருகி இந்திரனே. 651 [வளை=சங்கு; ஆழி=சக்கரம்; மருங்கு=பக்கம்; மறிவதொத்து=வீழ்வது போல இளைய வாசவன்=இந்திரனுக்குப் பின் பிறந்தவன்; விசும்பு=ஆகாயம்; எரிசினம்=மிகுகோபம்; திருகி=பற்றி] திருமால் மாய்ந்தவுடன் இருபக்கமும் சங்கும், சக்கரமும் தாங்கி திருமாலின் அம்சமாகத் தோன்றிய இந்திரன் தம்பி உபேந்திரன், இந்திர நீலமலை ஆகாயத்திலிருந்து கீழே விழுவது போல விழுந்து இறக்கக்கண்ட […]
பாச்சுடர் வளவ. துரையன் மாண்என் எண்மரும் நான்முகத்தன மூகை சூழ அமைந்ததோர் ஞாண்என் மஞ்சனம் என்கொல் காரணம் நாரணாதிகள் நாசமே. 621 [மாண்=பெருமை; மூகை=கயிறு; ஞாண்=கயிறு; மஞ்சனம்=நீராட்டு; நாசம்=அழிவு] தேரைவிட்டு இறங்கிய வீரபத்திரரை, பெருமை கொண்ட படைத்தலைவர்கள் எட்டுப் பேரும், நால்வகைப் படைகளும் கயிறு போலச் சுற்றி நின்றனர். போருக்குச் செல்வோருக்குத் திருமஞ்சன நீராட்டு செய்வது போல அவரைச் சுற்றிக் […]
பாச்சுடர் வளவ. துரையன் திங்கள் தண்மையின் தேரோன் அவிந்தனன் தங்கள் வெம்மையின் தண்மதி வேவவே. 581 [தேரோன்=மன்மதன்] நெருப்பில் சந்திரன் வெந்து அழிந்தான். அவனுடன் வந்த மன்மதனும் வெம்மையினால் மாண்டான். கால்கொளுத்தும் அச்செந்தீக் கடவுளும் மேல்கொளும் தகர் வீழ்ந்துழி வீழவே. 582 [கால்=காற்று; தகர்=ஆடு] காற்றின் துணையால் விரைவாகப் பற்றி எரிகின்ற நெருப்புக் கடவுளான அக்கினியும் தன் ஆட்டுக்கிடா வாகனத்துடன் வீழ்ந்தழிந்து அழிந்தான். […]
பாச்சுடர் வளவ. துரையன் பொங்கக் களிற்றுஈர் உரிப் போர்வை கொண்டும்புலித்தோல் உடுத்தும் படுத்தும் புயத்தேசிங்கப் பசுந்தோல்கொடு ஏகாசம் இட்டும்செய்யப் பெறா வல்லபம் செய்து சென்றே. 551 [ஈர்=-பசுமை; உரி=தோல்; புயம்=தோள்; ஏகாசம்=மேலாடை; வல்லபம்=வீரம்] பெரிய யானையின் பசுந்தோலை மேலே போர்த்திக் கொண்டும், புலித்தோலை இடையிலே ஆடையாகக் கட்டிக்கொண்டும், கீழே இட்டும், தோள்களில் சிங்கத்தின் பசுந்தோலை மேலாடை போல அணிந்து கொண்டும், ஒரு பூதம் சிவபெருமானைப் போல விளங்கச் செய்ய இயலாதவற்றை எல்லாம் செய்து பார்க்க முயன்றது. சங்கும் […]
பாச்சுடர் வளவ. துரையன் மாகலக்கமூள் வாரணங்கள்முன் பாகலப் பசாசுகள் பரக்கவே. 531 [மா=மிகுந்த; கலக்கம்=துன்பம்; வாரணம்=யானை; பாகலம்=யானைகளுக்கு வரும் நோய்] யானைகளை வருத்திக் கொள்ளும் பாகலம் எனும் நோய்க்கு ஆளானவை போல எதிரிகளின் யானைப் படைகள் மிகவும் துன்பத்திற்கு ஆளாயின. வெள்ளி வாய்மதிக் குடைவிளிந்த ஓர் […]
பின்னூட்டங்கள்