சு.சமுத்திரம்
===========
எழுத்து நிறைய கடல் உண்டு.
ஒரு துடுப்பு தேடும்
துடிப்பு உண்டு.
பி.எஸ் ராமையா
================
மணிக்கொடியை
கொடி அசைத்து
ஓட்டியவர் இவரே.
சாவி
====
மாற்றிப்படியுங்கள்.
அமெரிக்காவுக்கு “விசா”
இவரது “வாஷிங்க்டனில் திருமணம்”
மணியன்
========
ஆனந்த விகடனில்
அங்குலம் அங்குலமாய்
ஊர்ந்த எறும்பு.
ஸ்டெல்லா புரூஸ்
=================
காதலுக்கு கண்ணில்லை என்பார்கள்
நாவல்களில் காதலுக்கு
துடிப்புமிக்க கண்கள் தந்தவர்.
டாக்டர் லட்சுமி
==============
பெண்கள் என்றாலே
குத்துவிளக்கு தான் என்று
பிரம்மாண்ட கட் அவுட் வைத்தவர்.
அனுராதா ரமணன்
================
இவரது அசோக வனத்து
“சிறை” சீதைக்கு இல்லை.
ஆணாதிக்க ராமனுக்கு.
ராஜம் கிருஷ்ணன்
================
மெல்லிய கம்பிகளாய்
ரீங்கரிக்கும் எழுத்துக்கள்.
புத்தகம் முழுவதும் வீணை.
கோமல் சுவாமிநாதன்
===================
“தண்ணீர் தண்ணீர்”
தம்ளர் ஞாபகத்துக்கு வரவில்லை.
இவர் நாடகம் தான் விரிகிறது.
தென்கச்சி சுவாமிநாதன்
=====================
துக்கடா பேச்சுகள்
பக்கடாவாக சுவைத்தாலும்
ஒப்பற்ற நகைச்சுவை வடிவங்கள்.
ராஜாஜி
======
பதினெட்டு நாளின் அந்த பங்காளி போர்
இவரது”வியாசர் விருந்தில்
அற்புதமானதொரு “விஷுவல்”விருந்து.
வாலி
=====
சொற்களை ஒடித்து ஒட்டிய
இவரது “வதைப்படலத்தில்”
தமிழின் “இன்ப காண்டம்”.
மு.மேத்தா
==========
ஊர்வலமாக விட்ட எழுத்துகள்
தெருவுக்கு விட்டதல்ல
தமிழ் “கவிதையாய்” கண்விழிக்க.
நா.காமராசன்
============
தமிழ் எழுத்துக்கள் அத்தனையும்
இத்தனைத் தூரிகைகளா என
வியக்க வைத்தவர்.
எஸ்.ஏ.பி
=========
குமுதக் குடிமகன்
கோப்பை அறிந்து
ரசம் ஊற்றியவர்.
சேவற்கொடியோன்
=================
விகடனின்
“செல்லப்பிள்ளை” ஆனாலும்
வெல்லப்பிள்ளை தான் எழுத்தில்.
சிவசங்கரி
=========
இவர் “நூல்கண்டை”பிரித்தால்
கற்கண்டும் இருக்கும்..கண்ணீரின்
நண்டுகளும் இருக்கும்.
வாசந்தி
=======
எழுத்துக்குள் எல்லாம்
ஏ.சி.யின் ரீங்காரம் கேட்கும்
இதயத்து அவலங்களின் இசையில்.
இந்துமதி
========
மன எழுச்சிக்குள் பெண்ணின்
மத்தாப்பும் உண்டு
“மடிசாரும்”உண்டு.
பாலகுமாரன்
===========
சுஜாதாவை அசைபோட்டாலும்
மெர்குரி பூக்களிலிருந்து எழுத்துக்களின்
பூப்பு புனித நீராட்டு தான்.
புஷ்பா தங்க துரை
==================
புஷ்பா எங்கேப்பா என்று கேட்காதீர்கள்.
வேணுகோபால முக மூடியும் உண்டு.
கண்சிமிட்டுவதெல்லாம் ஊதாப்பூக்கள்.
ரமணிசந்திரன்
=============
டி.வி.சீரியல்களின் கண்ணீர்க்கொத்துகள்
ஊறிவருவதற்கெல்லாம்
கங்கோத்ரி இவரே.
கொத்தமங்கலம் சுப்பு
===================
“தில்லானா மோகனாம்பாள்” எழுத
உட்கார்ந்த போதே பேனாவில்
“சிவாஜி கணேசனை” ஊற்றிக்கொண்டுவிட்டார்.
==============================
- தாகூரின் கீதப் பாமாலை – 1 எங்கு போய் மறைந்தாள் ?
- அ. முத்துலிங்கம் – ஒரு வித்தியாசமான புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்க்குரல்
- நினைவுகளின் சுவட்டில் – (87)
- பேரதிசயம்
- முனைவர் மு.வ நூற்றாண்டு விழா
- அப்பாவின் சட்டை
- புலம்பெயர்வு
- சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற காவல் கோட்டம்—-ஒரு ார்வை
- மானம்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 8) எழில் இனப்பெருக்கம்
- குரு அரவிந்தனுக்கு தமிழர் தகவல் இலக்கிய விருது – 2012
- ஜென் ஒரு புரிதல்- பகுதி 31
- பேஸ்புக் பயன்பாடுகள் – 3
- பட்டறிவு – 2
- பஞ்சதந்திரம் தொடர் 32- பாருண்டப் பறவைகள்
- முன்னணியின் பின்னணிகள் – 29
- பழமொழிகளில் துரோகங்களும் துரோகிகளும்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 1
- விவேக் ஷங்கரின் ‘ தொடரும் ‘ மேடை நாடகம்
- s. பாலனின் ‘ உடும்பன் ‘
- பாலாஜி மோகனின் ‘காதலில் சொதப்புவது எப்படி? ‘
- வுட்டி ஆலனின் ‘ மிட் நைட் இன் பாரீஸ்
- ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் ‘ வார் ஹார்ஸ் ‘
- ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி
- வரலாற்றை இழந்துவரும் சென்னை
- எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.
- அணு உலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைபடும் பாதுகாப்புக் கிடங்குகள்
- இன்கம் டாக்ஸ் அரசு இணைய தளத்தில் 16A மாதிரி ஃபார்மில் தமிழன் குசும்பு…
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 12
- எழுத்தாளர்கள் ஊர்வலம் (3 ஆம் பாகம்)
- சந்ததிகளும் ரப்பர் உறைகளும்
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 15
- கவிதை
- கால காலன் “நெருஞ்சி” கவிதைத் தொகுதி எனது பார்வையில்
- ஆலமும் போதிக்கும்….!
- மீண்ட சொர்க்கம்
- அதையும் தாண்டிப் புனிதமானது…
- சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பிர்த்வ்ஸ் ராஜகுமாரன் – மீரான் மைதீன் பதிவுகள்
- இஸ்லாமிய அரசியலில் மாற்றுவாசிப்பு
- “தா க ம்”
- விளிம்பு நிலை மக்களின் உளவியல்: நீர்த்துளி: சுப்ரபாரதிமணியனின் புதிய நாவல்
- விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தெட்டு
- அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 4ஆம் கருத்தரங்க நிகழ்வு
- மலேசியத் தமிழ் இலக்கியத்தில் பெண்ணிலக்கியவாதிகள்: கருத்தரங்கம்.
- உயிர்த்தலைப் பாடுவேன்!