குழந்தைப் பாட்டு

This entry is part 35 of 51 in the series 3 ஜூலை 2011

எழும்பூரிலிருந்து ரயில் புறப்பட்டதும்
எதிர் சீட் குழந்தை பாடத் தொடங்கினாள்
`இரும்பிலே இருதயம் முளைக்குதோ’
செங்கல்பட்டு நெருங்கும்போது
பாட்டு மாறத் தொடங்கியது
`அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா’ என்று
என் விருப்பமாகக் கேட்டேன்
`ஏ பார் ஆப்பிள் ‘ பாடச்சொல்லி.
ஒரு நிமிடம் யோசித்து விட்டு
`அந்தப் பாட்டு மிஸ் வீட்டு
அலமாரிக்குள் இருக்கிறது ‘என்றது குழந்தை
குலுங்கி குலுங்கி சிரித்தது ரயில்.

– நிஷாந்தன்

Series Navigationகறைமனபிறழ்வு
author

நிஷாந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *