காரைக்குடியில் கம்பன் விழா

author
0 minutes, 3 seconds Read
This entry is part 19 of 42 in the series 25 மார்ச் 2012

காரைக்குடியில் கம்பன் விழா சிறப்புடன் நடைபெற உள்ளது். ஏப்ரல் மாதம் 3,4,5 ஆகிய நாள்களில் காரைக்குடி கம்பன் மணி மண்டபத்திலும் 6 ஆம் தேதி நாட்டரசன் கோட்டையிலும் நடைபெற உள்ளது.

 

கலந்து கொள்வோர்

3.4.2012 – செவ்வாய்- 5.30 மணி

திரு நாஞ்சில் நாடன், முனைவர் பழ. முத்துவீரப்பன், பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் மற்றும் மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளை நூல் வெளியீடு- தெ. ஞான சுந்தரம் அவர்கள் படைத்த கம்பர் போற்றிய கவிஞர்

 

4.4.2012 புதன் மாலை 5.30மணி

இயற்றமிழ் அரங்கில் பேராசிரியர் இளம்பிறை மணிமாறன், இசைத்தமிழ் அரங்கில் செல்வி வர்ஷா புவனேஸ்வரி அவர்களின் இராமாயண இசை உரை, நாடகத் தமிழ் அரங்கில் நர்த்தகி நட்ராஜ் அவர்களின் இராமாயணம் நாட்டியம்

 

5.4.2012 வியாழன் மாலை 5.30 மணி

பேரா ந. விஜயசுந்தரி அவர்கள் தலைமையில் பட்டிமண்டபம்

தலைப்பு – அரசியில் மதிநுட்பம் பெரிதும் கைவரப் பெற்றவர் கைகேயியே, அனுமனே, வீடணனே என்ற தலைப்பில் மகளிர் பட்டிமண்டபம் நடைபெற உள்ளது

 

6.4.2012வெள்ளி மாலை 5.30 மணி

கம்பன் அருட்கோயில் நாட்டரசன்கோட்டை

கலந்து கொள்வோர் பேரா. கே . கண்ணாத்தாள், பேரா வள்ளி சொக்கலிங்கம், திரு பழ. பாஸ்கரன், திரு. பால சீனிவாசன்

 

அனைவரும் வருக

கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்ப்போம்

 

 

 

அழைப்பு பார்வைக்கு உள்ளது வருக.

Series Navigationஅணு உலை எதிர்ப்பாளி ஞாநி பரப்பி வரும் தவறான கருத்துக்கள்சிந்தனைக்கூடமா ? காசாப்புக்கடையா ?
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *