அவரவர்

author
0 minutes, 6 seconds Read
This entry is part 3 of 7 in the series 26 ஜனவரி 2025

ஜெயானந்தன்

ஒரு 

போதி மரத்தின்

கீழ் 

நான்கு சந்நியாசிகள் .

ஒருவர் 

தியானம். 

அடுத்தவர் 

தூக்கம்.

மூன்றாமவர் 

புல்லாங்குழல் வாசித்துக்கொண்டருந்தார் .

நான்கமவர் மரத்திற்கு 

தண்ணீர் விட்டார். 

வரும்போகும் 

சம்சாரிகள் 

தியான சந்நியாசி 

காலில் மட்டும் விழுந்து 

எழுந்துச்சென்றனர். 

மற்ற 

மூன்று சந்நியாசிகளும் 

அவரவர் 

பணிகளை 

அவரவர் செய்துக்கொண்டிருந்தனர்.

    -ஜெயானந்தன்.

Series Navigationநூல்கள் பரிசளிப்புத் திட்டம் (2023 ஆண்டில் இலங்கையில் வெளிவந்த நூல்கள்)ஜகமே மந்திரம்,  ஜகமே தந்திரம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *