Articles Posted by the Author:

 • திருவழுந்தூர் ஆமருவியப்பன்

  திருவழுந்தூர் ஆமருவியப்பன்

                                                                                திருமங்கை ஆழ்வார் இந்திரியங்களால் தான்படும் பாட்டை எண்ணி வருந்துகிறார். இதிலிருந்து விடுபட திருவழுந்தூரில் வீற்றிருக்கும் ஆமருவி அப்பனைச் சரணடை கிறார். ஆநிரைகளை மேய்த்தவன் தன் இந்திரியங்களையும் அடக்கியாள வகை செய்வான் என்று நினைத்திருக்கலாம்            பார்ப்பான் அகத்திலே பால்பசு ஐந்துண்டு            மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன            மேய்ப்பாரும் உண்டாயின்            பால்பசு ஐந்தும் பாலாய்ச் சொரியுமே என்று திருமூலர் சொல்வதுபோல் ஆநிரைகளை மேய்த்து […]


 • திருப்புல்லாணியும் திருக்குறுங்குடியும்

  திருப்புல்லாணியும் திருக்குறுங்குடியும்

                            திருப்புல்லாணி என்னும் பாண்டியநாட்டு திவ்யதேசம் ராமநாத புரம் மாவட்டத்தில் ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ளது. முன்னோர்களுக்கு இங்கு நீர்க்கடன் செய்வ தால் அவர்கள் நற்கதி யடைகிறார்கள் என்ற நம்பிக்கை பரவ லாக உள்ளது..                                    திருப்புல்லாணிப் பெருமான் மேல் மையல் கொள்கிறாள் பரகாலநாயகி (பரகாலன் என்றழைக்கப் படும் திருமங்கை ஆழ்வார்) பெருமான் தன்னிடம்  சொன்னபடி தானே வந்து சேர்வான் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நாயகி ஒரு கட்டத்தில் காத்திருந்தது போதும், வெறுமனே உருகித் தவித் துக் […]


 • திருநறையூர் நம்பி

  திருநறையூர் நம்பி

                                                                                    பன்னிருஆழ்வார்களுள் ஒருவரான திருமங்கை ஆழ்வார் பல திவ்யதேசங்களுக்கும் சென்றவர். வடக்கே பதரியிலிருந்து தெற்கே திருப்புல்லாணி வரை சென்று அங்கங்கே கோயில் கொண்டிருக்கும் பெருமானைப் பாடிப் பரவி யிருக்கிறார். திருநறையூர் என்ற தலத்திற்கும் செல்கிறார்.அங்கே பெருமான் வீற்றிருக்கும் கட்டுமலைக்கு “சுகந்தகிரி” என்று பெயர். கோச்செங்கணான்                              கோச்செங்கணான் என்ற சோழமன்னன் முற்பிறவியில் சிலந்தியாகப் பிறந்திருந்தான். திருவானைக் காவில் வீற்றிருக்கும் சிவலிங்கத்திற்குத் தன் நூலால் மேல் விதானம்  அமைத்து வந்தது அச்சிலந்தி. அப்பெருமானை ஒரு யானையும் […]


 • நம்மாழ்வார் காட்டும் பரமபத தரிசனம்

  நம்மாழ்வார் காட்டும் பரமபத தரிசனம்

                                         இன்று பல இடங்களுக்கும் சென்றுவர பலவகையான போக்குவரத்து வசதிகள் உள்ளன. சந்திரமண்டலம் சென்றுவரக்கூட போக்குவரத்து வசதி வந்துவிட்டது! ககன்யான் செல்லப் பயணிகளுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார் கள்! இந்நிலையில் உலகவாழ்வை நீத்தபின் பரமபதம் சென்று அனுபவிக்கக்கூடிய எம்பெருமானின் வடிவழகையும் மேன்மை யையும்  விமானம், பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லாமல் தரி சனம் செய்ய வழிகாட்டியிருக்கிறார் நம்மாழ்வார். அவர் கூறு வதைக் கேட்போம் அவர் காட்டும் காட்சியைத் தரிசனம் செய் வோம் வாருங்கள். […]


 • பரகாலநாயகியும் தாயாரும்

  பரகாலநாயகியும் தாயாரும்

                                      பரகாலநாயகி ஒருநாள் தோழியுடன் பூக்கொய்யப் புறப்பட்டாள். இதையறிந்த பெருமான் வேட்டை யாடுபவர் போல அங்கு வந்தார்.              மைவண்ண நறுங்குஞ்சிக் குழல் பின்தாழ           மகரம் சேர் குழை இருபாடு இலங்கியாட           எய்வண்ண வெஞ்சிலையே துணையாக                 [திருநெடுந்தாண்டகம் 21] 2072 பரகாலநாயகி முன் நின்றார் கை வண்ணம் தாமரை; வாய் கமலம், கண்ணிணையும் அரவிந்தம்; அடியும் அஃதே! அவ்  வண்ணத்தவர் நிலைமை கண்டு மயங்குகிறாள். பரகால நாயகி. தோழி, குறிப்பறிந்து […]


 • அரங்கனுக்கு ஆட்பட்ட அரசர்

  அரங்கனுக்கு ஆட்பட்ட அரசர்

                                          சேரநாட்டை ஆண்ட“த்ருட வ்ரதன்” என்ற அரசனுக்கு மகனாய் கௌஸ்துபரத்தினத்தின் அம்சமாய் குல சேகரர் (ஆழ்வார்) தோன்றினார். மூவேந்தர்களையும் வென்று “கொல்லி காவலன்” ”கூடல்நாயகன்” ”கோழிக்கோன்”குலசேகரன் என்னும் விருதுகளைப் பெற்றார். இவருக்கு “த்ருடவ்ரதன்” என்ற மகனும் “இளை” என்ற மகளும் பிறந்தனர். திருமால் அடியார் களை மிகவும் உபசரித்தும் இராமாயண காலக்ஷேபத்தைக் கேட் பதில் மிகவும் விருப்பமுடையவராகவும் அரச போகங்களில் ஈடுபாடு இல்லாமலும் வாழ்ந்து வந்தார்.                                            காலம் செல்லச்செல்ல அரச போகத்தைத் துறந்து […]


 • கோவர்த்தமென்னும் கொற்றக் குடை

  கோவர்த்தமென்னும் கொற்றக் குடை

                                                           மழைக்காலங்களில் மழையில் நனையா மலிருக்க நாம் குடை பிடித்துக் கொள்கிறோம் அவை பல வண் ணங்களிலும் பல அளவுகளிலும் இருப்பதைக் காணலாம். கறுப்பு, வெள்ளை, பல வண்ணப்பூக்கள் வரையப்பட்ட குடை பெண்களுக் கான குடை, ஆண்களூக்கான குடை, பட்டன் குடை, சிறுவர்க்கான சின்னக்குடை என்று பல வகையான குடைகள்! கேரளாவில் தாழங்குடை இல்லாமல் நம்பூதிரிப் பெண்கள் வெளியே செல்ல மாட்டார்கள் என்று சொல்கிறார்கள். அரைப் பணத்துக்குப் பவிஷு வந்தால் அர்த்தராத்திரியிலும் குடை பிடிப்பான்” என்று […]


 • ஒப்பிலா அப்பன் உறையும் திருவிண்ணகர்

  ஒப்பிலா அப்பன் உறையும் திருவிண்ணகர்

                                                     திருமங்கையாழ்வாருக்கு இவ்வுலக வாழ்வில் வெறுப்பு ஏற்பட்டதால் திருவிண்ணகரில் கோயில் கொண்டிருக்கும் பெருமானிடம் தன் கருத்தைச் சொல்கிறார். விண்ணகர் மேயவனே! எனக்கு உன்னைக்காண வேண்டும் என்ற ஆவல் மிகுந்ததால் மனை  வாழ்க்கையை வேண்டாம் என்று வெறுத்து உன்னிடம் வந்திருக்கிறேன்              ஆண்டாய்! உனைக்காண்பதோர் அருள் எனக்கு                                                அருளிதியேல்              வேண்டேன் மனை வாழ்க்கை              [பெரியதிருமொழி] (6ம்பத்து 1ம்திருமொழி1) 1462 என்கிறார்.                               நீலமேகவண்ணா! சிவபெருமான் முப் புரத்தை எரிக்கச் […]


 • பரகாலநாயகியின் பரிதவிப்பு

  பரகாலநாயகியின் பரிதவிப்பு

                                           பலதிவ்யதேசங்களுக்கும் சென்றுவந்த திருமங்கையாழ்வார், திருநறையூருக்கும் செல்கிறார். இத்தலத் தில் தான் அவர் திருஇலச்சினை பெற்றார். இத்தலத்து நம்பியிடம் மிகவும் ஈடுபாடுகொண்டு 100 பாசுரங்கள் பாடியுள்ளார். மேலும் இத் தலத்து நம்பியை நாயகி பாவத்தில் அனுபவிக்க ஆர்வம் கொண்டு பெரிய திருமடலை இயற்றியுள்ளார். திருநரையூர் சென்ற பொழுது பரகாலநாயகியாகி இந்த நம்பியிடம் காதல் கொண்டதை விவரிக்கிறார். நம்பியின் அழகு.                          முருகன் என்றாலே அழகு என்று சொல்வது போல் நம்பி என்றாலும் நற்குணங்களும் வீரமும் […]


 • மன்னா மனிசரைப் பாடாதீர்

  மன்னா மனிசரைப் பாடாதீர்

                                                                               சங்ககாலப்புலவர்கள் மன்னனையும் புரவலர்களையும் புகழ்ந்து பாடுவது அக்காலத்தில் ஒரு மரபா கவே கருதப்பட்டு வந்தது. ஔவையார் கபிலர் பரணர் போன்ற பெரும் புலவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.அதியமானை,       ”நீலமணி மிடற்றொருவன் போல மன்னுக பெரும நீயே! என்று ஔவை வாழ்த்த, கபிலரும் பாரியை,       பாரி பாரி என்று பல ஏத்தி       ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்       பாரி ஒருவனுமல்லன்       மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே என்று புகழ்வதையும் […]