சொறி சிரங்கு பெரும்பாலும் பிள்ளைகளிடத்தில் அதிகம் காணலாம். இதை ஆங்கிலத்தில் Scabies என்று சொல்வார்கள். இது சார்காப்டீஸ் ஸ்கேபி ( Sarcoptes Scabiei ) என்ற நுண்ணிய உண்ணி வகையால் உண்டாகிறது. இந்த நோய் உலகில் மிகப் பழைமையான நோயாகும். இன்றும் இது உலகின் எல்லா நாடுகளிலும் காணப்படுகிறது. வருடந்தோறும் சுமார் 300 மில்லியன் பேர்களுக்கு இது உண்டாகிறது. இது தோல் மூலம் பரவும். இது அதிகமான அரிப்பை உண்டுபண்ணும். இது சிறுவர் முதல் பெரியவர் வரை எந்த வயதினரையும் தாக்கலாம். குறிப்பாக பள்ளி விடுதிகள், மருத்துவமனை படுக்கைகள், சிறைச்சாலைகள், வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கும் அறைகள் போன்ற இடங்களில் இது அதிகம் காணப்படும். உடல் உறவு மூலமும் இது பரவலாம்.
இந்த உண்ணி மனிதர்களின் தோலில்தான் வாழ்ந்து பெருகும். புணர்தலுக்குப்பின் ஆண் உண்ணி இறந்துவிடும். கருவுற்ற பெண் உண்ணி தோலில் 2 முதல் 3 மில்லிமீட்டர் வரை தோலுக்கு அடியில் புகுந்து விடும். பகலில் முட்டைகள் இடும். ஒரு பெண் உண்ணி நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 முட்டைகள் வீதம் சுமார் 2 மாதங்கள் வரை முட்டையிடும். அதன்பின் அது இறந்துவிடும். முட்டைகள் 72 முதல் 96 மணி நேரத்தில் போரித்துவிடும்.முதலில் புழுவாகத் தோன்றி பின் உண்ணியாக மாறிவிடும்.
* உடலுறவு
உண்ணியைக் கொல்லும் பென்சில் பெனசோஏட் ( Benzyl Benzoate ) , ஸ்கேபோமா ( Scaboma ) போன்ற மருந்துகளை உடல் முழுதும் தடவி மறுநாள் குளிக்கவேண்டும்.இதுபோன்று தொடர்ந்து செய்யவேண்டும்.
சொறி சிரங்கு சாதாரண நோயாக இருந்தாலும் அது தோலில் புண் உண்டுபண்ணுவதால்,அங்கு கிருமிகள் உள்ளே புக ஏதுவாகிறது.குறிப்பாக தோலின் மேலுள்ள ஸ்டே பைலோகாக்கஸ் பேக்டீரியா கிருமிகள் இரத்தம்மூலம் சிறுநீரகம் சென்று அதைத் தாக்கும் ஆபத்து உள்ளது. ஆதலால் சொறி சிரங்கை உடன் சிகிச்சை மூலமாக குணப்படுத்துவது நல்லது.
- இரண்டு விண்மீன்கள் மோதிக் கொள்ளும் போது ஒன்றாகி விண்வெளியில் கதிரியக்க மூலக்கூறுகளைப் பொழிகின்றன.
- பீட்டில்ஸ் இசைப் பாடல்கள்
- மருத்துவக் கட்டுரை — சொறி சிரங்கு ( SCABIES )
- தொடுவானம் 233. லுத்தரன் முன்னேற்ற இயக்கம்
- உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 16 -ஓரின ஈர்ப்பு மாற்றம் குறித்த இரு படங்கள் (Conversion theraphy)
- உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 17 – தி க்ரையிங் கேம்
- கலைஞர் மு கருணாநிதி –