Posted inகவிதைகள்
நட்ட ஈடு
பொருள் வழிப்பிரிந்ததினால் சேர்ந்து களிக்காமல் மகன் கணக்கில் இளமையில் எழுதிய நட்டத்திற்கெல்லாம் ஈடு செய்து கொண்டிருக்கிறார் முதுமையில், பேரனுடன் விளையாடும் தாத்தா. மேலும் கடனாய் முத்தங்களை வாங்கியபடி. லேசான மனங்களைப்போல் உயரே பறக்கிறது காற்றாடி வாலை வீசி... வீசி.