ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 36) அடுத்த ஓர் முறையீடு

This entry is part 9 of 28 in the series 9 செப்டம்பர் 2012

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர் களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக் கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத் திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை. ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக்கிறார். எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்டதாகவும் எண்ணி வருந்துகிறார்.. ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.

அவரது 20 ஆவது ஈரேழ்வரிப் பாவின் மூலம் அந்தக் காதலர்கள் தமது ஐக்கிய சந்திப்பில் பாலுறவு கொள்ளவில்லை என்பதும் தெரிய வருகிறது. ஐயமின்றி ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் அக்கால மாதரின் கொடூரத்தனத்தையும், வஞ்சக உறவுகளைப் பற்றியும் உணர்ச்சி வசமோடு சில சமயத்தில் அவரது உடலுறவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன ! ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கேற்ற மும் அவரது கவிதா மேன்மையாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவரது முதல் 126 ஈரேழ்வரிப் பாக்கள் தனது நண்பன் ஒருவனை முன்னிலைப் படுத்தி எழுதப் பட்டவையே. மீதியுள்ள 28 பாக்கள் ஏதோ ஒரு கருப்பு மாதை வைத்து எழுதப் பட்டதாக அறியப் படுகிறது. இறுதிப் பாக்கள் முக்கோண உறவுக் காதலர் பற்றிக் கூறுகின்றன என்பதை 144 ஆவது பாவின் மூலம் அறிகிறோம். ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களில் சிறப்பாகக் கருதப்படுபவை : 18, 29, 116, 126 & 130 எண் கவிதைகள்.

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் எந்த ஒரு சீரிய ஒழுங்கிலோ, நிகழ்ச்சிக் கோர்ப்பிலோ தொடர்ச்சியாக எழுதப் பட்டவை அல்ல. எந்தக் கால இணைப்பை ஓட்டியும் இல்லாமல் இங்கொன்றும், அங்கொன்றுமாக அவை படைக்கப் பட்டவை. நிகழ்ந்த சிறு சம்பவங்கள் கூட ஆழமின்றிப் பொதுவாகத் தான் விளக்கப் படுகின்றன. காட்டும் அரங்க மேடையும் குறிப்பிட்டதாக இல்லை. ஷேக்ஸ்பியர் தனது நண்பனைப் பற்றியும் அவனது காதலியின் உறவைப் பற்றியும் எழுதிய பாக்களே நான் தமிழாக்கப் போகும் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள். இவற்றின் ஊடே மட்டும் ஏதோ ஒருவிதச் சங்கிலித் தொடர்பு இருப்பதாகக் காணப் படுகிறது. ஷேக்ஸ்பியர் தனது பாக்களில் செல்வீக நண்பனைத் திருமணம் புரியச் சொல்லியும் அவனது அழகிய சந்ததியைப் பெருக்கி வாழ்வில் எழிலை நிரந்தரமாக்க வேண்டு மென்றும் வற்புறுத்து கிறார். ஆதலால் ஷேக்ஸ்பியரின் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள் “இனப் பெருக்கு வரிப்பாக்கள்” (Procreation Sonnets) என்று பெயர் அளிக்கப் படுகின்றன.

++++++++++++++

(ஈரேழ் வரிப்பா -36)

அடுத்த ஓர் முறையீடு

நாமிருவரும் வெவ்வேறு நபரெனக்  கூறிடு வேன் நான்
நமதிணை பிரியாக் காதல் ஓருணர்வாய் இருந்த போதும்.
என்னுள் உறையும்  அப்பண் பாடு இருக்கட்டும் என்னோடு
உன்னுதவி இன்றித் தனியே நான் தாங்கிக் கொள்ள வேண்டும்
நம்மிருவர் காதலில் நாம் உடன்படும் கருத்து ஒன்று மட்டுமே
நம் வாழ்வில் நம்மைப் பிரிக்கும் அவமதிப் பிருப்பினும்
நமை இணைக்கும் அக்காதல் விளைவை மாற்றா விடினும்
காதல் களிப்பி லிருந்து இனிய பொழுதைத் திருட வில்லை.
எதிர்காலத் தில் நான் உன்னை ஏற்று ஆதரிக்க மாட்டேன்
என் வருந்தத் தக்க நிலைமை  அவமதிப் பளிக்கும் உனக்கு
இல்லை யெனின் நீ எனக்கு மதிப்பளிக் கலாம் பரிவுடன்.
உன் பெயரி லிருந்து பெரு மதிப்பை நீக்கிக் கொள்ளாமல்
ஆயினும்  அவ்விதம் செய்யாதே நானப்படி நேசிப்பதால்
நீயெனைச் சேர்ந்தவன், என் மதிப்புன் நலனில் புகழ் பெரும்.

+++++++++

SONNET 36

Let me confess that we two must be twain,
Although our undivided loves are one:
So shall those blots that do with me remain,
Without thy help, by me be borne alone.
In our two loves there is but one respect,
Though in our lives a separable spite,
Which though it alter not love’s sole effect,
Yet doth it steal sweet hours from love’s delight.
I may not evermore acknowledge thee,
Lest my bewailed guilt should do thee shame,
Nor thou with public kindness honour me,
Unless thou take that honour from thy name:
But do not so, I love thee in such sort,
As thou being mine, mine is thy good report.

++++++++++++++
Sonnet Summary : 36

Obstacles to the friendship between the poet and the young man remain, but the poet is no longer wholly duped by his young friend. However, he still maintains that their love for one another is as strong as ever: “Let me confess that we two must be twain / Although our undivided loves are one.” What is more clear than ever, though, is that the poet is wrong.
The poet’s indifference to the youth’s continued misbehavior — “those blots” — turns to open scorn, not of the youth, but rather of having to remain publicly separated from him. The necessity of a separation — “separable spite” — is a decision born of hard-won wisdom. Public shame makes the poet desire to bear his suffering alone, publicly refraining from acknowledging the young man — “I may not evermore acknowledge thee, / . . . / Nor thou with public kindness honor me.” What is painfully apparent is that the poet has been publicly ridiculed and that the young man deceitfully continues to court favor from others. At this point in the sonnets, the relationship between the two men seems one-sided and incredibly unfair.

++++++++++++++++++++++++

Sonnet 36
(Paraphrased)
——————————————————————————–
01. I do confess that we two must, in fact, be two different men,

02. Although our united loves are one single sentiment;

03. So, those stigma that linger on me, shall remain with me,

04. To be borne by me, alone, without your help.

05. In our two loves there is only one mutual consideration,

06. Although, in our lives, there is a disgrace that separates us,

07. Which, although it doesn’t alter love’s effect of uniting us,

08. Yet, it does take away friendly hours of our love’s enjoyment.

09. I cannot, in the future, acknowledge you,

10. Lest my regrettable state of disgrace should shame you, by association,

11. Nor may you, with acts of kindness in public, honor me,

12. Without taking that much honor from your own name,

13. But don’t do that – I love you in such a way,

14. That since you’re mine, I find my honor in your good reputation.

++++++++++++++++

Information :

1.  Shakespeare’s Sonnets Edited By: Stanley Wells (1985)
2.  http://www.william-shakespeare.info/william-shakespeare-sonnets.htm (Sonnets Text)
3.  http://www.sparknotes.com/shakespeare/shakesonnets/section2.rhtml (Spark Notes to Sonnets)
4.  http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/  (Sonnets Study Guide)
5.  http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/short-summary/ (Sonnets summary)
6.  The Sonnets of William Shakesspeare By :Lomboll House (1987)

+++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) September 6, 2012

Series Navigationஅஸ்லமின் “ பாகன் “உறு மீன் வரும்வரை…..
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *