மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++
அதோ ! அங்கோர் இடமுண்டு !
அங்கே நான் போவ துண்டு
இதயம் ஒடியும் போது,
சிரம் தாழும் போது,
என் மனக் கோட்டை அது !
காலம் காத்திருப்ப தில்லை !
தனித்துள்ள போது எனக்குன்
இனிய நினைவு எழும் !
நேசிப்ப துன்னை மட்டும் என்று
நீ சொன்ன வாசகம், தினம்
நீ புரியும் செயல்கள் ,
மனதைச் சுற்றி வட்டமிடும் !
மனதில் துயரில்லை எனக்கு !
அது தெரியாதா உனக்கு ?
துயர்தரும் மறுநாள் இல்லை எனக்கு !
அது தெரியாதா உனக்கு ?
அதோ ! அங்கோர் இடமுண்டு !
அங்கே நான் போவ துண்டு
இதயம் ஒடியும் போது,
சிரம் தாழும் போது,
என் மனக் கோட்டை அது !