Articles Posted by the Author:

 • தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

  தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                          வளவ. துரையன்                                                    ஏறு களிறெனஏறி எரிவிழி                               ஈசர் பதினோரு தேசரும்                         கூருபடுபிறை ஆறு சுழல்சடை                               யோடு முடுகினர் கூடவே.               251   {ஏறு=காளை; களிறு=யானை; எரிவிழி=நெருப்புடைய கண்; கூறு=துண்டான ஆறு; முடுகுதல்=விரைதல்]   யானைகளில் ஏறி மற்ற தேவர்கள் வந்த்தைப் போலவே உருத்திரர் பதினொருவரும் பிறைச் சந்திரனும், கங்கை ஆறும் கூடிய சுருண்ட சடைமுடியுடன் வந்தனர். பதினொருவர்: மகாதேவன், அரன், உருத்திரன், சங்கரன், நீலலோகிதன்; ஈசானன், […]


 • தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

  தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                                                                                         வளவ. துரையன்                      என்று பேய்அடைய நின்று பூசல்இட                         இங்கு நின்று படைபோனபேய்                   ஒன்று பேருவகை சென்று கூறுகஎன                         ஓடி மோடி கழல் சுடியே.               241   [பூசல்=ஆரவாரம்; பேருவகை=மகிழ்வு; மோடி=துர்க்கை; கழல்=திருவடி; சூடி=அணிந்து]   இப்படிப் பேய்கள் எல்லாம் சேர்ந்துத் தங்கள் பசித்துயர் பற்றி ஆரவாரக் கூச்சல் இட, வீரபத்திரர் படையுடன்  சென்ற […]


 • தக்கயாகப்பரணி [தொடர்ச்சி]

  தக்கயாகப்பரணி [தொடர்ச்சி]

                                                                                வளவ. துரையன்                      சூரொடும் பொர வஞ்சி சூடிய                         பிள்ளையார் படைதொட்ட நாள்                   ஈருடம்பு மிசைந்துஉதி                         ரப்பரப்பும் இறைத்தனம்.                            231   [பொர=போரிட; வஞ்சி=வெற்றி; படை=வேல்; தொட்ட=எடுத்த; இறைத்தனம்=அள்ளிக் குடித்தல்] சூரபதுமனுடன் போரிட்டு வெற்றி மாலை சூடிய தங்கள் பிள்ளை முருகப் பெருமான் வேல் விட்ட அந்த நாளில். அச்சூரன் உடல் இருகூறாகப் […]


 • வடக்கிருந்த காதல் – இரண்டாம் பாகம்

  வடக்கிருந்த காதல் – இரண்டாம் பாகம்

  அழகர்சாமி சக்திவேல்   வடக்கிருந்த காதல் சிறுகதை – அழகர்சாமி சக்திவேல் –    ஆயர் டேனியல் – திண்டுக்கல்.   சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்; ஆதி திரி யேக நாதனுக்குச் சுபமங்களம். பாரேறு நீதனுக்கு, பரம பொற் பாதனுக்கு, நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு.   சுருட்டி ராகத்தில்,  ஆதி தாளத்தில் அமைந்து இருந்த அந்த இனிமையான பாடலை,  தேவாலயத்திற்குள்,  அந்தப் பகல் வேளையில்,  நிறையப் பேர், கோரஸாகப் பாடிக்கொண்டிருப்பதை,  வீட்டிற்குள் இருந்த, என்னால், […]


 • தக்கயாகப் பரணி [ தொடர்ச்சி]

  தக்கயாகப் பரணி [ தொடர்ச்சி]

  வளவ துரையன்                                          பேய் முறைப்பாடு              =================================================   இந்தப் பகுதியில் தேவியின் முன் பேய்கள் சென்று தத்தம் குறைகளை முறையிடுகின்றன.                   என்று இறைவி நாமகட்குத் திருவுள்ளம்                         செய்யக் கேட்டிருந்த பேயில்                   ஒன்று இறையும் கூசாதே, உறுபசிநோய்                         விண்ணப்பம் செய்ய லுற்றே.                      222   [இறையும்=ஒரு சிறிதும்; கூசாதே=வெட்கப்படாமல்; உறுபசி-பெரும்பசி; விண்ணப்பம்=வேண்டுகோள்]   இறைவி நாமகளிடம் சொன்னதைக் கேட்டிருந்த பேய்களில் […]


 • வெறியாடல்

  வெறியாடல்

                                                       வெறி என்னும் சொல்லுக்குத் தற்கால அகராதிகள் பெரும்பாலும் ஆவேசம் என்று பொருள் கூறுகின்றன. லிப்கோ அகராதி வெறி என்ற சொல்லுக்கு முருகன் பூசை என்று கூட இன்னும் ஒரு பொருளையும் காட்டுகிறது. பழங்காலத்தில் வெறி என்பதற்கு மணம் என்னும் பொருளை வழங்கி வந்தனர். ’வெறிகமழ் பொழில்’ ‘வெறிமலர்’ என்றெல்லாம் பழைய செய்யுள்களில் காண முடிகிறது. ஒரு குறியையே  நோக்கிச் செல்லும் உறுதியான மனப்போக்கும் அதையே நினைத்துக் கொண்டிருப்பதால் தன் இயல்பு மாறுதலும் வெறி எனப்படும். […]


 • தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                       என்னும் சமண்மூகரும் நான்மறையோர்               ஏறும், தமிழ்நாடனும், ரகுமரபில்           பொன்னும் பெருநம்பி குலச்சிறையும்                 போய் வைகையின் வாதுகளம்புகவே.          211 [மூகர்=வறியர்; நான்மறை=நான்கு வேதங்கள்; ஏறு=காளை; ரகு=சூரியன்; மரபு=குலம்; வாது=போட்டி; களம்=இடம்] என்று சூளுரைத்த சமணர்களும், நான்கு வேதங்கள் கற்ற ஆண்சிங்கம் ஞானசம்பந்தரும், தமிழ்நாடனாகிய மதுரைப் பாண்டியனும், சூரியகுலத் திலகமான குலச்சிறையாரும் வைகை ஆற்றின் கரையில் வாதுபோர் நடக்கும் இடத்திற்குப் போய்ச் சேர்ந்தனர்.             கனலில்புகும் ஏடுஇறை கண்ணில் மதன்                 […]


 • பல்லுயிர் ஓம்பல்

  பல்லுயிர் ஓம்பல்

  வறுமையில் இருக்கும் என்வயிற்றைக் காலியாக்குகிறேன். குதிரை கனைப்பு தளர்கிறது. வயிறு காலியானால் வாய் எல்லாம் வேள்வி செய்யும் ஒரு குவளை மதுகொண்டு நிரப்பிப்பார் தென்றலில் மயங்காமல் தேடித்தேடிக் கொண்டுவா. பல்லுயிர் ஓம்பப்பழகு. யானையின் துதிக்கையில் தானமாகும் தானியங்கள்        களிறுகள் எப்போதும்        அசைந்து அசைந்து        வயிற்றை நிரப்பிக்கொண்டிருக்கும். அப்பொழுதும் அவற்றின் கவனம் அங்குசத்தின்மீதே இருக்கும். எல்லாமே தேடிப்பார்த்தால் வயிற்றை நிரப்புவதே வாய்ப்பான தொழில்


 • கோடுகள்

  கோடுகள்

  அந்தக் கவிஞன் கோடுகளை முக்கியமாக நினக்கிறான். அவன் இணைகோடுகள் என எண்ணிக் கரம் கோர்த்தவை குறுக்கு வெட்டுக் கோடுகளாய் மாறியது அவனுக்கு ஒரு சோகம். மணமக்களை இணைகோடுகளாய் என்று வாழ்த்துவது என்றுமே சேர முடியாதவர்கள் என்றுதான் பொருள்படும். அப்படி வாழ்த்தப்பட்டவர்கள் இன்று வழக்கு மன்றப்படியில் நிற்கிறார்கள். தண்டவாளங்களும் மேலே தொங்கும்  மின்சாரக் கம்பிகளும்தான் ஆசிரியர் இணைகோடுகள் என்று சொல்லித் தந்தார் இரண்டுமே ஆபத்தானவை. குறுக்கு வெட்டுக்கோடுகளும் வாழ்வில் முக்கியமானவை. அனுபவம் கற்றுத் தருபவை கண்டிப்புகளும் சங்கடங்களும் அனுபவம்தானே […]


 • நடை

  மருத்துவர் அவனைக் காலையில் நடக்கச் சொல்லி விட்டார் நோயில்லை தற்காப்புதான் நடக்கும்போதும் சிந்திக்க வேண்டும் என்பது அவன் எண்ணம் அப்போது புதிய கருத்துகளும் கவிதைகளும் தோன்றும் ஆனால் சரியாக நடக்க வேண்டும் நாம் சரியாக நடந்தாலும் வாகனங்கள் மீது கவனம் தேவை. காலைநடையில்தானே இப்போதெல்லாம் வெட்டுகிறார்கள் வலப்புறம் நடப்பதுதான் சிறந்தது என்பார் ஒரு சிலர் நடை என்றால் ஒழுக்கம் என்று பொருள் கூறுவர். இங்கும் பிறரின் நடைகளே நம் நடையை வழி நடத்துகின்றன பொற்கொல்லன் வருவதை ‘விலங்கு […]