தமிழ் கூறும் நல்லுலகின் இணைய இதழாக “திண்ணை” இப்போது பதினைந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது. வெளிப்படையான பாசாங்குகள் அற்ற விவாதம் நடைபெறும் ஒரே இணைய தளம் என்றே திண்ணையைக் குறிப்பிடலாம். ஒரு சில சமூக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் திண்ணையில் நடந்த விவாதங்கள் மேற்கோள் காட்டப்படுமளவு இந்த மன்றம் சுதந்திரமான சிந்தனைக்கும் தெளிவுக்கும் வழிவகுப்பதாக அறியப்படுகிறது. சமகால இலக்கியத்தில் புனைவுகளான கதை, கவிதை, மற்றும் மொழிபெயர்ப்புகளை வாரா வாரம் வெளியிட்டுப் பல இலக்கியவாதிகளை படைப்பாளிகளைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.
அரசியல் சமூகத் தளத்தில் திண்ணையில் வரும் கட்டுரைகள் சமகால சமூகச் சூழல், மற்றும் அதில் வர வேண்டிய மாற்றம் குறித்த பதிவுகள். இவை விவாதிக்கப்பட்டு நாம் அதுபற்றிய தெளிவை நெருங்குகிறோம்.
திண்ணையின் இலக்கியத் தடத்தை ஆரம்பக் காலம் முதல் வாசித்து அனைவருடனும் பகிரும் எண்ணம் இருந்து வந்தது. தற்போது அந்த வாசிப்பில் ஈடுபட நேரம் கிடைத்ததால் வாசிப்பு ஒரு தொடராக வாசகருக்குக் சமர்ப்பிக்கப்படுகிறது.
இரண்டு மாதங்கள் என்றால் எட்டு இதழ்கள் திண்ணையில். இப்படி ஒவ்வொரு பகுதியிலும் இரு மாத இதழ்களில் நாம் குறிப்பாக இலக்கியக் கட்டுரைகள் மற்றும் சமூக,அரசியல் கட்டுரைகளை சுருக்கமாக அலசி வெவ்வேறு கால கட்டத்தில் திண்ணையில் வெளியான ஆழ்ந்த பொருளும் நிறைந்த விவரங்களும் உள்ள கட்டுரைகளைப் பற்றிப் பகிர்வோம். கதை, கவிதைகளைப் பற்றிய பட்டியலையும் பார்ப்போம். கட்டுரைகளின் சாராம்சத்தைப் பகிர்வதற்கு நாம் முக்கியத்துவம் தருவது, கதை கவிதைகளை அலச வேண்டியதில்லை என்பதால் அல்ல. இந்தத் தொடர் சுருக்கமாக இருந்தால் வாசிக்க எளிதாக அமையும். பழைய இதழ்களின் இணைப்பு முகவரியும் கொடுக்கப் படுவதால் எதையும் சொடுக்கி வாசிக்கலாம். (கட்டுரையில் கொடுக்கப் பட்டுள்ள சுட்டியை வெட்டி கூகுள் தேடலில் ஒட்டினால் திண்ணையின் அந்தப் பகுதியை அது தேடித் தரும். சொடுக்கி வாசிக்கலாம்)
செப்டம்பர் 1999 இதழ்கள்:
2ம் தேதியிட்ட இதழில் “ஒளிர்ந்து மறைந்த நிலா” -கட்டுரை -பாவண்ணன்: மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்நாத் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார் பாவண்ணன். பல அரிய நூல்களை வாசிப்பதற்கு அம்மையார் பாவண்ணனுக்கு உதவுகிறார். ஹிந்தி வழியாக பல நூல்களை மொழி பெயர்த்த சரஸ்வதி, பாவண்ணனை ஒரு கன்னட நாடகத்தை மொழி பெயர்க்கும் படி வேண்ட அவரும் அதை நிறைவேற்றுகிறார். தாம் மொழிபெயர்த்த பல நூல்கள் அச்சுக்குப் போகவில்லையே என்னும் ஏக்கம் அம்மாவுக்கு இருந்தது. கோதான் பிரேம்சந்த் அவர்களின் இறுதி நாவல். தமது மொழிபெயர்ப்பின் கடைசி நாவலாக அது இருக்கலாம் என்று குறிப்பிட்டார் சரஸ்வதி. அவ்வாறே ஆனது சோகம். (www.thinnai.com/index.php?
13 தேதியிட்ட இதழ் – காஞ்சனா தாமோதரனின் “வழிப்பறி” சிறுகதை.
15ம் தேதியிட்ட இதழ் – கோகுலக் கண்ணனின் “நடுக்கம்” சிறுகதை.
அக்டோபர் 1999 இதழ்கள்:
11ம் தேதியிட்ட இதழ் – “மண் பிள்ளையார்” – மனுபாரதியின் சிறுகதை.
13ம் தேதியிட்ட இதழ்- சுப்ரமண்ய பாரதியார் இந்தியா இதழில் “திண்டுக்கல் சோதிடரும் மழையும்” என்னும் தலைப்பில் எழுதிய சிறுகதையின் இரு பகுதிகளை வாசிக்கிறோம். பாரதியாரின் நகைச்சுவைக்கு இவை நல்ல மாதிரிகள். (www.thinnai.com/index.php?
27ம் தேதியிட்ட இதழ்- கோகுலக் கண்ணனின் “முகம் அற்றவன்” சிறுகதை.
31ம் தேதியிட்ட இதழ்: ராம்ஜியின் “உறைந்த கணங்கள்” சிறுகதை. மற்றும் “பின் நவீனத்துவப் புனைவிலக்கியம் இறந்து விட்டதா?” என்னும் காஞ்சனா தாமோதரனின் இலக்கியக் கட்டுரை பின் நவீனத்துவம் பற்றிய புரிதலை செழுமைப் படுத்துகிறது. ரேமண்ட் ஃபெடர்மன் எழுதிய Critificationஐக் குறிப்பிட்டு பின்நவீனத்துவம் இறந்துவிட்டது என்று குறிப்பிடுகிறார் காஞ்சனா. கட்டுரையில் 20 கேள்வி பதில்கள் இத்தலைப்பில் உள்ளன. அதில் 20ம் பதில் இது: “பின்நவீனத்துவம் இறந்து விட்டது என்று கூறி விட முடியாது. ஆனால் அடையாளப் படுத்தக் கூடிய அர்த்தமுள்ள எந்த ஒரு இயக்கத்தையும் போல் – இம்ப்ரெஷனிஸம், டாடாயிஸம், ஸ்ர்ரியலிஸம், மாடர்னிஸம், அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்ப்ரஷனிஸம், முதலியன போல் – பின் நவீனத்துவமும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மேல் தளத்தில் பொங்கி, நுரைத்து, பின் அடித்தளத்துக்கு மூழ்கி, அங்கிருக்கும் பிறவற்றோடு சேர்ந்து, வளமான கலாசார – கலைக் கலவையின் ஒரு பகுதியாகிறது. இந்த முழுகி, அழுகும் கணமே அந்த இயக்கத்தின் மரணம் என்று அழைக்கப்படுகிறது”
பின் நவீனத்துவத்துக்கு ஒரு நல்ல விளக்கம் என்று அவர் தந்திருப்பதைக் காண்போம்: “எழுபதுகளில் மிஷெல் ஃபூக்கோ கூறியது: ” வித்தியாசத்தை விடுவிக்க நமக்கு வேறுபட்ட சிந்தனை வேண்டும். இச்சிந்தனை, தருக்கமும் மறுப்பும் அற்றது. பன்மையை வரவேற்பது. அங்கீகரிக்கப்பட்டதிலிருந்து விலகும் பாதைகளை உள்ளடக்கியது. ஒப்புதல் உள்ளது. அதே நேரத்தில் தனிப்படுத்துவதை உபகரணமாகக் கொண்டது. பாண்டித்ய விதிகளுக்குள் கட்டுப்படாதது. தீர்வில்லாத கேள்விகளை எதிர்கொண்டு மீண்டும் மீண்டும் விளையாடும் வேறுபட்ட சிந்தனை. ” பின் நவீனத்துவ புனைவிலக்கியத்துக்கு இதை விடப் பொருத்தமான விளக்க உரை இருக்க முடியாது. தன்னையே ஒரு விளையாட்டுப் பொருளாய் வாசகருக்கு சமர்பித்துக் கொள்கிறது பின் நவீனத்துவ புனைவிலக்கியம் ; வாசகரை எழுத்தினுள் பிணைத்து ஒரு கண்டுபிடிப்பு உணர்ச்சியையும் ஒரு excitementஐயும், அங்கீகரிக்கப் பட்ட கலாச்சார, அழகியல் அமைப்புகளைக் கடப்பதால் ஒரு வினோதமான சங்கடத்தையும் விளைவிக்கிறது, வாசகருக்குள்’. (www.thinnai.com/index.php?
முழுக்கட்டுரையையும் கண்டிப்பாக வாசிக்க வேண்டும். பின் நவீனத்துவ புனைவிலக்கியம் பற்றிய ஒரு ஆழமான புரிதலுக்கு இது உதவும். (திண்ணை வாசிப்பு தொடரும்)
- ஜெயந்தன் விருது அழைப்பிதழ்
- டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 20
- ஆகஸ்டு-15. நாவல். குமரி.எஸ்.நீலகண்டன் – எளிமையும் இலட்சியமும்
- மருத்துவக் கட்டுரை இளம்பிள்ளை வாதம்
- குகப்பிரியானந்தா – சித்த வித்தியானந்தா..
- சேவை
- க.மோகனரங்கனின் அன்பின் ஐந்திணை –
- முக்கோணக் கிளிகள் [6] [நெடுங்கதை]
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -41 என்னைப் பற்றிய பாடல் – 34
- தாகூரின் கீதப் பாமாலை – 82 ஆத்மாவின் அமுதம் .. !
- ஆன்மீகக் கனவுகள்
- அப்பா ஒரு நாய் வளர்க்கிறார்
- சிவகாமியின் சபதம் – நாட்டிய நாடகம்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி – அத்தியாயம்-2 பகுதி-2 பிருந்தாவனம்
- பேசாமொழி 10வது இதழ் (செப்டம்பர்) வெளிவந்துவிட்டது..
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 28
- ஜாக்கி சான் 8. தற்காப்புக் கலை குங்பூவைப் பற்றி
- நீங்களும்- நானும்
- திண்ணையின் இலக்கியத் தடம் – 1
- விஸ்வநாதன், வேலை வேண்டாம்…..?
- அகநாழிகை – புத்தக உலகம்
- அருளிச்செயல்களில் மச்சாவதாரம்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூமியின் சிக்கலான உட்கருவின் நூதனச் சுழற்சி இயக்கங்கள்
- கற்றல்
- கவிஞர் தமிழ் ஒளி 90 அழைப்பிதழ்
- புகழ் பெற்ற ஏழைகள் 25