வாட்ஸப் தத்துவங்கள்

author
0 minutes, 4 seconds Read
This entry is part 7 of 8 in the series 21 ஏப்ரல் 2019

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை `ஒழுங்கில்லாதவன்’னு சொல்லும் சமூகம், காலர் பட்டனையும் சேர்த்துப் போட்டால், `லூஸு’ எனச் சொல்லிவிடுகிறது.
—————————————-
`Sorry’ என்பது மட்டுமல்ல… `சாப்பிட்டியா?’ என்பதும் ஒரு வகையில் சமாதான வார்த்தைதான்!
—————————————-
`உன் இஷ்டம்’ என்பது பதிலாக வந்தால் `எனக்கு இஷ்டமில்லை’ என்று பொருள்!
—————————————-
கையில் பெப்சி, கோக், லேஸ் வைத்திருந்தால் இயல்பாகப் பார்க்கிறார்கள். ஒரு கொய்யாக்காய் வைத்திருந்தால் விநோதமாகப் பார்க்கிறார்கள்.
—————————————-
டிவி-யில் சேனல் மாத்தாம ஒரே சேனலை ரொம்ப நேரம் பார்த்துட்டிருந்தா, ஒண்ணு ரிமோட் சரியில்லாம இருக்கணும்… இல்லை மனசு சரியில்லாம இருக்கணும்.
—————————————-
திருவள்ளுவரே இப்போ இருந்து திருக்குறள் எழுதினாலும், இறுதி வரியில் `தமிழனாய் இருந்தால் ஷேர் செய்!’ என்றே எழுதியாகணும். ட்ரண்ட் அப்படி.
—————————————-
மிடில் க்ளாஸ் வாழ்க்கை எவ்வளவு கஷ்டம்! எதிர்வீட்டுக்காரன் பார்த்தால் பணக்காரனா நடிக்கணும். சொந்தக்காரன் கடன் கேட்டால் ஏழையா நடிக்கணும்.
—————————————-
நாட்ல பாகுபலி மட்டும்தான் பொண்டாட்டிகூட சேர்ந்து எதிரியோட சண்டை போடுறான். மத்தவனுக்கெல்லாம் பொண்டாட்டிகூட சண்டை போடவே நேரம் சரியாருக்கு.
—————————————-
எதுக்கு வாங்கினோமோ அதைத் தவிர, மற்ற எல்லாத்துக்கும் பயன்படும் ஒரு பொருளுக்கு டைனிங் டேபிள் என்று பெயர்
—————————————-
தனிமை என்பது நிம்மதியாக போன் நோண்டிக்கொண்டிருப்பது.
—————————————-
`உனக்குக் கால் வலிக்கும், நான் தூக்கிக்குறேன்’ என்று சொல்லும்போது வேண்டாம் என்றும், `கை வலிக்குது கொஞ்சம் இறங்கு’ என்று சொல்லும்போது இறங்காததும் குழந்தையின் டிசைன்!
—————————————-
எது வேண்டும் என்று நீ ஆசைப்பட்டாயோ
அது வேண்டாம் என்று உன்னையே சொல்ல வைக்கும் இந்த வாழ்க்கை… 
————————————

Series Navigationதமிழ் நுட்பம் – 15 – செயற்கை அறிவும் மனித வளங்களும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *