தாகூரின் கீதப் பாமாலை – 30 கடற் பயணி.

This entry is part 19 of 28 in the series 9 செப்டம்பர் 2012

தாகூரின் கீதப் பாமாலை – 30
கடற் பயணி.


மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

எந்தப் பாதையில் நீ வந்தாய்
என்று நான் அறியேன், நீ
வந்ததையும் நான் காண வில்லை
பயணியே !
கனவுபோல் திடீரெனத் தோன்றினாய்
கானகத்தின் அதே மூலையில்  !
பங்குனி மாதம் அது,
புது வசந்தம்  கொணர்ந்த திங்கே
புவிக் கடலில்
பொங்கிடும்  அலை மட்டம்  !
உன் பச்சைப் படகில்
காற்று வீசிக்
கடல் அலை மீது வந்தாய் !
வெகு தூரத்தி லிருந்து
வாலிபத்தின் சுய அலை வலுவில்
வந்து சேர்ந்தாய் நீ !

எந்த நாட்டில் உள்ளது
உன் இல்லம் ?
எவனுக்குத் தெரியும்
உன் முகவரி ?
எப்பாதையும்
வழி நடத்திச் செல்லாத
எந்த இன்னிசைக் கரைக்கு
முந்திச் செல்கிறாய் ?
சொந்தமான அதே  உனது நாட்டுக்கு
எந்தன் இதயம் போக
விந்தை யாய் ஏங்கு கிறது !
அது குறித்துச் சொல்வது
உன் மலர்மாலை நறுமணத்தில்  தான்
என் ஆத்மாவில் இருப்பது
இனிய பயணியே !

+++++++++++++++++++++++++
பாட்டு : 255 தாகூர் தன் 54 ஆம் வயதில் (அக்டோபர் 1916) எழுதியது.
+++++++++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com]  September 4, 2012

Series Navigationசத்யானந்தன் மடல்(99) – நினைவுகளின் சுவட்டில்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *