ஜெயானந்தன்
அந்த நவீன பாத்திரக்கடையில் நுழைந்து,
தேடித்தேடி
பாத்திரங்களை
ஆராயும்
படிகளை தாண்டிவிட்டேன்.
எல்லா
நவீன பாத்திரங்களும்
அதனதன் தன்மைகளை கூற.
ஏனோ எனக்கு
என்
பழையப்பாத்திரங்களே
போதும்போல்தான் தோன்றியது.
புதுசோ, பழசோ
கையில் உள்ளதுதானே
வயிற்றை நிரம்பும்.
ஜெகதாம்மாளுக்கு
இது தெரியாதா,
எனக்கு தெரியாது.
அவளுக்கு
நவீன சட்டி வேண்டும்
எனக்கோ
பழைய,
மண்பாண்டம் போதும்.
எப்படியும்
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு
பிறகு
தோண்டப்போகும்
அகழ்வராய்ச்சியில்
கிடைக்கப்போவது
சட்டியும், பானையும் தானே.
தேடித்தேடி அலையும்
உடலும் உள்ளமும்
எந்த
இலக்கியவாதியின் மூளையோ,
எந்த
விஞ்ஞானியின் தேடலோ
இன்றைய
நமக்கு கிடைத்த
வாழ்க்கை.
ஜெகமே மந்திரம்
ஜெகமே தந்திரம்
பாட வேண்டும்
ஆட வேண்டும்.
-ஜெயானந்தன்.