மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++
பெண்ணே ! நீ என்னை
நேசிக்கிறாயா ?
நானுனக்குத் தேவை யாயின் என்மேல்
நம்பிக்கை வைத்திடு !
என்னவளாய் நீ இருந்திட
எனக்குத் தேவை நீ !
“நலம் தானா,” என்று நீ
என்னைக் கேட்டால்
நலமென்று பதில் சொல்வேன் !
நலமாக நானில்லை என்று
நன்கு அறிவேன்.
நான் உன்னை இழந்திருப்பேன் !
நேரம் எடுத்து நமது தனிமையில்
நீ உரைத்தால்,
நேசம் உண்டாகும் நமக்குள் !
என் பாடல் உலகை
உதறி விட்டு உன்னிடம்
ஓடி வருவேன்,
என் காதலி
என்னவள் ஆகி விட்டால் !
நேரம் நிறைய உள்ள தெனக்கு;
அதைத் தள்ள
உதவ வேண்டும் நீ !
மீண்டும் என்னவள் ஆவாய் நீ !
இயலும் நமக்கு அதனை
முயன்று முடிக்க !
உன்மீ துள்ள என் காதல் மிகுந்தது;
பெண்ணே !
என்னை விட்டுச் செல்லாதே !
என்னைப் பிடித்தால்
என் மீது நம்பிக்கை வைத்திடு !
என்னவள் நீயென
ஏற்றுக் கொள்வேன் இனிமேல் !
++++++++++++++++++
- எனக்குரியவள் நீ !
- பி.கே. சிவகுமாரின் ”உள்ளுருகும் பனிச்சாலை” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு
- தொண்டிப் பத்து
- ஆண்டாள், அறிவீனம் வேண்டாள்…!
- மாட்டுப்பால் மூலம் எலும்புக்கு தேவையான சுண்ணாம்பு சத்து (கால்சியம்) கிடைக்கிறதா?
- மதுவும் கல்லீரல் செயலிழப்பும்
- ஆண்டாள்
- மனித நேயம்
- ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்
- அவர்
- கதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப் பிணைவு மின்சக்தி உற்பத்திக்குப் போரான் – ஹைடிரஜன் புதிய எரிக்கரு பயன்படும்
- தொடுவானம் 204. மகிழ்வான மருத்துவப் பணி
- கண்காட்சி
- கோதையும் குறிசொல்லிகளும்
- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – ஜனவரி மாதக்கூட்டம்