அண்ணாவின் படைப்புகள் அனைத்தையும் படிக்க

அன்பார்ந்த அண்ணா பற்றாளர்களுக்கு, வணக்கம் அண்ணா பிறந்தநாளான 15.09.2012 அன்று முதல் அண்ணாவின் படைப்புகள் அனைத்தையும்  அண்ணா பற்றாளர்களும் உலகத்தில் உள்ள தமிழ் மக்கள் யாவரும் இலவசமாக படிக்கப் பயன்பெற www.annavinpadaippugal.info என்ற புதிய இணையதளம்  உலகத்திற்கு அற்பணிக்கப்பட்டுள்ளது  என்பதை மகிழ்ச்சியுடன்…

கண்ணீரில் எழுதுகிறேன்..

-முடவன் குட்டி aஇறைவன் பெரியவன்.. அவனே மகா பெரியவன்.. கலிமாவுடன் உயிர் மூச்சு குழைய அம்மா.. காதில் நீ ஊதிய சொல் ஒன்று எனது பெயராகியபோது சுற்றமும் நட்பும் சூழ இருந்தது... யாரையோ தேடுவதாய் என் கண்ணில் கண்ட நீ சொன்னாய்…

வெளிநடப்பு

சு.துரைக்குமரன் சிறு அசைவைக்கூட சுவையும் குதூகலமும் நிறைந்து ததும்பும் நிகழ்வாக்கிவிடும் குழந்தைமையைப் போல உனக்குள் என்னையும் எனக்குள் உன்னையும் தேடித் தெளியச் செய்தது காதல் தீராத விளையாட்டுகளால் பிள்ளைகளானோம் கொதித்தடங்கிய பாலில் படியும் ஆடையைப் போல நம் கொண்டாட்டங்களில் படிந்து கொண்டிருந்தது…

மறதிக்கெதிரான நினைவின் போராட்டம் – உரைகளும் கருத்தமர்வுகளும்

*மறதிக்கெதிரான நினைவின் போராட்டம் * *அறம் • அரசியல் • இலக்கியம்* *இரு நாள் உரைகளும் கருத்தமர்வுகளும்.* * * * • கலாநிதி இ. பாலசுந்தரம் • பா. தேவகாந்தன் • தீபன் சிவபாலன் • ஜெனிற்றா நாதன் •…

அவர்கள்……

- மா.சித்திவினாயகம் - இன்னமும் மணற் கிடங்குகளிலும், சுடு சாம்பலுள்ளும், காலைக்குத்தும் கற்பார்மீதும் என் வாழ்வு சந்தோசமாயிருக்கிறது.   வந்துவிழுந்த செல் துண்டுகளால் என்னைவிட்டு என் உயிர் போகாத மகிழ்ச்சி என்னுள் தாண்டவமாடுகிறது.   நான் நடந்த பாதை யெங்கும் என் இரத்தத்தைச் சந்தோசமாகப் பீச்சியடிக்கிறேன்.   வரும் சந்ததி, என் நிறமூர்த்த அலகுகளை இந்த இரத்தத் திவலைகளிலிருந்து பின்னிக்கொள்ளட்டும்.   நந்தவனமுள்ள பூஞ்சோலையில் சுதந்திர மலர் பூத்திருக்கும் என்று பூப்பறிக்க முற்பட்டவரின் சதைகள் பிய்த்துப் பிய்த்து நந்திக்கடலெங்கும் வீசிக்கிடக்கிறது.   எடுத்து மாலை தொடுங்கள் உலகக் கனவான்களே!   சாட்சியைத் தேடியும்...…

தலைமுறைக் கடன்

முகில் தினகரன் (சிறுகதை) தான் அமர்ந்திருந்த அந்த சேரை உடகார்ந்தவாறே, அப்படியும் இப்படியுமாக இடுப்பை அசைத்து சோதித்துப் பார்த்தார் கேஷியர் வரதராஜன். 'லொடக்…லொடக்" என ஒரு பக்கமாய் ஏறி இறங்கியது. குனிந்து பார்த்தார். அதன் அடிப்பகுதியில் ஒரு புஷ் மட்டும் இல்லாமலிருந்தது.…

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் இன்னும் உன் குரல் கேட்கிறது கவிதை நூலின் மீது ஒரு மதிப்பீடு

எம்.எம். மன்ஸுர் - மாவனல்லை என்றும் இலக்கியக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னகத்தே நிறுவனம் ஒன்றை வைத்திருக்கும் புரவலர் அல்ஹாஜ் ஹாஸீம் உமர் அவர்கள், எழுத்தாளர்களின் படைப்புக்களை நூல் வடிவில் கொண்டு வருவதில் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்பட்டு வருகிறார்.…

விசரி

ஆதி பார்த்தீபன்  நாளாக்கிய நாளொன்றில் அவள் வந்திருந்தாள் நாளான புண்ணிடமும்-நசுக்கப்பட்ட சீழிடமும் கதை பேசிக்கொண்டிருந்தாள் சிக்கிய முடிவழி-திக்கிய பேனினத்தை சிக்கெடுத்து ஓடவிட்டாள் அவள் காதலில் தோற்று பைத்தியமானவளோ..!! விரல்களை நளினம் செய்து காற்றுடன் காதல் பேசினாள் அவள் தன் உரப்புகளை மீட்கத்…

கவிதை

மு.கோபி சரபோஜி வெட்கமின்றி நீரையெல்லாம் அம்மணத்தால் அலசி கழுவும் சாண் பிள்ளைகள்……..   அம்மாவின் சேலைதுணியை வலையாய் சுமந்து கெரண்டைக்கால் நீரில் தாவித்திரியும் கருவாச்சி தேவதைகள்…..   காற்று கூட விதேசியாய் வேண்டாமென கரையில் வந்துறங்கும் தலைமுறை கண்டவர்கள்….   இரை…

உலக சகோதரத்துவ விழா (190-வது வள்ளலார் அவதரித்த திருநாள்)

அருட்பெருஞ்சோதி    அருட்பெருஞ்சோதி                                                                                  தனிபெரும்கருணை     அருட்பெருஞ்சோதி ஆன்மநேய அன்பர்களுக்கு வணக்கம் , இப்பிரபஞ்சத்தில்  ஆத்மிக மையம் பாரதத்திருநாட்டின்  தென்கிழக்கே இலங்கைதிருநாட்டில் சாவகச்சேரி பகுதியில்   அருட்பெருஞ்சோதி ஆண்டவர்  அருளால் ,திருஅருட்பிரகாசவள்ளலார்  தலைமையில் உலக சகோதரத்துவ விழா (190-வது வள்ளலார் அவதரித்த திருநாள்) நடக்க இருக்கின்றது. மனித பிறப்பின்  உண்மை , இறை நிலையின் ஆற்றல் இதனைஉணர்த்தும்…