எழுத்தாளர்கள் ஊர்வலம் (4 ம் பாகம்)

This entry is part 45 of 45 in the series 4 மார்ச் 2012

ஆத்மாநாம்
===========

சுஜாதாவுக்குள்
சூல் கொண்ட மேகம்
இந்தக் கவிதை.

மௌனி
=======

ஞான இரைச்சல்களை
தின்று
விழுங்கியவர்.

பேயோன்
========

“பின் ந‌வீன‌த்துவ‌த்துக்கும்”
பேன்
பார்த்த‌வ‌ர்.

கி.ராஜேந்திர‌ன்
=============
க‌ல்கி வைக்காம‌ல் போன‌
முற்றுப்புள்ளிக‌ளால்
க‌ல்கியை நிர‌ப்பிய‌வ‌ர்

ஜெகசிற்பியன்
=============

உணர்ச்சியின் விளிம்புகளை
ஊசிமுனையாக்கி..அதில்
உலகத்தை நிறுத்தி வைப்பவர்.

அநுத்தமா
=========

ஈயச்சொம்பில் ரசம் வைத்துக்கொண்டே
மனித ரசாபாசங்களை
தாளித்துக் கொட்டுபவர்.

அரு.ராமநாதன்
===============

கட்டில் மெத்தை எழுத்துக்கள்
ஆனால்
தூங்குவதற்காக அல்ல.

நாஞ்சில் பி.டி சாமி
====================

“பாக்கெட்” நிறைய
திகில்களின்
பஞ்சு மிட்டாய்

பி.வி.ஆர்
==========

நூற்றுக்கணக்காய் தலையணைகளில்
இவர் எழுத்துக்களை அடைக்கலாம்.
அத்தனை உரையாடல்கள்.

எல்லார்வி
=========

அச்சு கோர்ப்பவர்கள் எழுத்துக்களை
எப்படியும் கோர்க்கட்டும்.
அத்தனையிலும் சம்பவச்செறிவுகளே.

மாயாவி
‍‍=======

அம்ப‌துகளின் எழுத்துகளில்
காத‌லையும் ஆவி பிடித்து
சிகிச்சை த‌ந்த‌வ‌ர்.

பாக்கிய‌ம் ராம‌சாமி
=================

க‌ல்கியின் உளி ம‌ணிய‌ம்.
இவ‌ர் சிரிப்பின் தூரிக‌கையோ
ஜெய‌ராஜ்.

அப்புசாமி
========

அப்புசாமி ச‌ரியான‌ ச‌ப்புசாமி.
எப்போதும் இவ‌ர் லாலிபாப்.
இவ‌ரை எழுதிய‌வ‌ரே சீதாபிராட்டியார்.

நாடோடி
=======

அர‌சிய‌ல் நெடிக‌ளை எல்லாம்
காமெடி ஆக்கி …எழுத்துக்க‌ளை
கார்ட்டூன் ஆக்கிய‌வ‌ர்.

மெரீனா
=======

தேங்கா மாங்கா
ப‌ட்டாணி சுண்டலை சுவையாய்
பொட்ட‌ல‌ம் போட்ட‌வ‌ர்.

ச‌ரோஜா ராம‌மூர்த்தி
==================

என் அரும்பு மீசைக்கு
முத‌ன் முத‌ல் அர்த்த‌ம் சொன்ன‌து
இவ‌ர‌து”இருவ‌ர் க‌ண்ட‌ன‌ர்”

கு.வெங்க‌ட‌ர‌ம‌ணி
================

எழுத்துக்க‌ளின் ந‌வ‌ர‌க்கிழிச‌ல்க‌ளில்
ந‌வ‌ர‌த்ன‌ப் பிழிய‌ல்களில்
காத‌லுக்கு அபிஷேக‌ம்.

சிற்பி பால‌சுப்பிர‌ம‌ணிய‌ன்
=======================

உளியில் தீப்பொறிகள்.
அக்கினிச்சிற்ப‌ங்க‌ளில்
அற்புத‌க்க‌விதைக‌ள்.

அழ‌.வ‌ள்ளிய‌ப்பா
===============

அம்புலிமாமாவை
பிஞ்சுக‌ளுக்குள்
பிருந்தாவ‌ன‌ம் ஆக்கிய‌வ‌ர்.

தொ.மு.பாஸ்க‌ர‌த்தொண்ட‌மான்
=============================

சேக்கிழார் இருந்தால் இவ‌ரையும்
ஒரு நாய‌ன்மார் ஆக்கியிருப்பார்.
க‌ல்வெட்டுக‌ளில் ப‌டுத்துக்கிட‌ந்த‌வ‌ர்.

===================================================ருத்ரா

Series Navigationகணேசபுரத்து ஜமீன்
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *