தாகூரின் கீதப் பாமாலை – 15 ஆத்மாவோடு விளையாட்டு !

This entry is part 20 of 33 in the series 27 மே 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

என் ஆத்மா வோடு உனக்கு
என்ன விளையாட்டு
என் ஆத்மாவின் காதலியே !
உன் பாதங்களில் வீழக்
காத்தி ருக்கும் என்
ஆத்மா
அந்தரத்தில் மிதக்கிறது !
கைப்பற்றித் தூக்கு அதைக்
கண் எதிரே நோக்கு !

புல் கட்டு அல்ல
பூக்கள், கனிகள் விரிப்பல்ல
மனதில் வைத்திடு
அம்மனதில் மண்டிக் கிடப்பவை
அவல வேதனைகள் !

ஆத்மா ஏன்
அகத்தினுள் நுழைகிறது ?
அது ஏன் உனை
விட்டுச் செல்கிறது ?
எவருக்கும் அவை தெரியாது !
யாருக்குப் பிறகு
யார் உடம்பு அடுத்தது ?
எவ்விதியைப் பின்பற்றும்
என்பது எவருக்கும் தெரியாது ?

காதலின் கவர்ச்சியில்
ஆத்மா
கைவசப் பட்டால்
நித்திய வாழ்வு கிடைப்பது
நிச்சயம் ! அதை
நீக்கி விட்டால் ஆத்மா
நீடித்து வாழுமோ
அதன் பிறகு ?

++++++++++

+++++++++++++++++++
பாட்டு : 31 தாகூர் தன் 31 ஆம் வயதில் எழுதியது (அக்டோபர் 1892).  தாகூர் தன்

மூத்த மைத்துனி ஞானதனாந்தினி, அவளது இளமங்கை இந்திரா வாழ்ந்த இல்லத்தில்

எழுதியது.  அந்தப் பெரிய மாளிகையில் இரவீந்திரநாத் தாகூர், இளம் மனைவி, பேபி

மகளுடன் அடிக்கடி தங்குவார்.
+++++++++++++++++++

Source

1.  Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford

University

Press, Translated

from Bengali & Introduced By : Kalpana Bardhan

2.  A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] May 21, 2012

Series Navigationயாதுமாகி …ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 21)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *