இறுதி யுத்தத்தின் இறுதி போராளியை விழுங்கிய வாளில் இன்னமும் ரத்தக் கறை காய்ந்திருக்கவில்லை. வெந்தழல் மேகங்களில் நீதித்தேவதைகளைக் கண்டதாக வாக்குமூலம் அளித்தவர்கள் கொலைகளனிற்கு அனுப்பப் படுகிறார்கள். பிசாசெழுதும் வரலாற்றினில் நம்பிக்கையின் பெயரால் சிந்தப்படும் கண்ணீர்த் துளிகளுக்கு கோமாளிகளின் முகமூடி அணிவிக்கப் படுகிறது. ஓராயிரம் நூற்றாண்டுகளாக மண்ணுக்கடியில் புதையுண்டிருந்த புரட்சியின் சொல்லை விடுவித்த கவிஞன், தானெழுதிய கவிதைகளை கிழித்தெறிகிறான். கோப்பைகளில் நிரம்பிய அழுகுரல்களை பருகும் அரக்கனுக்கு தெரியவேயில்லை தான் சுவைப்பது தீரா மௌனத்தினையே […]