புற்றுச் சாமியும் உண்மையின் விளக்கமும்

தேவகாந்தன் நல்லதம்பி ஆசிரியருக்கு அது நம்பிக்கை அவநம்பிக்கை என்பவைகளுக்கு அப்பால்,  புற்றுச் சாமியைக் காண்பதிலுள்ள அந்தப் பின்னடிப்பு நேரமின்மையின் காரணமாகவே இருந்தது. இல்லாவிட்டால் மனைவி அஞ்சனாதேவியின் விருப்பத்தை மீறுகிறவரல்ல நல்லதம்பி. அவரறிந்தவரையில் புற்றுச் சாமியைத் தேடிக் கண்டுபிடித்ததொன்றும்  யாருக்கும் சுலபத்தில் இருந்துவிடவில்லை.…