புற இயக்கி !

This entry is part 1 of 6 in the series 8 ஜனவரி 2023

சி. ஜெயபாரதன், கனடா.

இமயத் தொட்டிலை ஆட்டி 

எப்படி  எழும் பூகம்பம் ?

பசிபிக் தீவுகளில்  

குப்பென

எப்படிக் குமுறிடும்

எரிமலை ?

பூமியின் உட்கருவிலே 

தீக்குழம்பை 

ஈர்ப்புக்கு எதிராய்

பல்லாயிரம் மைல் வெளித் தள்ளும் 

அசுர அணு உலை ஒன்று

எப்படி உருவானது ?

ஆழ்கடல் அடியில் பன்னூறு

அணுகுண்டு வெடித்து 

அசுரச் சுனாமிப் படை 

அலைகள் 

எப்படிக் கரையேறி

அழிக்கும் ?

தாயின் கர்ப்ப பையில் 

அற்புதச்  சிசு 

எப்படி உருவாகுது,

பத்து மாதம் வளர்ந்து ?  

மாங்கனி, பலா, வாழை,  ஆப்பிள்

தேங்காய், கரும்பு, திராட்சை, 

மாதுளை, பீச்சு, பேர்

கனி வகைகளில்

எப்படி இனிப்புச் சார் சுரக்குது ?

பற்பல வண்ணங்களில்

வானில்

பறக்கும் புல்லினம்

எப்படித் தோன்றின ?

புற இயக்கி இன்றி, இவ்வகை

எல்லா

அக இயக்கிகள் 

எப்படி வினையாற்றும் ?

Series Navigationஅந்தக்கரணம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *