கேரளா நெல்வயல் மற்றும் நீர்பாங்கான பகுதி பாதுகாப்பு சட்டம் 2008

This entry is part 40 of 45 in the series 9 அக்டோபர் 2011

 

தமிழகத்தில் பல ஆண்டுகளாக   சென்னை போன்ற பெருநகரங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள  நெல்வயல்கள்  குடியிருப்பு மனைபிரிவுகளாக மாற்றப்பட்டு வருகின்றன..  குளம் ஏரி போன்ற பகுதிகளின கரைகள் நீர்பிடிப்பு பகுதிகள்  ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குடிசைகள் போடபட்டு அதனால்  அவைகள் குட்டைகளாகிவிட்டன. . காயல்களும் சதுப்பு நிலங்களும் மண்அடிக்கப்பட்டு பெரும் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்பட்டு உள்ளன. நீர் பிடிப்பு பகுதிகள் நீர்வரத்து பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டு   வயல்களுக்கு பாசனம் தடைபட்டு விட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள வேளாண் விளைநிலங்களின் மொத்தபரப்பு  வெகுவாக குறைந்து விட்டது. இதனை எதிர்த்து சிலர் குரல் கொடுத்தர்லும்  பெரும்பான்னையானோரின் அக்கறையில்லாமையாலும், அரசின் கவனக்குறைவினாலும் நடவடிக்கையின்மையாலும் இன்னும் சில ஆண்டுகளில் அரிசிக்கு ஆந்திராவையும் கர்நாடகவையும் ஏன் கேரளாவையும் நம்பி நிற்க வேண்டிய நிலைமைக்கு நம் தமிழகம் தள்ளப்படும் அபாயம் உள்ளது.

 

 

கடந்த முந்தைய திமுக அரசின் வேளாண் அமைச்சர் தங்களது ஆட்சியின் இறுதி பகுதியில்   விளைநிலங்களை பாதுகாக்க சட்டம் கொண்டு வரப்படும்  என  குமரி மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் தெரிவித்தார்  அதோடு அது காற்றில் விடப்பட்டது. தற்போதைய அதிமுக அரசு அதிக பகுதிகளை வேளாண் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என  அறிவித்து உள்ளது. உருப்படியாக நடவடிக்கை உடனடியாக எடுத்தால்  நல்லது.

 

விளைநிலங்கள் ஏரி குளங்களை பாதுகாக்கும்  நடவடிக்கையால் கட்சிகளின் வாக்கு வங்கி அதிகப்பட போவதில்லை.. வேண்டுமானல்  குறையத்தான்  வாய்ப்பு உள்ளது. எனவே எல்லா கட்சிகளும் இந்த விஷயத்தில்  எனோ தானோ என்றுதான் உள்ளன.இருந்தாலும் வியாதிக்கு மருந்து கசப்பாக இருந்தாலும் குழந்தை அழுதாலும் மருந்தினை புகட்டும் தாய் போல் அரசு காலதாமதம் இல்லாமல்  விளைநிலஙகளைஞம்  நீர்பிடிப்பு பகுதிகயையும்  ஏரி குளங்களையும்.  சுற்று சூழலுககாக  பாதுகாக்க காக்க வேண்டிய பகுதிகளையும் வேறு பயன்பாட்டிற்காக மாற்றப்படுவதை ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த நடவடிக்கையில் நமக்கு முன்னோடியாக  வழிகாட்டும் விதமாக  பக்கத்து மாநிலமான கேரளா, கேரளா நெல்வயல் மற்றும் நீர்பாங்கான பகுதி பாதுகாப்பு சட்டம் 2008 (THE KERALA  CONSERVATION OF PADDY LAND AND WETLAND ACT 2008 )எனும் புதிய சட்டம் ஏற்றி . நெல்வயல்களை நீர் ஆதார பகுதிகளை பாதுகாத்து  நெல்விளைச்சலை பெருக்கி  உள்ளது  சுற்றுசுழல் சமனிலையினை பேணி வருகிறது. உணவு பரதுகாப்பினை உறுதி செய்து உள்ளது.

 

மேற்படி சட்டத்தின் முக்கிய பிரிவுகள் பின் வருவன:

 

இந்த சட்டம் அமலுக்கு  வ்நத நாளிலிருந்து   வயல் சொந்தக்காரர்/ வயலை கையப்படுத்தி இருப்பவர்/ வயலை பொறுப்பில் வைத்திருப்பவர் ஆகியோர்  நெல்விளையும் வயல்களை ( உள்அடக்கம்:வரப்பு, நீர்வரும் ஓடை,குடடை, கால்வாய்) சட்டத்தில் அனுமதிக்கப்பட்டத்திற்கு மாறாக வேறு பயன்பாட்டிற்கு மாற்றக்கூடாது(பிரிவு 3)  நீர்பகுதிகளை ( காயல், உப்பங்களி. சதுப்பு நிலங்கள்  போன்ற ஈரமான பகுதிக்ள) வேறு பயன்பாட்டிற்றுக்கு மாற்ற  தடை விதிக்கப்படுகிறது..(பிரிவு 11)

 

 

நெல் வயல்கள் வேறு பயன்பாட்டிற்கு மாற்றபடுவதை கண்காணிக்க  கிராமஅளவில் , மாவட்ட அளவில், மாநில அளவில  தனிதனித்தனியாக குறிப்பிட்ட அதிகாரத்துடன் கண்காணிப்பு அமைப்புகள்  அமைக்கப்பட்டு உளளன.

 

உள்ளாட்சிநிலை க்ணகாணிப்பு அமைப்பு:-

 

உள்ளாட்சி தலைவரை தலைவராக கொண்டு  வேளாண் அலுவலர்,கிராம நிர்வாக அலுவலர், விவசாயிகள் சார்பாக 3 உறுப்பினர்கள் அடங்கிய உள்ளாட்சி நிலை கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்படுகிறது. (பிரிவு 5) இந்த அமைப்பின் ஆயுள்காலம் மூன்றாண்டுகளாகும்.

 

 

இந்த அமைப்பு   இச்சட்டதிற்குட்பட்டு நெல்வயல்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதற்கு பரிந்துரை செய்யும் அமைப்பாக உள்ளது.  ஊரகபகுதிகளின் வயலின் சொந்தக்காரர் மொத்த வயல்பகுதியில் 10 சென்ட்க்கு மிகாமல் , நகர்பகுதிகள் 5 சென்ட்க்கு மிகாமல்   வீடு கட்டுவதற்காக வயற்காட்டை மாற்ற அனுமதி அளிக்கப்படுகிறது

 

.இச்சட்டத்திற்கு புறம்பாக யாராவது நடந்தால் வருவாய் கோட்ட அலுவலருக்கு இந்த அமைப்பு அறிக்கை அனுப்பும்.

 

வயற்காட்டை வேறு பயன்பாட்டிறக்கு மாற்றவதாக புகார்வந்தால்  அதனை தடுக்கும்.

வயற்காடடை விதைக்காமல் வைத்திருந்தால்  அதற்காக காரணத்தை கண்டு விவசாயிக்கு ஆலோசனை வழங்கி  இடைபயிர் அல்லது நெல்லை விளைவிக்க உதவும்

 

இந்த அமைப்பின் ஆளுகைக்குள் வரும் பகுதியின் வயல்கள் பற்றிய அனைத்து தகவல்களை  திரட்டி வைத்திருக்கும்.

 

 

 

 

மாநிலநிலை கண்காணிப்பு அமைப்பு :-

 

அரசால்  நியமனம் செய்யப்படும் வேளாண் உற்புத்தி ஆணையர், நிலவருவாய் ஆணையர், சுற்றுசுழல் வல்லுநர்.வேளாண் விஞ்ஞானி ஆகியோர் கொண்ட அமைப்பாக மாநிலநிலை கண்காணிப்பு அமைப்பு இருக்கும்(பிரிவு8)

 

மாவட்ட நிலை கண்காணிப்பு அமைப்பு :

 

மாவட்ட ஆட்சித்தலைவரால்  உருவாக்கப்படும். இதில்  வருவாய் கோட்ட அலுவலா. முதன்மை வேளாண் அலுவலர்  மற்றும் ஆட்சித்தலைவரால் நியமிக்கப்படும் 3 விவசாயிகள் இருப்பார்கள்.(பிரிவு 9)

அலுவலர்களின் அதிகாரங்கள் :-

 

வேளாண்அலுவலர்  அறிக்கை அனுப்பும் அலுவலர் ஆவார்(பிரிவு 7). வயல்களை இச்சட்டத்திற்கு புறம்பாக மாற்றினால் அதனை உடனே  கோட்ட வருவாய் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும் . தவறினால் இச்சட்டத்தின் 23 ம் பிரிவின் படி குற்றமாகும். பொது நோக்கத்திற்காக நெல்வயல்களை கையகப்படுத்த இச்சட்டத்தில் இருந்த விதிவிலக்கு அளிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது (பிரிவு 10). சட்டம்   நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து இந்த சட்டத்தின் பிரிவுகளுக்கு புறம்பான நடவடிக்களை கண்காணிக்கு அதிகாரம் வருவாய் கோட்ட அலுவலருக்கு வழங்ககப்பட்டு உள்ளது.    இச்சட்டத்திற்கு புறம்பாக  வயற்கள்  மாற்றப்பட்டால் அதனை மீட்டு மீண்டும் விளைநிலமாக்காவும் அதற்கான தொகையினை சம்பந்தபட்டவர்களிடமிருந்து வசூலிக்கவும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அதிகாரம் உள்ளது. (பிரிவு 13)

 

 

 

விளைச்சளை பெருக்க நடவடிக்கை –

 

    நெல் விளைச்சலை  அதிகப்படுத்த நெல்விளைவிப்பவர்களுக்கு உதவி/ ஊக்கதொகை வழங்கப்படும் (பிரிவு 4).  விவசாயி வயலில் விதைக்காமல் தரிசாக விட்டால் அவரை கொண்டோ அவர் விரும்பும் ஒருவரை கொண்டோ நெல்லையோ அல்லது இடைபயிரையோ  விதைக்க கட்டளையிடலாம்.( பிரிவு 15) அப்படி அந்த விவசாயியால் நியாயமாக காரணத்தால்  விதைக்க முடியாவிட்டால்  விவசாயிடம் காரணத்தை எழுதி வாங்கி  அந்த விவசாயி விரும்பும் காலம் வரை அந்த வயலில் ஊராட்சி நிர்வாகத்தை கொண்டு விவசாயம் செய்யப்படும். உளளாட்சி நிர்வாகமே  விவசாயம் செய்யலாம் அல்லது விவசாய சங்கங்களை கொண்டோ, சுயஉதவிக்குழுக்களை கொண்டோ மற்றவர்களை கொண்டோ விவசாயம் செய்யலாம்.(பிரிவு 16)

 

 

சட்டபடியான தண்டைகள் மற்றும் நடவடிககைகள்:-

 

பிரிவு 16 ன் படி  விவசாயம் செய்ய வயலை பெறுபவர்கள்  விவசாயம் செய்யவதோடு சரி . அவர்களுக்கு வயலில்  எந்த உரிமையும் கிடையாது.  குறிப்பிட்ட காலத்திற்கு பின்  அந்த வயலை உள்ளாட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட வேண்டும்  அவ்வாறு வயலை  ஒப்படைக்க மறுத்தால்  அவர்களை  வயலைவிட்டு காலிசெய்ய அதிகாரம் வழங்கப்பட்டு உளளது. (பிரிவு 17) காலி செய்யும் நடவடிக்கையினை  எடுக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வழஙகப்பட்டு உள்ளது (பிரிவு 18)

 

 

இச்சட்டத்திற்கு புறம்பாக  வயல்பகுதி  நீர்பகுதிகளை வேறு பயன்பாட்டிற்கு மாற்ற  உபயோகிக்க  பயன்படுத்தப்படும் கனங்கள்  இயந்திரங்களை  கைப்பற்றவும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவம்  வருவாய் கோட்டாச்சியருக்கும்  காவல் துணை ஆய்வாளர் நிலைக்கு குறைவில்லாத காவல் அலுவலருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. (பிரிவு 19)

 

இசசட்டத்திற்கு புறம்பாக வயலையோ நீர்பகுதியையோ மாறறினால்  இச்சட்டத்தின்படி குற்றமாகும் . அதற்கு தண்டனையாக  6 மாதத்திலிருந்து 2 ஆண்டு வரை சிறைத் தணடனையம்  ரூ50000 த்திலிருந்து ரூ1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். (பிரிவு 23)

வயல்களை நீர்பகுதிகளை  மாற்றும் நிறுவனங்களின்  அந்த நேரத்தில் பொறப்பில் உள்ள அலுவலர்களையோ/ மாற்றுவதற்கு காரணமானவர்களையோ தண்டிக்க இச்சட்டததில் பிரிவு 24 வழி வகை உள்ளது.

 

சட்டபூர்வமான நடவடிக்கைகள்:-

இந்த சட்டம் தொடர்பாக ,முதன்மை குற்றவியல் நீதிமன்றங்களில் தான் வழக்கு தொடரப்படவேண்டும்( பிரிவு 25). உரிமையியல் நீதிமன்றங்கள் அரசுககு உரிய அறிவிப்பு வழங்காமல்  இடைக்கால தடையோ  அல்லது  நிவாரணம் வழஙக ஆணையிடக் கூடாது.( பிரிவு 26)

 

இந்த சட்டததின் நோக்கத்திற்காக  நல்லெண்ணத்தில் செய்யப்படும் நடவடிக்கை தொடர்பாக யார் மீதும் வழக்கு தொடர முடியாது.  நல்லெண்ணத்தில் அரசு செய்யும் நடவடிக்கைக்காகவோ அதனால் எற்பட்ட பாதிப்புகளுக்காகவோ வழக்கு தொடர முடியாது. (பிரிவு 29)

 

 

 

நிறைவு: :-

 

குடிக்கிற தண்ணீருக்கும்  விவசாயத்துக்கும் ஆந்திரா, கேரளா,  கர்நாடாகா போன்ற அண்டை மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய நிலையில் தமிழகம் ஏற்கெனவே உளளது. ஆற்று நீர் உரிமைக்காக அவர்களுடன் வழக்காட/ போராட வேண்டிஉள்ளது.   சோத்துக்கும் அதாவது அரிசிக்கும்  ஆந்திரா கர்நாடக  மற்றும் கேரளாவை  என் தாய்லாந்து மலேசியா இந்தோனாஷியா வியடநாம் போன்ற வெளி நாடுகளை    சார்நது நிற்க வேண்டிய நிலை வாராமல் பாதுகாக்க தமிழகத்திலும் இது போன்று ஒரு சட்டம் உடனடியாக கொண்டு வரப்படவேண்டும் .

Series Navigationஇரு கவிதைகள்கையாளுமை
author

வே பிச்சுமணி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *