ரவி அல்லது
வரப்பைத் தலையணையாக்கி
வானத்தை
உள் நோக்கிக்
கிடக்கும் பொழுது
வருடுகின்ற
கொப்பின்
இலைகள்
பறக்க வைக்கிறது
பாரிய சுகத்தில்.
தேங்கி இருந்த
பனிச் சொட்டொன்று
சிரமப்பட்டு
பயணித்து
சிரசுக்குள்
புகுந்து
சிந்தை கலைத்து
சிறையில்
தள்ளியது
பூமிக்கு அழைத்து.
***
–ரவி அல்லது.
ravialladhu@gmail.com