2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

author
0 minutes, 43 seconds Read
This entry is part 6 of 17 in the series 23 அக்டோபர் 2022

2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

 

அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 26வது (2021) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எழுத்தாளர் சி. மோகன், ஆய்வாளர் வ. கீதா, மொழிபெயர்ப்பாளர் சண்முகசுந்தரம் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு 2021 ஆம் ஆண்டின் விருதுக்குரியவர்களாக கீழ்காணும் இரு எழுத்தாளர்களை ஒரு மனதாகத் தேர்வு செய்துள்ளது.

  1. அஸ்வகோஷ் – புனைவற்றப் படைப்புகள்
  2. வண்ண நிலவன் – புனைவிலக்கியம்

                             

ஒவ்வொன்றும் ரூ 1,00,000 மதிப்புள்ள இவ்விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

 

விருதாளர்களின் பங்களிப்புகளின் முக்கியத்துவங்களைப் பற்றிய நடுவர் குழுவின் அறிக்கைகளும், அவர்களைப் பற்றிய குறிப்புகளும், அவர்களின் படைப்புகளின் பட்டியல்களும் அடுத்த பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

 

இந்தச் செய்தியை தங்கள் தொலைகாட்சி, செய்தித்தாள், அல்லது பத்திரிகையில் விரிவாக வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

‘விளக்கு’ செயற்குழு

அக்டோபர் 10, 2022

 

அஸ்வகோஷ்

விருதுக் குறிப்பு

2021ஆம் ஆண்டு, புனைவற்ற எழுத்துகள் வகைக்கு விளக்கு விருது பெறும் இராசேந்திர சோழன், அஸ்வகோஷ் என்ற பெயரிலும் எழுதியவர். சிறுகதை, குறுநாவல், நாடகம் எனப் புனைவுப் பாதையில் இவர் மேற்கொண்ட பயணம் பிரத்தியேகமானது. கம்யூனிச சித்தாந்த ஈடுபாடு கொண்ட இவருடைய எழுத்துகள், அவற்றின் அழகியல் வெளிப்பாடு காரணமாக, கலை சித்தாந்த ஈடுபாடு கொண்டவர்களாலும் கொண்டாடப்பட்டது.

அதேசமயம், இவருடைய அ-புனைவு எழுத்துகள் காலத்தின் தேவையறிந்து வெளிப்பட்டவை. அறிவை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்ற இலக்கோடும் முனைப்போடும் எழுதப்பட்டவை. இவ்வகையில், கூடங்குளத்தில் அணு மின் நிலையம் உருவாக்கப்பட்டபோது இவர் எழுதிய, ‘அணுசக்தி மர்மம்: தெரிந்ததும் தெரியாததும்’; நவீன நாடகத்துக்கான அடிப்படை நூலாக எழுதிய, ‘அரங்க ஆட்டம்’; பின்நவீனத்துவம் தமிழில் அறிமுகமானபோது எழுதிய, ‘பின்நவீனத்துவம்: பித்தும் தெளிவும்’ ஆகிய நூல்கள் தமிழ்ச் சூழலில் மிக முக்கியமானவை. தீர்க்கமான சிந்தனையாளர் மட்டுமல்ல, களச் செயல்பாட்டிலும் அறிவை ஜனநாயகப்படுத்துவதன் அவசியம் குறித்த நம்பிக்கையோடு இயங்கியவர்.

 

 

எழுத்தாளர் பற்றிய குறிப்புகள்

இயற்பெயர்

இரஇராசேந்திரசோழன்

புனைபெயர்

அஸ்வகோஷ்

மனைவி

ராஜகுமாரி

பிறந்த ஊர்

உளுந்தூர்ப்பேட்டை

கல்வித்தகுதி

ஆசிரியர் பயிற்சி

தொழில்

ஆசிரியர்

பணிபுரிந்தபத்திரிகைகள்

பிரச்சனை

 

உதயம்

 

மண்மொழி

புனைவிலக்கியம்

இராசேந்திரசோழன் குறுநாவல்கள்

 

சிறகுகள் முளைத்து

 

பரிதாப எழுத்தாளர் பண்டித புராணம்

 

இராசேந்திரசோழன் சிறுகதைகள்

 

21வது அம்சம்

 

பதியம் நாவல்

 

காவலர்  இல்லம்  நாவல்

 

புற்றில் உறையும் பாம்புகள்

 

சவாரி

நாடகம்

தெனாலிராமன் நகைச்சுவை நாடகங்கள்

 

மரியாதைராமன் மதிநுட்ப நாடகங்கள்

 

அஸ்வகோஷ் நாடகங்கள்

 

அரங்க ஆட்டம்

 

நாளைவரும் வெள்ளம்

 

விசாரணை

 

வட்டங்கள்

 

மீண்டும்வருகை

கட்டுரைகள்

ஐரோப்பிய இந்திய நாடகம்

 

கருத்தியல் மதம் சாதி பெண்

 

இயக்குதல் கோட்பாடு

 

தமிழ் நாடகம் கட்டுரைகள்

 

மண்மொழி மனிதம் நீதி

 

மிதிபடும் மானுடம் மீட்பின் மனவலி

 

தமிழகம் தேசம் மொழி சாதி

 

கருத்தியல் மதம் சாதி பெண்

 

பெண்கள் சமூகம் மதிப்பீடுகள்

 

மொழிக்கொள்கை

 

சாதியம் தீண்டாமை  தமிழர் ஒற்றுமை

 

இந்தியம் திராவிடம் தமிழ்த் தேசியம்

 

அம்பேத்கரின் சாதி ஒழிப்பு – சில சிந்தனைகள்

 

பகுத்தறிவின் மூடநம்பிக்கைகள்

 

தலித்தியம் – நோக்கும் போக்கும்

 

தமிழ்த்தேசமும் தன்னுரிமையும்

 

தீண்டாமை ஒழிப்பும் தமிழர் ஒற்றுமையும்

 

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தேவைதானா?

 

பின்நவீனத்துவம் –பித்தும் தெளிவும்

 

மார்க்சிய மெய்யியல், கடவுள் என்பது என்ன?(1995)

 

சொர்க்கம் எங்கே இருக்கிறது? (2006)

 

தமிழ்த் தேசியம் என்றால் என்ன?

 

பொதுவுடைமையும் தமிழர்களும்

 

அணுசக்தி மர்மம்

 

அணு ஆற்றலும் மானுட வாழ்வும்

 

அணுசக்திமர்மம் –அறிந்ததும் அறியாததும்

விருதுகள்

விஜயா வாசகர் வட்ட விருது (2020)

 

புனைவிலக்கியத்துக்கான கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது (2021)

 

          

 

 

வண்ணநிலவன்

விருதுக் குறிப்பு

2021ஆம் ஆண்டு, புனைவிலக்கியத்திற்கான விளக்கு விருது பெறும் வண்ணநிலவன், தமிழ் நவீன இலக்கியத்தில் ஆற்றல்மிக்க படைப்பு சக்தி,. சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என எழுத்தின் பல்வேறு திசைகளில் தொடர்ந்து இயங்கி வருபவர். மனித குலத்துக்கான ஓர் ஒளியாகத் துலங்கும் எழுத்து இவருடையது.

1970க்குப் பின்னான நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில், தன் புனைவுகள் வழி, சில புதிய சாத்தியங்களைக். கண்டடைந்தவர். புனைவுக் கற்பனையின் சாத்தியங்களையும், படைப்புலகம் சார்ந்த உள்ளார்ந்த பயணத்தின் வழியாக மொழி வெளிப்பாட்டின் சாத்தியங்களையும் விஸ்தரித்தவர். இவருடைய ‘பாம்பும் பிடாரனும்’ சிறுகதைத் தொகுப்பு, தமிழ்ச் சிறுகதையை புதிய திசைக்கு இட்டுச் சென்றது. ‘கடல்புரத்தில்’, ‘கம்பாநதி’, ‘ரெயினீஸ் ஐயர் தெரு போன்ற நாவல்கள் தமிழ் நாவல் பரப்புக்கு வளம் சேர்த்தன. கலை நம்பிக்கையோடும் நேர்மையோடும் அமைந்த ஆரவாரமற்ற செயல்பாடுகள் மூலம் நவீனத் தமிழ் இலக்கியத்துக்கு வளமான பங்களிப்புகள் ஆற்றியிருப்பவர்.

 

 

 

எழுத்தாளர் பற்றிய குறிப்புகள்

இயற்பெயர்

ராமச்சந்திரன்

புனைபெயர்கள்

வண்ணநிலவன்

 

துர்வாசர்

 

சந்திரன்

தகப்பனார்

தா.மு.உலகநாதன்

தாயார்

ராமலெட்சுமி

மனைவி

சுப்புலெட்சுமி

மகன்

ஆனந்த்சங்கர்

மகள்கள்

சசி (எ) தனலெட்சுமி

 

உமா

பிறந்த ஊர்

திருநெல்வேலி

கல்வித் தகுதி

பள்ளி இறுதிவகுப்பு

தொழில்

எழுத்தாளர் / பத்திரிகையாளர்

பணிபுரிந்த  பத்திரிகைகள்

கண்ணதாசன் (1973)

 

புதுவைக்குரல் (1974)

 

கணையாழி (1974)

 

அன்னைநாடு (1975)

 

துக்ளக் (1976-1990)

 

சுபமங்களா (1993-1995)

 

மீண்டும்துக்ளக் (1995 முதல்)

நாவல்கள்

நேசம் மறப்பதில்லை நெஞ்சம் (1976)

 

கடல்புரத்தில் (1977)

 

கம்பாநதி (1977)

 

ரெயினீஸ் ஐயர் தெரு (1979)

 

காலம் (2002)

 

உள்ளும் புறமும் (2010)

 

எம். எல் (2018)

சிறுகதைத் தொகுப்புகள்

எஸ்தர் (1976)

 

பாம்பும் பிடாரனும் (1978)

 

தர்மம் (1982)

 

உள்ளும் புறமும் (1990)

 

தேடித்தேடி (1990)

 

தாமிரபரணிக் கதைகள் (1992)

 

வண்ணநிலவன் கதைகள் (2012)

 

மழைப்பயணம் (2019)

கவிதைத் தொகுப்புகள்

மெய்ப்பொருள்  (1985)

 

காலம் (1994)

கட்டுரைகள்

மறக்க முடியாத மனிதர்கள் (2012)

 

பின் நகர்ந்த காலம் (2012)

 

ஒரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள் (2012)

 

சில இயக்குநர்கள் சில திரைப்படங்கள் (2014)

 

பின்நகர்ந்த காலம் – இரண்டாம் பாகம் (2019)

 

துர்வாசர் கட்டுரைகள் (2019)

 

இவை தவிர இன்னும் தொகுக்கப்படாத முன்னூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள்

சினிமா அனுபவம்

‘அவள் அப்படித்தான்’ திரைப்பட வசனகர்த்தாக்கள் மூவரில் ஒருவர்

பெற்ற விருதுகள்

இலக்கியச் சிந்தனை விருது (1977)

 

தமிழக அரசு விருது (1983)

 

ராமகிருஷ்ண ஜெய்தயாள் மனிதநேய விருது (1998)

 

சாரல் விருது (2012)

 

எஸ்.ஆர்.வி. விருது (2013)

 

கவிஞர் வாலி விருது (2015)

 

விஜயா வாசகர் வட்டத்தின் ஜெயகாந்தன் விருது (2017)

 

பெரியசாமித்தூரன் தமிழ்ப் படைப்பாளர் விருது (2017)

 

இலக்கியச் சிந்தனையின் பம்பாய் ஆதிலட்சுமணன் விருது (2018)

 

கோயமுத்தூர் புத்தகத் திருவிழா வாழ்நாள் சாதனையாளர் விருது (2019)

 

 

Series Navigationநாசாவின் முதற்பெரும் வெற்றி : விண்கணை தாக்கி விண்பாறை சுற்றுப் பாதை சிறிதாகி உள்ளதுஒளிப்பரவல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *