திண்ணை இணைய இதழை நான் சமீபமாகத்தான் படிக்க ஆரம்பித்தேன். சில இதழ்களில் எழுதியும் இருக்கிறேன். சமீபத்திய இதழ்களில் வெளிவரும் பின்னூட்டங்களை பார்க்கும்போது ஆச்சர்யமாகவும் அவஸ்தையாகவும் இருக்கிறது. முன் பின் தெரியாத, ஒரே ஒரு கருத்தின் மூலமாக அறிமுகமான ஒருவரின் மீது இவ்வளவு பகையுணர்ச்சி பாராட்ட முடியும் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது (சிலரின் உண்மையான பெயர்கள் கூட தெரியவில்லை, சிலர் பல பெயர்களில் பின்னூட்டம் இடுகிறார்கள்.) அந்த முகம் தெரியாத மாற்றுக்கருத்தை கொண்ட மனிதர் மனித நேயம் மிக்க நல்ல மனிதராக கூட இருக்கலாம் என்பதை மறந்து விடுகிறார்கள். சில பின்னூட்டத்தின் தொடர்ச்சியான பின்னூட்டங்களில் உனக்கு தமிழே சரியாக எழுதவரவில்லை, நீ முதலில் அதை மாற்றிக்கொள் என்றெல்லாம் இடுகிறார்கள். அந்த முகம் தெரியாத, தமிழ் சரியாக எழுத வராத மனிதர் சமூக அக்கறை உள்ள நல்ல மனிதராக இருக்கலாம் அல்லவா? தமிழ் எழுத வரவில்லை என்பது என்ன மன்னிக்க முடியாத குற்றமா? மானுடம் வெல்வதற்கு உதவாத எது ஒன்றாலும் ஒரு பயனும் இல்லை. ஒருவர் மாற்றுக்கருத்தை கொண்டிருக்கிறார் என்பதற்காக இவ்வளவு துவேசமா?
எனக்கு தெரிந்த ஒரு கண்டக்டர் இருக்கிறார். ஒன்றும் பெரிதாக படிக்கவில்லை. தமிழ் இலக்கியம், திராவிட வரலாறு எல்லாம் தெரியாது. அவர் செய்யும் ஒரே நல்ல காரியம், மாதம் ஒரு முறை 30 சிறுவர்களுக்கு ஒரு பென்சிலும் ஒரு ரப்பரும் தருகிறார். (இதற்கும் கூட, ஒருத்தர் ஏழை சிறுவர்களுக்கு தருகிறாரா? இது எல்லாம் ஒரு சேவையா? என்றும் பின்னூட்டம் இடலாம்) என்னை பொறுத்து அந்த கண்டக்டர் நல்லவர். அதேபோல் அந்த மாற்றுக்கருத்தை கொண்ட மனிதர் இது போன்றவராக இருக்கலாம் அல்லவா? உலகத்திலேயே மிகப்பெரிய சுதந்திரம் என்பது என்னவென்றால் எதிரியே என்றாலும் அவருடைய கருத்தை சொல்ல அனுமதிப்பதும் அதை மதிப்பதும் தானே. எந்த விவாதமும் சொல்லப்பட்ட கருத்தை மேலும் ஆழமாக்க உதவவேண்டும் என்பது தானே விவாத்த்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.
மேலாண்மை தத்துவத்தில் “Win-Win Situation” என்கிற ஒரு நிலையை சொல்கிறார்கள். பெரும்பாலான திண்ணை விவாதங்களில் இந்த நிலையை பார்க்க முடிகிறது. விவாதிப்பவர் எப்படியாவது வெற்றி அடைய முயற்சிக்கிறார். எந்த ஒரு விவாதத்தின் முடிவாகவும் விவாதிக்கப்பட்ட பொருள் வெற்றி பெற்றதாக இருக்கவேண்டுமே அன்றி விவாதித்தவர் வெற்றி பெற்றதாக இருக்க கூடாது. விவாதித்தவர் வெற்றி பெறுகிற நிலைகளில் விவாதித்தவர் திறமையாக வாதடக்கூடியவர் என்றுதான் பொருளே அன்றி விவாதப்பொருள் வெற்றி அடைகிறது என்று அர்த்தம் கொள்ள முடியாது. பெரும்பாலான விவாதங்களில் கண்டிப்பாக இருக்க வேண்டிய மெலிதான நகைச்சுவை உணர்வு திண்ணை விவாதங்களில் காணப்படவே இல்லை. குலம், கோத்திரம், இனம், மொழி, சாதி, திராவிடம், ஆர்யம் என்றெல்லாம் போய் கடைசியாக மனிதம் தொலைந்து போவதை பார்க்க முடிகிறது. (புற முதுகு காட்டி ஓடிவிட்டு என்றெல்லாம் பின்னூட்டங்களை பார்க்க முடிகிறது. திண்ணையில் என்ன போரா நடை பெறுகிறது?)
காட்டமான பின்னூட்டங்கள் திண்ணையின் Traffic-ஐ அதிகப்படுத்த உதவலாமே தவிர எழுதுப்பட்ட பொருள் குறித்த தீர்க்கமான விவாதங்களுக்கு வழி வகுக்காது என்பது எனது தனிப்பட்ட கருத்து. இந்த வியாபார கலாச்சாரத்தில் இந்த பின்னூட்டங்கள் அதற்குரிய மதிப்பையும் முக்கியத்துவத்தையும் பெற்று விடுகிறது. மேலும், அவை படிப்பவர்களுக்கு சுவாரசியத்தை தரவும் தவறுவதில்லை.
எனக்கு தெரிந்த இளைஞர் ஒருவரை திண்ணையில் நல்ல கட்டுரைகள் எல்லாம் வெளிவருகின்றது படியுங்கள் என்று பரிந்துரைத்தேன். ஒரு வாரம் கழித்து என்னை சந்தித்தவர் சொன்னார் ”எங்கள் அலுவலத்தில் எல்லாம் நாங்கள் இவ்வளவு அதிகமாக சாதிகள் குறித்து கவலைப்படுவதே இல்லை. திண்ணையில் அதிகமாக சாதி தான் பேசப்படுகிறது என்றார். இனிமேல் நான் திண்ணைப்பக்கம் போவதாக இல்லை என்றார்.” அதுதான் அவரின் கருத்தாக இருக்கிறது.
வெ.சா மற்றும் ம.ம தங்கள் கருத்தின் மீதான விவாதங்களை (சில அவதூறுகளையும்) மெலிதாக புறக்கணித்து விடுகிறார்கள். உண்மையான விவாதங்களுக்கும், அவர்களின் விளக்கத்திற்கும், அனுபவ பகிர்வுக்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது. உலகத்தில் மிக கொடுமையான வலி புறக்கணிப்பு தான். சட்டசபையில் ஒருவர் தவறாக நடந்தால் மற்றவர்கள் அவரை தள்ளிவைக்கிறார்கள். அவை கருத்தை ஒருவர் ஏற்கவில்லை என்றால் சட்ட சபையை அவர் புறக்கணிக்கிறார். பெரும்பாலும் எதிர்ப்பை காட்ட புறக்கணிப்பு தான் சரியான ஆயுதம் என்று நினைக்கிறார்கள். இப்பொழுதெல்லாம் வெ.சா மற்றும் ம.ம கட்டுரைகளை அதிகமாக காண முடியவில்லை. எதை எழுதினாலும் யாரவது ஒருவர் தடி எடுத்துக்கொண்டு வந்தால் யார்தான் எழுதுவார்கள்? (அவர்கள் குறைவாக எழுதுவதற்கு வேறு காரணமும் இருக்கலாம்)
எழுதப்பட்ட கருத்தின் மீது விவாத்தை கொண்டு செல்லாமல் தனி மனித துதி பாடலாக இல்லை துவேச பாடலாகத்தான் பின்னூட்டங்கள் இருக்கிறது. தனி மனித தாக்குதல்களை எப்படி திண்ணையில் அனுமதிக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
என்னதான் கருத்து சுதந்திரம் என்றாலும் இப்படியா முகம் தெரியாத மனிதரின் முகத்தில் காறி உமிழ்வது?
இந்த கட்டுரை திண்ணையில் வெளிவரும் பட்சத்தில் இதன் மீதான எந்த விதமான பின்னூட்டத்திற்கும் நான் பின்னூட்டம் இடுவதில்லை என்று நினைத்திருக்கிறேன். எந்த மாற்றுக்கருத்தையும் ஏற்று கொள்ளும் பக்குவத்தை எல்லாம் வல்ல இறைவன் எனக்கு அருள்வானாக.
“பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே”
அ.லெட்சுமணன்
- முள்வெளி- அத்தியாயம் -4
- நான்காவது தூணும் நாதியற்ற வெகுஜனங்களும்
- அது, இது, உது –எது? – இலங்கை யாழ்ப்பாண வழக்கில் உகரச்சுட்டின் பயன்பாடு
- சுனாமி யில் – கடைசி காட்சி.
- இதிலும்… நிஜங்கள்….!- குறுங்கவிதை
- ஆணுக்கும் அடி சறுக்கும்…!
- தி ஆர்ட்டிஸ்ட் -2012 (ஆஸ்கார் அவார்டு படம்)
- கருணாகரன் கவிதைகள்
- சம்பத் நந்தியின் “ ரகளை “
- குகை மனிதனும் கோடி ரூபாயும் – தமிழில் நூல் வெளியீடு
- பழந்தமிழரின் நிலவியல் பாகுபாடு
- ஈக்கள் மொய்க்கும்
- தங்கம் – 2 – உலகில் தங்க நிலவரம்
- வரங்கள்
- சட்டென தாழும் வலி
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 8
- ‘பிரளயகாலம்’
- நூல் அறிமுகம் :மு.வ.வின் :கி.பி.2000
- பஞ்சதந்திரம் தொடர் 39 – நரியும் காளையும்
- காலப் பயணம்
- மலைபேச்சு- செஞ்சி சொல்லும் கதை-21
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 19
- பின்னூட்டம் – ஒரு பார்வை
- நீர் சொட்டும் கவிதை
- கவிதை!
- இறந்தும் கற்பித்தாள்
- பி ஆர் பந்துலுவின் ‘ கர்ணன் ‘ ( டிஜிட்டல் )
- பண்டி சரோஜ்குமாரின் ‘ அஸ்தமனம் ‘
- நானும் ஷோபா சக்தியும்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தைந்து
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 15) எழில் இனப் பெருக்கம்
- தாகூரின் கீதப் பாமாலை – 8 இனிய அக்கினி உடல்
- “ பி சி று…”
- தீபாவளியும் கந்தசாமியும்
- புதுமனை
- அன்பெனும் தோணி
- என் சுற்றுப்பயணங்கள்
- சருகாய் இரு
- கவிதை
- வந்தவர்கள்
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 10
- இலக்கிய சிந்தனை ஆண்டு விழா 2012
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பரிதியின் தீப்புயல்கள் சூரியனில் பூகம்பத்தைத் தூண்டுகின்றன
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 56