அகர முதல “எழுத்தெல்லாம்”….(ரஜினி விருது விழா)

This entry is part 16 of 40 in the series 12 பிப்ரவரி 2012

(அதில் அசைபோட்டதே இந்த எழுத்தாளர்களின் ஊர்வலம்

எழுத்”தாளர்”கள்
===============
எழுத்துகளை ஆளுபவர்கள்
இன்று
தாள்களில் தாழ்ந்து போனார்கள்

விருது விழா
=============

விருதும் கூட‌
ர‌ஜ‌னிக்கு
விசில் அடித்த‌து.

விருது விழா
============

விருதும் கூட‌
ர‌ஜ‌னிக்கு
விசில் அடித்த‌து.

எஸ்.ரா
=======

நவீனத்துவம் பின் நவீனத்துவம்
மனக்குகையில் மத்தாப்பு கொளுத்தல்
இவரது கட்டுரையே கதை.

ஞாநி
====

கார‌ம் வேண்டும் என்ப‌த‌ற்காக எழுத்துக்க‌ளில்..
மிள‌காய்ப்பொடி..மூக்குப்பொடி..க‌டுக்காய் தூள்
இன்னும் என்னென்ன‌வோ.

சாருநிவேதிதா
=============

திகில் எழுத்துக‌ளில் திமிங்கில‌வேட்டை.
பாக்கெட்டுக்குள் ஓஷோவும் நித்யான‌ந்தாவும்
ப‌ன்னீர்ப்புகையிலையாய் குத‌ப்பிக்கொள்ள‌.

ஜெய‌மோக‌ன்
============

எழுத்துக‌ளுக்கே
ஜ‌ன்னி வ‌ர‌வ‌ழைத்து தான்
இல‌க்கிய‌ப்ப‌ணி ஆற்றி வ‌ருகிறார்.

ம‌னுஷ்ய‌புத்ர‌ன்
=============

இவ‌ர் க‌விதைத்தொகுதியில்
காமாவும் முற்றுப்புள்ளிக‌ளுமே
க‌விதைக‌ள்.

தொப்பில் மீரான்
===============

கூழாங்க‌ற்க‌ள்
கும்மாள‌ம் போட‌ட்டும்.
எழுத்துக்க‌ளின் கிம்ப‌ர்லி இவர்.

சோ
===

பேனாவை
த‌லை குப்புற‌ வைத்துக்கொண்டு
எழுதுப‌வ‌ர்.

“காவி”(ய)க்கார‌ர்க‌ள்
===================

யோகாக்க‌ளை எழுத்தாக்கி
அவ‌ற்றையும் சொத்தாக்கி ம‌ட‌ம் ஆக்கி
சொக்க‌ட்டான் ஆடுப‌வ‌ர்க‌ள்.

த‌னுஷ்
======

இவ‌ர‌து அடுத்த‌ ட‌ண்ட‌ண‌க்கா
ச‌ச்சினுக்கு.
பார‌த‌ ர‌த்னா இவ‌ருக்கு.

அ.மார்க்ஸ்
==========

அ.என்றால் “அப்படியாவது”…ஆம்
அப்ப‌டியாவ‌து கார்ல் மார்க‌ஸை
த‌மிழ் உத‌டுக‌ள் உச்ச‌ரிக்க‌ட்டுமே.

காசி ஆன‌ந்தன்
=============

குவிந்த
த‌மிழ்ச்ச‌ட‌ல‌ங்க‌ளுக்கு கூட‌
இவ‌ரின் க‌ன‌வுக‌ள் தான்.

கி.ராஜ‌நாராய‌ண‌ன்
================

எளிய‌ ம‌னித‌னுக்குள்ளும்
எழுத்துக‌ள் ஊர்ந்து கொண்டிருக்கும்
இனிப்பு இல‌க்கிய‌வாதி.

வ‌ண்ண‌நில‌வ‌ன்
==============

செய‌ற்கையின் சாய‌மே இல்லை
பேனா உழுதது.. எழுத்தின்
எலும்புக்குருத்துக்குள்ளும் தொடாது.

ஈரோடு த‌மிழன்ப‌ன்
=================

புதுக்க‌விதை
இவ‌னைத் தொட்டு
புல்ல‌ரிக்கும்.

க‌லைஞர்
========

ஆட்சிப்ப‌ல‌கையின்
அடிப்ப‌ல‌கையே…த‌மிழின்
ச‌ங்க‌ப்ப‌ல‌கை தான்.

காளிமுத்து
==========

சொல்லை உரித்து உரித்து
உயிர்க்க‌ வைப்ப‌வ‌ர்.
க‌ருவாடு மீனாகி மீனும் க‌ட‌லாகும்.

க‌ண்ண‌தாச‌ன்
============

“ம‌ழை கூட‌…தேனாக‌லாம்
ம‌ண‌ல் கூட‌…பொன்னாக‌லாம்”
தோற்ற‌து எல்லாம் நோப‌ல் ப‌ரிசுக‌ள் தான்.

வைர‌முத்து
==========

எழுத்துக்க‌ளை தாண்டிய‌ எழுத்துக்க‌ள்.
க‌விதையை தின்ற‌ க‌விதைக‌ள்.
வைர‌மும் முத்தும் ம‌ற‌ந்துபோயின‌.

வ‌ல‌ம்புரி ஜான்
=============

இவ‌ர் எழுத்து உளியில்
எழுந்த‌ சிற்ப‌ம் எரிம‌லைக்கும்
அபிந‌ய‌ம் சொல்லும்.

மு.வ‌
=====

எளிய‌ த‌மிழைக்கொண்டு க‌ட்டிய‌
ம‌ன‌ந‌ல‌ ம‌ருத்துவ‌ ம‌னைக‌ள்
இவ‌ரது நாவ‌ல்க‌ள்.

தி.ஜானகிராம‌ன்
==============

எழுத்துக்குள் எல்லாம்
நிமிண்டிய‌ நெருப்பு.
காவிரியின் ர‌த்த‌ம்.

புதுமைப்பித்த‌ன்
==============

“க‌யிற்றர‌வு” போதும்.
ம‌ன‌க்க‌ந்த‌ல்க‌ளில் எழுத்தின் காய‌ங்க‌ள்
க‌ட்டுப்போட்டுக்கொண்ட‌ன‌.

ஜெய‌காந்த‌ன்
===========

உடைத்து சுக்கு நூறாக்கு
ச‌முதாய‌த்தை.
புதிய‌ நூற்றாண்டுக‌ள் காத்திருக்கின்ற‌ன‌.

ந‌டிக‌ர் விவேக்
=============
ஒரு தடவை குமுத‌த்தில்
“சுநாமி” ப‌ற்றி இவ‌ர் க‌விதை
எல்லோரையும் அடித்துக்கொண்டு போயிற்று.

இன்குலாப்
=========

ம‌யிற்பீலி சுற்றிய‌ பேனாக்க‌ளை
முறித்துப்போட்டுவிட்டு….எழுத்துக்க‌ளில்
பீர‌ங்கிக‌ளை க‌ர்ப்ப‌ம் த‌ரித்த‌வ‌ர்.

பேப்லோ நெருதா
==================

சிலியே கிலி பிடித்த‌ போதும்
புர‌ட்சித் துப்பாக்கியின் க‌விதைப்பூ.
அமெரிக்க சதி கொன்றதற்கு நோபல் பரிசே சான்று.

கல்கி
=====

எத்தனை தலையணைகள்.
அத்தனையிலும்
சரித்திரம் விழித்துக்கொண்டிருந்தது.

அகில‌ன்
=======

காத‌ல் வைர‌த்தை
ப‌ட்டை தீட்ட‌ ஐந்து பெண்க‌ள்
இவ‌ர் பாவை விள‌க்கில்.

ச‌ர‌த் ச‌ந்திர‌ர்
=====‍‍‍‍‍‍======

வ‌ங்க‌த்து பிளேக் நோய்க‌ள் கூட‌
உயிர்பூசும் க‌தாபாத்திர‌ங்களில்.
எழுத்துக்க‌ளில் ஊமையாய் காத‌ல் ஜுர‌ம்.

காண்டேக‌ர்
==========

“கிரௌஞ்ச வதத்தில்”
எழுத்துக்கள் எல்லாம் காத‌ல் மீது
அம்புவிட்ட‌ வால்மீகிக‌ள்.

சுஜாதா
======

எழுத்துக‌ளுக்கு எல‌க்ட்ரானிக்ஸை
ஊற்றிய‌வ‌ர்….ஆயிர‌ம்
“எந்திர‌ன்”க‌ளின் அடிப்ப‌டை “சிப்”

விந்த‌ன்
=======

பாலும் பாவையும் ஒன்று போதும்
பாலைவ‌ன‌த்திலும்
த‌னியே ஊர்ந்த‌வ‌ன்.

விக்கிர‌மாதித்தன்
===============

யாதும் ஊரே!யாவ‌ரும் கேளிர்!
ஆனாலும் இவ‌ருக்கு
தாமிர‌ப‌ரணித் த‌ண்ணி போதும்.

விக்கிர‌ம‌ன்
==========

ம‌ற்ற‌வ‌ர்க‌ள் எழுத்துக்க‌ளில்
விற‌கு எரித்து ச‌மைத்து தின்றார்க‌ள்.
இவ‌ருக்கு அதுவே வேள்வி.

ஒரு புளிய‌ம‌ர‌த்தின் க‌தை ராம‌சாமி
================================

ஒரு புளிய‌ம‌ர‌ம் தான்.
“வேப்ப‌ மூட்டு” ம‌ணிக்கூண்டுக் க‌டிகார‌த்தின்
முட்க‌ளில் இன்னும் க‌ண்ணீர்த்துளிக‌ள்.

க‌ல்யாண்ஜி
==========

அந்த‌ வேலைக்காரியின்
துடைப்ப‌க்குச்சிக‌ள் ஒவ்வொன்றிலும் கூட‌
காத‌லின் ம‌த்தாப்புக்குச்சிக‌ள் தான்.

இன்னும்…ம‌ற்ற‌வ‌ர்க‌ள்
=====================

“அக‌ர‌ முத‌லி”யார்க‌ளாய்
வ‌ரிசைப்ப‌டுத்த‌லாம்….ஆனால்
ஆர்க்காட்டு முத‌லியார்க‌ளாய் அல்ல‌.

அண்ணா
========

த‌லைய‌ணைக்க‌டியில்
பெரிமேச‌னும் பொருளாதார‌மும் ஒருநாள்
ஆரிய‌மும் திராவிட‌முமாய் ஆயின‌.

பெரியார்
=======

இவ‌ர்க‌ள் “க‌ல் தோன்றி முன் தோன்றி..”
சொன்ன‌த‌ற்கு இந்த‌ ப‌ரிமேல‌ழ‌க‌ரின் உரை
..”காட்டுமிராண்டி”

கு.வெங்க‌ட‌ர‌ம‌ணி
================

காத‌லுக்கு ஊதுப‌த்தி போல்
புகை எழுப்பும் “வேல‌ண்டைன்”
எழுத்துக்க‌ள் இவ‌ர் த‌ந்த‌து.

கு.அழ‌கிரி
=========

எழுத்துக‌ளை
ம‌ண்ணாலும் ம‌க்க‌ளாலும்
பிசைந்து த‌ந்த‌வ‌ர்.

ந‌.பிச்ச‌மூர்த்தி
=============

புதுக்க‌விதையின் பிர‌ம்மா.
இவ‌ர் தொப்பூள் கொடி தாம‌ரையில் தான்
ம‌ற்ற‌ விஷ்ணுக்க‌ள் எல்லாம்.

ந‌ம் குழும‌ ப‌டைப்பாளிக‌ள்.
========================

ம‌ணி மிடை ப‌வ‌ளம் ம‌ற்றும்
முத்துக்க‌ள் தான்…..ப‌ய‌ண‌ம் தான்
விண்வெளியின் பாலைவ‌ன‌ம்.

ருத்ரா
======

ருத்ராவா? யார் அது?
ப‌த்திரிகை ஆஃபீஸ்க‌ளின்
குப்பைத்தொட்டியில் தேடுங்க‌ள்.
(ம‌ற்ற‌ ருத்ராக்க‌ள் ம‌ன்னிக்க‌)

======================================================ருத்ரா

Series Navigationமனக்கட்டுப்பாடு தியானத்திற்கு உதவாது-ஜே.கிருஷ்ணமூர்த்தி – பகுதி 3மெஹந்தி
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *