ரயிலடிகள்

டிக்கெட் எடுத்திட்டியா டிபன் எடுத்திட்டியா தண்ணி எடுத்திட்டியா தலகாணி எடுத்திட்டியா பூட்டு செயின் எடுத்திட்டியா போர்வை எடுத்திட்டியா போன் எடுத்திட்டியா ஐபாட் எடுத்திட்டியா… அலாரம் வெச்சுட்டியா…. கேள்விகளால் நிரம்பி வழிகின்றன தொலைதூரம் செல்லவிருக்கும் தொடர்வண்டியின் சன்னலோரங்கள் பார்த்துப் பத்திரமா போ யாருகிட்டேயும்…

போதை கனக்கும் டாஸ்மாக் குடுவை

  மாயப்போதை தேடும் மூளையோடும் எச்சிலூறும் நாவோடும் சில்லறைகளைப் பொறுக்கி போதை பதுங்கிக்கிடக்கும் குடுவையை கையகப்படுத்துகிறான் குடிமகன்.   அழுக்கடைந்த குடிப்பக மூலையில் ஆலமரக்கிளையொன்று சிந்தும் நிழலில் கோணலாய் நிற்கும் மேசையில் காக்கையொன்று நேற்றும் எச்சமிட்டிருந்தது.   முதலிரவுக்கு வந்த மனைவியைப்போல்…

பாசாங்குப் பசி

மண்டப முகப்பில் கும்பிடுகளை உதிர்த்து மணமேடை நிழற்பட பதிவு வரிசையைத் தவிர்த்து பசியாத வயிற்றுக்கு பந்தியில் இடம் பிடித்தேன் சூழலுக்கு பொருந்தா வேடம்பூண்ட இடது பக்கயிருக்கைக் கிழவியின் இலை இளைத்துக்கிடந்தது அவர் தேகம் போலவே வலதுகையால் பிட்டதை பாசாங்காய் வாய் கொறிக்க…

பொருத்தியும் பொருத்தாமலும்

விளையாட்டும் வேடிக்கையுமாய் சாலை கடக்கமுயலும் பிள்ளையை வெடுக்கென கொத்தாய் உச்சிமுடி பற்றியிழுத்துப்போகும் அம்மா! சராசரிக்கும் குறைவான புத்தியோடு சளசளவெனப்பேசும் ஒற்றை மகனுக்கு படிப்பு பணி தொழிலென எதையும் பதியனிடமுடியாமல் தவிக்கும் அப்பா! இல்லற வெம்மையில் வாசமிழந்த மலரில் நெருப்புத்துண்டங்களை தூண்டில்முள்ளாய் வீசும்…

கூடிக்களிக்கும் தனிமை

கழுத்தைக் கவ்விக்கொண்டு தொட்டிலாடுகிறது மனிதர்களற்ற வீட்டில் உடனுறங்கும் தனிமை… இரவு முழுதும் எண்ணச்சேற்றுக்குள் முதுகுதூக்கி முன்னோக்கி ஊர்ந்து நெளிந்து நெளிந்து நகர்கிறது ஒரு மண்புழு போல நள்ளிரவு விழிப்பில் புத்திக்கு முன் துயிலெழுந்து இடவலமாய்த் துழாவும் கைகளில் தாவி அப்பிக்கொள்கிறது சன்னலோர…

பெருநதிப் பயணம்

ஓடும் தடமெங்கும் வெப்பம்தின்று பள்ளங்களில் பதுங்கி நிரம்பி பாறைகளில் தாவிப்படிந்து சரிந்து விழுந்து குதித்து வழிந்து தன்னைத் தாய்மையாக்கி தன்னையே ஈன்றெடுத்து தன்னுள்ளே தன்னைச் சலித்து தன்னைத் தூய்மையாக்கி தன்னுள் புகுமனைத்தும் தாவியணைத்து நிரம்பும் அம்மணங்களைக் கழுவி நிலைதாவும் மனங்களைக் குளிர்வித்து…

இருள்

சட்டென தொலைந்த மின்சாரத்தில், மிதந்துகொண்டிருந்த ஒளியும், கசிந்து கொண்டிருந்த ஒலியும் தீர்ந்துபோனது. எங்கு நோக்கினும் அடர் இருள். சாலையில் கால் பதித்தபோது, நடுஇரவிலும் பரபரப்பாய் இயங்கும் நகரத்தின் மற்றொரு முகமாய் அமைதி நீண்டு கிடந்தது. நிலவில்லாத வெளுத்தவானம். குறை இயக்கத்தில் இருக்கும்…

சொர்க்கமும் நரகமும்

நீள் பயணங்களில் நெரியும் சனத்திரளில் பாரம் தாங்கமுடியாமலோ பத்திரமாய் உறங்கட்டுமெனவோ நம் மடிமீது வலிய இறுத்தப்படும் குழந்தையின் எப்போதாவது இதமாய் உந்தும் பிஞ்சுப்பாதம் இதழ்வழியே தவழ்ந்து ஈரமூட்டும் எச்சிலமுதம் கனவுகளில் தேவதைகள் கூட்டிடும் குறுஞ்சிரிப்பென என்னதான் சொர்க்கத்தை மீட்டினாலும் இறுதியாய் எப்போது…

தீர்ந்துபோகும் உலகம்:

  துணி மாட்டும் கவ்விகளில் முனைப்பாய் தன் நேரத்தை விதைக்கிறது அந்தக்குழந்தை ஒன்றோடோன்றை பிணைத்து பிரித்து வீடு கட்டி மகிழுந்து ஓட்டி அரைவட்டம் தீட்டி கோபுரம் எழுப்பி எழுத்துகள் பரப்பி எண்கள் அமைத்து தம்பிப்பாப்பாவுக்கு கிலுகிலுப்பை செய்து பறவைக்கு இறக்கை பொருத்தியென….…
நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சியம் – வாசிப்பனுபவம்

நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சியம் – வாசிப்பனுபவம்

உங்களைவிட சக்தி வாய்ந்த அதிகாரத்தால் நிர்பந்திக்கப்பட்டு, உங்களுக்கு சற்றும் ஒப்புதலில்லாத உறுத்தல் நிறைந்த ஒரு அநியாயத்தைச்செய்ய நேர்ந்தால் அந்த உறுத்தலோடு எத்தனை நாட்கள் உங்களால் நிம்மதியாக உறங்கிட முடியும்….? இங்கே அந்தக் காரியம் எனக் குறிப்பிடுவது ”ஒரு கொலை” எனின்! கேரள…