8 சித்தப்பா
நான் பிறந்த சிலாங்கூர் மாநிலம் சிறப்பான மாநிலம் என்பார்.அதைக் கேட்டு மகிந்து போவேன்! கிள்ளானில் பிறந்ததற்காகப் பெருமையும் அடைவேன்.கிள்ளான் அரசர் வாழும் ‘அரச நகரம்’ .அந்தகைய நகரில் நான் வாழ்வது எனக்குப் பெருமை அல்லவா….!
மலேசியாவில்,சிலாங்கூர் மாநிலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்றால் அது மிகையில்லை! காப்பார் பட்டணத்தில்தான் மலேசியாவிலேயே அதிகமாக தமிழர்கள் வாழும் இடம் என்ற தகவலையும் சித்தப்பா கூறக்கேட்டிருக்கிறேன்.
பொதுத்தேர்தலில் காப்பார் தொகுதியில் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராகப் போட்டியிட்டாலும் கண்டிப்பாக ஒரு தமிழர்தாம் போட்டிப்போடுவது வழக்கமாகும்! அப்படியொரு பாரம்பரியம் அங்கே எழுதப்படாத ஒரு சட்டமாக இருந்து வருகிறது.
அறுபதாம் ஆண்டுகளில்,ஆளும் பாரிசான் கட்சியைச் சேர்ந்த ‘தொழிலாளர் அமைச்சர்’ டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் தொடங்கி இன்றைய ‘மக்கள் கூட்டணி’ எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக வீற்றிருக்கும் மாணிக்கவாசகம் வரையில் அதுவே இன்றுவரை நடைமுறையாகும்!
மேலும்,1941 ஆம் ஆண்டு ஐரோப்பிய தோட்ட முதலாளிகள் இந்தியத் தொழிலாளர்களுக்கு இழைத்த கொடுமைகள்,அநீதிகளை எதிர்த்து கிள்ளான் வட்டாரத்தில் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டமும்,வேலை நிறுத்தமும்தான் மலாயா வரலாற்றிலேயே மிகப் பெரிய வேலை நிறுத்தமாக இருந்துள்ளது.
சமுகச் சீர்திருத்தவாதியான ஆர்.எச்.நாதன் தலைமையில் ஏறக்குறைய 15,000 முதல் 20,000 வரையிலான தோட்டத் தொழிலாளர்கள் இதில் பங்கு கொண்டுள்ளனர்.கோலாசிலாங்கூர் மற்றும் பத்தாங் பெர்ஜுந்தை வட்டாரங்களில் உள்ள தோட்டங்களில் இருந்து சைக்கிள்கள் மூலம் கிள்ளானுக்கு வந்த தொழிலாளர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கு கொண்டு ஆதரவைத் தெரிவித்தனர்.
கிள்ளான், பந்திங், போர்ட்ஸ்வெட்டன்ஹாம், பத்துதீகா, மோரிப்,
கோலாசிலாங்கூர்,காப்பார்,பந்தி ங்,ரவாங்,குவாங்,பத்துஆராங்,கோ லாலம்ர்,தஞ்சோங்மாலிம்,ஆகியஇடங் களில்தொழிலாளர்களுக்கும்,போலீசா ருக்கும் கைகலப்பு மூண்டது. இந்தியத் தொழிலாளரை அடக்க இந்தியத் துருப்புகளையே பிரிட்டிஷார் ஏவினர்.
பதினான்கு அம்சக் கோரிக்கையை ஒரு வாரகால அவகாசத்தில் ஏற்குமாறு அரசாங்கத்திற்கும், தோட்ட முதலாளிகளுக்கும் தொழிலாளர் தலைவர்கள் அனுப்பினர்! தொழிற்சங்கத்தின் போராட்டங்களுக்கு கிள்ளான் பட்டணம் தாய் போன்று கைகொடுத்த இடமாகும்!
கிள்ளான் பட்டணத்தில் முதலாம் படிவத்தில் படித்துக் கொண்டிருந்தேன்.காலை ஆறு மணியளவில் தோட்டத்தையொட்டி அமைந்துள்ள நெடுஞ்சாலை ஓரமாகப் பஸ் நிறுத்தகத்தில் இடைநிலைப்பள்ளிக்குச் செல்லும் சகமாணவர்களோடு ஒன்றாய்ச் சேர்ந்து பயணிப்பது மறக்க முடியாத அனுபவமாகும்!
என் பள்ளித்தோழிகளான மஞ்சுலாவையும் வாணியையும் காலையில் பார்க்கவில்லை என்றால் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும்.அன்று மலர்ந்த தாமரையாய் முகமலர்ச்சியோடு அவர்கள் என்னைக் காண வரும்போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேது? கள்ளம் கபடு இல்லாமல் பேசி மகிழ்வோம்.
எங்களை யார் தடுப்பது! அங்கே, பல்வேறு பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களைக் காண்பதும் அவர்களோடு மனம் விட்டுப் பேசி மகிழ்வது மாணவர் பருவத்தில் அனுபவிக்க வேண்டியப் வசந்த காலம் அல்லவா!
அன்று வெள்ளிக்கிழமை.நண்பகல் பன்னிரண்டு மணிக்குப் பள்ளி முடிவடையும். அப்பாடா சனி,ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களுக்கு விடுமுறை. நன்றாகத் தூங்கலாம், தொலைக்காட்சியில் பிடித்த கதாநாயகன் ரஜினி நடித்த படத்தை டேப்பில் போட்டுப்பார்க்கலாம், அம்மா சமைக்கும் சுவை மிகுந்த கோழிக்கறியை ஒரு கைப்பார்க்கலாம்!
பக்கத்து வீட்டுப் பள்ளித்தோழிகளோடு அரட்டை அடிக்கலாம்…. என்று கற்பனையில் மிதந்துக் கொண்டிருக்கும் போது பள்ளியின் ஆபிஸ் பையன் அமாட் வகுப்பில் வந்து, “அம்பிகா….பாப்பா சௌடாரா காமு செடங் துங்கு டி பெஜபாட்,சிலா ஈக்குட் கெ பெஜபாட்!” அமாட் கூறியதைக் கேட்டு அவன் பின் ஒன்றும் விளங்காமல், குழப்பத்துடன் பள்ளி அலுவலகத்தை நோக்கி விரைவாகச் செல்கிறேன்!
என்னைப் பார்த்ததும் சித்தப்பா, பதற்றமுடன் எழுந்து என்னை நோக்கி வேகமாக வருகிறார்! அருகில் வந்தபோது அவரின் கண்களைப் பார்க்கிறேன் அவை சிவந்திருந்தன! கண்கள் கலங்கிப் போயிருந்தன! என் இதயம் அதிவேகமாக அடித்துக் கொள்கிறது!
“சித்தப்பா….! ஏன் ஒரு மாதிரியா இருக்கிறீங்க? என்ன ஆச்சி சித்தப்பா…!” அவரது கைகளை வேகமாகப் பிடித்துக் குலுக்குகிறேன்.அவரது உதடுகள் வேகமாக அடித்துக் கொள்கின்றன. ஆனால், அவரால் பேசமுடியவில்லை! ஏதும் பேசமுடியாமல் மௌனமாக நிற்கிறார். துருதுருவென்று இயங்கும் சித்தப்பாவா இப்படி வாயடைத்து நிற்கிறார்? என்னவாக இருக்கும்? எதையும் என்னால் சிந்திக்க முடியவில்லை!
9 குடும்பத்தலைவர்
“சித்தப்பா…..என்ன ஆச்சு? நடந்தத மறைக்காமச் சொல்லுங்கச் சித்தப்பா…!” என்று பதற்றமடைந்த போது என்னையும் அறியாமல் என் கண்களிலிருந்து கண்ணீர் பொல பொல வென்று கொட்டியது!
“அம்பிகை…..! நான் சொல்லப் போவதைக் கேட்டு அதர்ச்சி அடைய வேண்டாம்! அப்பா நம்மை எல்லாம் விட்டுட்டுப் போயிட்டாரும்மா……!” என்றபோது, அவரது கண்களும் அவரை அறியாமல் கண்ணீர் மடை திறந்த வெள்ளம் போல் பீரிட்டுக் கொண்டு வெளியேறுகிறது!
“முதல் நாள் பெய்த கடும் மழையினால் மண்சாலை ஈரம் காயாமல் இருந்ததால் அப்பா ஓட்டிச் சென்ற ‘டிராக்டர்’ வழுக்கி ஆழமான பள்ளத்தில் விழுந்ததால் அப்பாவுக்கு தலையில் பலத்த அடி படவே ஸ்தலத்திலேயே இறந்துட்டாரு!” “அப்பா….! என்று வீரிட்டு அழுகிறாள் அம்பிகை!” அவளைச் சமாதானம் செய்து வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வீடு வருதற்கு அறிவுமதிக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது!
மறுநாள் தோட்டத்து இடுகாட்டில் அண்ணன் அடக்கம்செய்யப் பட்டார்.தனக்கிருந்த ஒரு உடன் பிறப்பும் எதிர்பாராதவிதமாக காலமானது
அறிவுமதிக்குச் சொல்லொனா துயரமும் துக்கமும் தொண்டையை அடைத்தது! அண்ணனே தெய்வம் என்றிருந்த அண்ணியின் கண்ணீரைத்
துடைக்க அறிவுமதிக்குத் தர்மச்சங்கடமாகப் போய்விடுகிறது! அவரது மறைவைத் தாங்க முடியாமல் கண்ணீக் கடலில் மூழ்கிப்போனார். மிகவும் மனமொடிந்து போகிறார்!
இறைவன் போட்டத் தீர்ப்பை மனிதனால் மாற்ற முடியுமா என்ன? ஏற்கனவே நோயாளியான அண்ணி,அண்ணனின் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாதவராக அண்ணன் மறைந்த மூன்று மாதங்களிலேயே அவரும் காலமாகிப் போகிறார்!
கவலை என்றால் என்னவென்று அறியாதப் பதின்மூன்று வயதிலேயே பெற்றோரை இழந்த எனக்குச் சித்தப்பா எனக்குத் தாயாகவும் தந்தையாகவும் இருந்து என்னை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாகவும் சீராட்டிப் பாராட்டி கண் இமை காப்பது போல் காத்து என்னைப் பல்கலைக்கழகம் வரைப்படிக்க வைத்து வேலை வாங்கிக் கொடுத்து திருமணமும் செய்து வைத்தார்.
அவர் எனக்காகவே திருமணம் செய்துக்கொள்ளாமல் இருந்த அவர் ஒரு நாள் கார் விபத்தில் திடீரென அவரும் என்னை அனாதையாக விட்டுச்சென்றபோது நான் அடைந்த துன்பமும் துயரமும் சொல்லி மாளாது!
கடந்த கால வாழ்க்கையை ஒரு கணம் நினைத்த போது, அம்பிகையின் கண்கள் கண்ணீரைச் சிந்தின!
அப்போது அங்கு வந்த தினகரன் தன்னுடன் கொண்டு வந்திருந்த பிரீப்கேசை அங்கிருந்த சிறிய மேசைமீது வைத்தபடி சோபாவில் அமர்கிறார்.அவரும் பார்த்திபனைப் பார்க்கிறார்.அவனைப்பார்த்து புன்னகைக்கிறார்.அவனும் அப்பாவைப் பார்த்து இளநகை புரிகிறான்.சிறிய குடும்பம் என்றாலும் இதமான சூழல் அவர்களிடையே எப்போதும் அமைந்துவிடுவதில்லை! அதை புரிந்து கொண்டு மூவரும் தங்களின் அகக்கண்களைத் திறந்து உரையாடுகின்றனர்.
ஐம்பது வயதைத் தாண்டிக்கொண்டிருக்கும் தினகரன் மிகவும் அமைதியானவர்.தேவையின்றி குடும்ப உறுப்பினர் விசியங்களில் மூக்கை நுழைக்கமாட்டார்.குடும்பத் தலைவர் என்ற முறையில் தான் சொல்ல வேண்டிய ஆலோசனைகளையும் உதவிகளையும் தவறாமல் செய்வதில் இமியளவும் அவர் ஒருநாளும் பின்வாங்கியதில்லை.
பண்பு நிறைந்த தந்தை, அன்பு மனைவி மற்றும் பாசமிக்க மகன் ஆகியோருடன் விட்டுக் கொடுத்து வாழ்ந்து வருபவர்.வலிய தன் எண்ணங்களைக் குடும்ப உறுப்பினர்களின் உள்ளத்தில் விதைக்க முன் வருவதில்லை. அதனால் குடும்ப உறுப்பினர்களிடையே நெருங்கிய உறவு நிலைத்திருந்தது.
“பார்த்திபா….தேநீர் ஏதும் குடிச்சியாப்பா….? வாஞ்சையுடன் கேட்கிறார் அப்பா. “ ஜூஸ் மட்டும் குடிசேன்பா….!” மிகுந்த அடக்கத்துடன் கூறுகிறான் பார்த்திபன். அப்பாவிடம் அவனுக்குப் பயம் கலந்த மரியாதை.அம்மாவிடம் பயமின்றி பேசுவது போல் அப்பாவிடம் பேசமாட்டான்.அப்பாவிடம் மரியாதை மேலாகக் காணப்படும். அம்மாவிடம் அன்பு மேலிடும்.அதுதான் வித்தியாசம் மற்றபடி பெற்றோரிடம் அவன் காட்டும் அன்பில் வேற்றுமை இல்லை. சிறிது நேரம் அப்பா, பார்த்திபனுடன் சேர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் கண்டு களிக்கிறார்.
ஏழு மணிக்கான ‘பெர்னாமா’ தமிழ்ச்செய்தி இடம் பெறுகிறது.பல நாட்களுக்குப் பிறகு தமிழ்ச்செய்தியைக் கேட்பதில் மகிழ்ச்சியுற்ற தினகரன் சோபாவில் நிமிர்ந்து உட்கார்கிறார் உள்ளூர் செய்திகளையும்,உலக நடப்புகளையும் அறிந்து கொள்வதில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு.வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மலாய்,ஆங்கிலம்,தமிழ்,உள்ளூர் செய்திகளுடன் ‘சிஎன்ஐ’ செய்திகளையும் உண்ணிப்பாகக் கேட்டு விபரங்களை மனதில் உள்வாங்கிக் கொள்வார். உரையாடல்களில் அவர் உள்வாங்கிருந்த செய்திகளின் சாரம் பளிச்சன வெளிப்படும்.
அவர் குறிப்பிடும் புள்ளி விபரங்களைக் கேட்டு நண்பர்களின் புருவங்கள் உயர்ந்து நிற்கும்.
பார்த்திபன் உடை மாற்றம் செய்ய தன் அறைக்குச் செல்கிறான்.வெறுமனமே கார்ட்டூன் நிகழ்ச்சியில் இலயித்துப் போகும் அவன் தமிழ்ச்செய்திகளை அவ்வளவாக ஆர்வத்துடன் கேட்பதில்லை.
நமக்காகப் போடப்படும் தமிழ்ச்செய்தியில் தமிழ்மொழி,தமிழர்களின் பண்பாட்டு,தமிழர்கள் எதிர்நோக்கும் அதிமுக்கியமானப் பிரச்னைகளாக இந்நாட்டில் பிறந்திருந்தும் பிரஜாஉரிமை இல்லாதத் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே நாடற்ற அகதிகளாக இருப்பதும்,அதனால் எதிர்நோக்கும் கணக்கிலடங்காப் பிரச்னைகள்.
பிறந்த பத்திரம் இல்லாமையால் பள்ளி செல்ல முடியாமல் கல்வி கற்க முடியாதக் குழந்தைகள்,தோட்டப்புறத்திலும் தனியார் நிலத்திலும் ஒட்டுக் குடும்பம் நடத்தும் யாதொரு வசதிகளும் இல்லாதத் தமிழ்ப்பள்ளிகளில் கல்வி கற்கும் தமிழ்க்குழந்தைகள் எதிர்நோக்கும் சிரமங்கள்,மாற்றான் வீட்டுப்பிள்ளைகள் போல் நடத்தப்படும் நாட்டிலுள்ள
523 தமிழ்ப்பள்ளிகளின் அவல நிலை குறித்தும் வெளிச்சம் போட்டுக்காட்டும் தமிழ்ச்செய்திகள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் தமிழர்களின் இருண்ட வாழ்க்கை தொடர்கதையாகிப் போயிருக்கும்.
அன்றைய, தமிழ்ச்செய்தியில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள காப்பார் பட்டணத்தில் நடந்த பொங்கல் விழா நிகழ்வில் நாட்டுப் பிரதமர் மாண்புமிகு டத்தோஸ்ரீ நஜிப் அவர்கள் இந்திய மாணவர்களுக்கு 1500 மெட்டிகுலேசன் இடம் வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்தவுடன் வானமே இடிந்து விழுந்துவிடும் அளவுக்கு கூடியிருந்த தமிழர்களின் கையொலி ஓங்கி ஒலித்தது.
“அடடா…இப்படியொரு நல்ல பிரதமரா? தமிழர்களின் வாழ்வில் ஒரு விடியலை ஏற்படுத்த பிரதமரே முன்வந்துள்ளாரே! இவருக்கு முன் ஆட்சிபீடத்தில் வீற்றிருந்த ஐந்து பிரதமர்கள் செய்யாததை இவர் செய்ய முன்வருகிறாரே? ஆச்சரியமாக இருக்கிறதே….!இவரை நம்பலாமா….? 1969 மே 13 ஆம் நாள் நாட்டு வரலாற்றில் ‘கறுப்பு தினம்’ என்று சொல்லப்படும் இனக்கலவரத்திற்குப் பின் முதல் பிரதமர் துங்கு அப்துல் இரகுமான் அவர்களுக்குப்பின் நாட்டின் இரண்டாவது பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட துன்அப்துல் இராசாக் இவரது தந்தை அல்லவா?
இந்திய சமுதாயத்திற்கு அவர் செய்யத் தவறி நன்மைகளை இவர் செய்யப் போகிறாரா? நாட்டில் விரைவில் நடைபெறவிருக்கும் 13 ஆவது பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காகச் செய்யப்படும் தந்திரமா?” கூட்டத்தில், எண்பது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். அவரைச் சுற்றியிருந்த சிலர் அவர் பேசும் ஞாயத்தைக் கேட்டுத் தலையாட்டிக் கொண்டிருந்தனர்.
அவரில் ஒருவர், “இதுவரையில் தமிழர்களுக்குச் செய்யத்தவறிய உதவிகளுக்காகப் பிரதமர் என்ற தகுதியையும் பாராமல் இந்திய சமுதாயத்திடம் மன்னிப்புக்கேட்டுள்ளாரே……! என் மீது நம்பிக்கை வையுங்கள் என்று மனமுரு கேட்டுக் கொண்டுள்ளாரே?” அது போதாதா? என்று எதார்த்தமாமக் கேட்கிறார்!
“நமக்கு வேண்டியது உரிமை.நமக்கு கிடைக்க வேண்டியது சலுகை. இனியும் இந்திய சமுதாயத்தை ஏமாற்றமுடியாது.சிந்தித்துப் பார்க்க வேண்டும்” கூடியிருந்த மற்றொருவர் ஆவேசமுடன் கேட்கிறார்.
இந்த உரையாடல்களைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்த உள்ளூர் அரசியல்வாதி ஜி.எஸ்.குணசீலன் கொதித்துப் போகிறார்.நாற்பது ஆண்டுகளாகப் காப்பார் கிளைத்தலைவர்.இவர் இல்லை என்றால் இந்தே நாடே இல்லை என்பது போல நீள்திரைபடம் காட்டுவார்.
சாப்பாடு,தண்ணீ வாங்கிக்கொடுத்து எப்போதும் தன்னைச் சுற்றிக்கொண்டு இருக்கும் ஒரு குண்டர் கும்பலை வைத்துக் கொண்டு காப்பார் வட்டாரத்தையே கதிகலங்கச் செய்துக்கொண்டிருந்தார்! இரும்பு விற்பனை செய்யும் தொழிலில் கொஞ்சம் வருமானம் வந்து கொண்டிருந்தது.அதை வைத்துக் கொண்டு நாட்டு கருவூலமே இவர் கையில் அடங்கியது போல் போக்கு காட்டி வருவார்.
பார்த்திபன் அம்மா அம்பிகை சமைப்பதில் கெட்டி என்றாலும், வழக்கமாக இரவில் சோறு, மீ கூன் பிரட்டல் அல்லது ரொட்டி காப்பியுடன் முடித்துவிடுவார். இரவு உணவு சமைப்பதை அவர் முக்கியமான விசியமா எடுத்துக் கொள்வதில்லை! பசிக்கு ஏதாவது வயிற்றுக்குள் போட்டுக் கொண்டால் சரி என்ற நிலையிலேயே அந்தக் குடும்பம் தினம் நடைப் பயின்று கொண்டிருந்தது.
அரசல்புரசலாக அம்மா சைவமாக மீகூன் பிரட்டி,சுவையாக ஆவி பறக்க தேநீர் கலந்த கொண்டு மேசை மீது வைக்கிறார். “ பார்த்திபா……! பார்த்திபா…..! அறையை விட்டு வெளியே வா. உனக்குப் பிடித்த மீகூன் பிரட்டி வைச்சிருக்கேன்,வந்து சாப்பிடுப்பா…..! ஏங்க….நீங்களும் சாப்பிடுங்க…!” தொலைக்காட்சியில் ஒலியேறிக் கொண்டிருந்த செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்த கணவரிடம் கூறுகிறார். சைவ மீயில் போடப்பட்டிருந்த கீரையும் தௌவும் சேர்ந்து ஒருவித நறுமணத்தை ஏற்படுத்தியது. அது பசியை மேலும் தூண்டியது!
- படைப்பு
- மொழியின் அளவுகோல்
- தனலெட்சுமி பாஸ்கரன் கவிதைகள் – ஒரு பார்வை.
- புகழ் பெற்ற ஏழைகள் – 12
- கல்யாணியும் நிலாவும்
- மருத்துவக் கட்டுரை மதுவும் கணைய அழற்சியும்
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 25
- நம்பிக்கை
- தாகூரின் கீதப் பாமாலை – 70 பிரிவுக்கு முன் செய்த முடிவுகள் .. !
- என்னைப் பற்றிய பாடல் – 23
- காரைக்குடி கம்பன் கழகம்
- மனதாலும் வாழலாம்
- கற்றுக்குட்டிக் கவிதைகள்
- லிங்கூ-வில் இயங்கும் காலமும் வெளியும் – கவிஞர் என்.லிங்குசாமி கவிதைகளை முன்வைத்து
- மாலு : சுப்ரபாரதிமணியனின் நாவல் – சமகால வாழ்வே சமகால இலக்கியம்
- ப.மதியழகன் கவிதைகள்
- பேராசிரியர் அர. வெங்கடாசலம் – திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் -ஓர் உளவியல் பார்வை – வள்ளுவ ஆன்மீகம்
- கவிதைகள்
- பிரபஞ்சத்தின் மகத்தான அணுவியல் மர்மங்கள் : மூலக்கூறில் அணுக்களின் நர்த்தனம் .. !
- வேர் மறந்த தளிர்கள் – 8,9,10
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 15
- உள்ளே ஒரு வெள்ளம்.
- ஆகஸ்ட்-15 நூலுக்கு மெய்யப்பன் அறக்கட்டளை விருது
- டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 8
- “செங்கடல்”
- இரயில் நின்ற இடம்
- என்ன ஆச்சு சுவாதிக்கு?
- நான் ஒரு பொதுமகன். And Im not a terrorist
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -7