தாகூரின் கீதப் பாமாலை – 95 உன் தேசப் பறவை.

This entry is part 1 of 26 in the series 29 டிசம்பர் 2013

 

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. 

 

நீங்கிச் செல்லா ஓரினிய உணர்வை

நெஞ்சம் பற்றிக் கொண்டது

தாள இசைப் பின்னலில்  !

வெகு தூரக் காலைப் புலர்ச்சியில்

ஒரு பறவையின் அரவம்.  

வெகு தொலைவு

இரவுப் பாட்டை அது பாடுகிறது ! 

பறவையின் இறக்கைகள்

நிறம் மாறி விட்டன,

கடந்த வசந்தத்தில் மலர்ந்த

அசோகப் பூக்களின்

செந்நிறத்தில் !

பறவையின்  மார்பில்

முடிந்த கால வசந்த நறுமணம்

மறைந் திருக்கும் !

 

எங்கிருந்தோ வந்திருக்கும்

இளம் பெண்ணே !

பெயர்  சொல்லி அழைப்பாய்  

அந்தப் பறவையை,

அதற்கு உன்னைத்  தெரிவதால்  !

உன் தேச விண்வெளியை

அது அறிந்துள்ளது !

திசை அறிய

இரவுத் தாரகை கூட  அது

அறிந்துள்ளது !

போகுள் மலர் தோப்பில்

எழும் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு

பாடும் அது.

உன் வளையல்கள்  போடும்

தாளத்துக்கு

நடனம் ஆடும் அது !

  

++++++++++++++++++++++++++++++

பாட்டு : 230   1939 மார்ச்சு  22 இல்   தாகூர்  77 வயதினராய்  இருந்த போது  சாந்திநிகேதனத்தில் எழுதப் பட்டது.   ++++++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarathans@gmail.com] December  25 , 2013

Series Navigationமருமகளின் மர்மம் 9சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 13கண்ணீர் விட்டோம் வளர்த்தோம்பெண்மனதின் அரூப யுத்தம் ‘அம்மாவின் ரகசியம்’இடையனின் கால்நடை
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *