Posted in

பேரறிஞர் டாக்டர் ஜெயபாரதி 3.6.2015 தமிழர்களின் மானம் காத்த மாமனிதர்

This entry is part 13 of 24 in the series 7 ஜூன் 2015

வே.ம.அருச்சுணன்
jepi
கடாரப் பேரறிஞரே…..!
இங்கே,
மொழி,இனம்,சமயம்,எழுத்து
வளர்ச்சியில் உச்சமுற
இரவு பகல் உழைத்தாய்
ஓய்வை மறந்தாய்
உன்னால் தமிழ்ச் சமுதாயம்
விழித்துக் கொண்டது
உனது பேனா முனைதான்
கடாரத் தமிழனை உலகுக்குக் காட்டியது……….!

வரம் பெற்ற உன் எழுத்தால்
தமிழர் மனம் குளிர்ந்தது
தமிழன் வீரம் உலகுக்குத் தெரிந்தது
மருத்துவத்தால் உயிர்கள் காத்தாய்
எழுத்தால் தமிழர் மானம் காத்தாய்
அடக்கமாய் ஆயிரம் செய்தாய்
அறிவால் உண்மைகள் பல் தந்தாய்………!
உனை நினைத்தால்
வீரம் பொங்கும் பெருமையுடன்
இங்கே வாழ்வதற்கு
எண்ணம் துளிர்க்கும்
ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள்வதற்கு
நெஞ்சை உயர்த்தும்…………..!

உன் இழப்பு ஈடு இல்லாதது
தனக்கென வாழாமல் பிறர் வாழ
வாழ்பவன் இறைவனன்றோ
உயிர்கள் வாழ உணவு தந்தாய்
உயர்வுக்கு அறிவைத்தந்தாய்
மனிதப் பிறப்பில்
நிறைவாய் வாழ்ந்தாய்
மனிதரில் மாணிக்கம் என்றால்
சாட்சியாய் நீயே நிற்பாய்
குறையென்று சொல்வதற்கு வழியுமில்லை
ஒருபோதும் குறையாய் வாழ்ந்ததில்லை………..!

பேரறிஞரே….!
உன் புகழை சொல்வதற்கு
காலம் போதவில்லை இங்கே
நீண்ட புகழ் பெற்றதற்கு
நாங்கள் செய்த புண்ணியம் என்போம்
பூமியில் கடாரம் உள்ளமட்டும்
உன்புகழ் நிலைத்து நிற்கும்
வாழ்கவே ஜெயபாரதி……..!

Series Navigationஅல்பம்சாவு செய்திக்காரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *