மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
காதலில் எனக்கு
வேதனை தவிர வேறில்லை
ஏது மில்லாக் காதல் எதற்கு ?
உன் இதயத்தை அவளுக் களித்து
அவளது
இதயத்தை நீ பறிக்கப் போவது
எத்தகை அறிவீனம் ?
ரத்தத்தில் வேகும் இச்சை உன்
பித்துக் கண்களில் ஒளியுடன் மிளிர
பாலைவனத்தைச் சுற்றி
நானும் வட்டமிட்டு வருவதா ?
ஏனிந்த வீணான காதல்
சுயமதிப்பைத் தன்
வயப் படுத்தி
வைத்துள்ள வனுக்கு ?
வசந்த காலத்தின் இனிய தென்றல்
வாலிப னுக்கே !
வானம்பாடியும்
வண்ண மலர்களும்
வாலிப னுக்கே !
விழுங்கும் நிழல்தனைப் போல்
வெளிவரும் காதல்
முழு உலகை
அழித்திட !
++++++++++++++++
+++++++++++++++++++
பாட்டு : 355 தாகூர் தன் 27 ஆம் வயதில் எழுதியது (1888). தாகூரின் சொந்த மொழிபெயர்ப்பு
+++++++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali &
Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] April 16, 2012
*********************
- புதுவையில் பாவேந்தர் பெருவிழா-2012
- தங்கம் 3 – தங்க விலை ஏற்றம்
- சென்னையின் முதல் அச்சகம்: களவாடிக் கொணர்ந்த பொருள்!
- பஞ்சதந்திரம் தொடர் 40 – யானைகளை விடுவித்த எலிகள்
- 2000ஆம் ஆண்டும் மு.வ.வின் தப்பிய கணக்குகளும்.
- மங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி ?
- கையோடு களிமண்..!
- ஆலிங்கனம்
- எம்.ராஜேஷின் “ ஒரு கல் ஒரு கண்ணாடி “
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 9
- புரட்சி
- நிபந்தனை
- சின்ன மகள் கேள்விகள்
- பழமொழிகளில் தெய்வங்கள்
- முள்வெளி அத்தியாயம் -5
- ஒப்பனை …
- பிறந்தாள் ஒரு பெண்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 16) எழில் இனப் பெருக்கம்
- அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012
- தாகூரின் கீதப் பாமாலை – 9 ஏனிந்தக் காதல் துயர் ?
- ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் -2012
- சுஜாதாவின் வஸந்த் வஸந்த் – விமர்சனம்
- ஆ. தனஞ்செயனின் விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் : புத்தக மதிப்புரை
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 11
- சாதிகளின் அவசியம்
- வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து. – நீ வாழும் உலகம்
- ஜெயந்தன் இலக்கிய விருது வழங்கும் விழா அழைப்பிதழ்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 20
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -22
- கலீல் கிப்ரானின் நியாயங்கள்! (சட்டம்)
- கடவுள் மனிதன்.
- கண்ணால் காண்பதும்…
- தூரிகை
- ஊதாப்பூக்கள் கண்சிமிட்டவில்லை
- நிகழ்வு
- உதிரும் சிறகு
- சூல் கொண்டேன்!
- தூறலுக்குள் இடி இறக்காதீர்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தாறு இரா.முருகன்
- ஆர்ய பட்டா மண்
- பவித்திரனின் “ மாட்டுத்தாவணி “
- அம்மா
- விபத்தில் வாழ்க்கை
- இந்தியா வெற்றிகரமாக ஏவிய நீட்சி எல்லை அகில கண்டக் கட்டளைத் தாக்கு கணை
அன்பின் திரு ஜெயபாரதன்,
அழகான தமிழாக்கம். நன்றி.
இந்தியா வெற்றிகரமாக ஏவிய நீட்சி எல்லை அகில கண்டக் கட்டளைத் தாக்கு கணை – இந்த இடுகை முழுமையாகவும் வரவில்லை,பின்னூட்டம் போடவும் இடமில்லை. அற்புதமான இடுகை. பகிர்விற்கு மிக்க நன்றி. எளிய நடையில் நன்கு புரியும் வண்ணம் அழகாக விளக்கியுள்ளீர்கள்.
//நாசா, ஈசா, ஜாக்ஸா ஆகிய உலகப் பெரும் விண்வெளித் துறையகங்கள் துணைக்கோள் ஒன்றை அண்டவெளியில் ஏவிடத் தேவைப்படும் நிதித் தொகையில் பாதி அளவே பாரதம் தனது துணைக்கோள் ஒன்றை அனுப்பச் செலவு செய்கிறது.// நம் இந்திய விஞ்ஞானிகளின் அறிவாற்றலைக் கண்டு மனம் பெருமிதம் கொள்கிறது ஐயா. நாங்கள் இந்தியர்கள், இவர்கள் எம் நாட்டு விஞ்ஞானிகள் என்று மார்தட்டிக் கொள்ளத் தோன்ற்கிறது. நீங்களெல்லாம் நீடூழி வாழ வேண்டும்.இன்னும் பலப்பல அப்துல் கலாம்கள் உருவாக பிரார்த்திப்போம். வாழ்க,வாழ்க!
அன்புடன்
பவள சங்கரி.
திருத்தம் – தோன்றுகிறது.
மதிப்புக்குரிய திருமதி பவள சங்கரி,
உங்கள் உன்னத பாராட்டுக்கு உளங்கனிந்த நன்றி.
எனது அக்கினி -5 விஞ்ஞானக் கட்டுரையில் இறுதிப் பகுதி வரவில்லை. அதை ஆசிரியருக்கு உடனே அனுப்பித் திண்ணையில் இணைக்கும்படி வேண்டியுள்ளேன்.
அன்புடன்
சி. ஜெயபாரதன்