author

சமச்சீர் கல்வி : பிரசினைகளும் தீர்வுகளும்

This entry is part 46 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

கல்விமுறை பல விவாதங்களுக்கும், பொதுக் கருத்து உருவாக முடியாத படி தடங்கல்களுக்கும் பிறகு தி மு க ஆட்சிக் காலத்தில் சமச்சீர் கல்வி என்ற பெயரில் வேறு வேறு சரடுகளாகவும் பிரிந்து செயல்பட்டுக் கொண்டிருந்த கல்வித் திட்டங்களை ஒருங்கே கொண்டு வந்து ஒருமைப் படுத்தும் திட்டமாக முன்வைக்கப் பட்டது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்பு சமச்சீர் கல்விக்கு எதிராகவோ, ஆதரவாகவோ எந்தக் கருத்தும் முன்வைக்கப்படாமல், திமுகவின் செயல் திட்டம் என்ற முத்திரை குத்தி பாடப் புத்தகங்கள் வினியோகமும், […]

திண்ணைப் பேச்சு – கனிமொழி, சின்னக் குத்தூசி பற்றி ஜெயமோகன் பற்றி பி கே சிவகுமார் பற்றி ஸிந்துஜா

This entry is part 50 of 51 in the series 3 ஜூலை 2011

பி கே சிவகுமார் எழுதியிருந்த பத்திக்குப் பின்னால் தான் ஜெயமோகனை நான் படித்தேன். முதலாவதாக எல்லா நிகழ்வுகள் பற்றியும் எல்லோரும் அல்லது ஜெயமோகன் போன்றவர்கள் கருத்துச் சொல்லியே ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒரு அபத்தம். இரண்டாவது கனிமொழி வீழ்ச்சியைத் தொடர்ந்து கருத்துச் சொல்ல விரும்பாத ஒருவர், சின்னக் குத்தூசியின் மரணத்திற்குப் பிறகு அவரை ஏன் விமர்சனம் செய்தார் என்ற கேள்வி எழுப்புவது – ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது என்று எனக்குத் தோன்றவில்லை. சின்னக் குத்தூசியைப் பற்றி […]

திண்ணைப் பேச்சு- நன்றி ரிஷான்ஷெரீஃப்

This entry is part 43 of 46 in the series 26 ஜூன் 2011

சிங்களர்களே என்றாலே காடையர்கள் என்பதாக ஒரு பிம்பம் கடந்த் மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களில் பதிந்து விட்ட ஒன்று. தமிழ் ஈழப் போராட்டத்தில் நியாய உணர்வு கொண்ட சிங்களவர்களும் இணைந்து பணி புரிய முடியாதபடிக்கு அவர்களிடமிருந்து தனிமைப் பட்ட நிலையில் இயக்கங்களும் போராட்டங்களும் இருந்து வந்திருக்கின்றன. இது பற்றி முதன்முதலில் உணர்ச்சி பூர்வமாகவும், அறிவு பூர்வமாகவும் விவாதித்தவர் பிரமிள். அவருடைய “ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை” புத்தகத்தில் இது பற்றிக் குறிப்பிட்டிருப்பார். அந்த நூலை இன்று படிக்கும்போது வருத்தம் […]

மக்பூல் ஃபிதா ஹுசைன் – நீண்ட நெடிய கலை வாழ்வில் சில கரும்புள்ளிகள்

This entry is part 33 of 33 in the series 12 ஜூன் 2011

எம் எஃஃப் ஹுசைன் தன் 95-ஆம் வயதில் மரணமுற்ற போது மீண்டும் அவர் குறித்து எழுந்த விவாதங்களில் அவர் கலைச் சிறப்புப் பற்றி கொஞ்சமாகவும், இந்துக் கடவுளர்களை அவர் நிர்வாணமாக வரைந்திருந்ததால் எழுந்த எதிர்ப்பு அலை பற்றி அதிகமாகவும் இருந்தது. இந்தியாவிற்கு வெளியே இருந்த ஒரு இந்தியக் கலைஞனின் மரணம் இது. ஆனால் ஹுசைனின் மனம் முழுக்க இந்தியாவில் தான் இருந்திருக்க வேண்டும். அவர் கிட்டத் தட்ட அறுபதாயிரம் ஓவியங்களுக்கு மேல் வரைந்ததாய்த் தெரிகிறது. ஆனால் அடிப்படையில் […]

பாதல் சர்க்கார் – நாடகத்தின் மறு வரையறை

This entry is part 7 of 48 in the series 15 மே 2011

  கோல்கொடாவின் மையப் பகுதியில் ஒரு மாடியறை. சற்று விசாலமான அறையில் 20 லிருந்து நாற்பது பேர் உட்காரலாம். நாற்காலிகள் சுற்றி போடப்பட்டிருக்கின்றன. நாடக அரங்கின் உள்ளேயே பார்வையாளர்கள் அமர்ந்திருக்கிற முறையில் நிகழ்த்துனர்கள் சுற்றிவர நிகழ்த்துநர்கள் செல்ல வழி விட்டு நாற்காலிகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. நாடகம் பார்வையாளர்கள் நடுவிலும் சுற்றிலும் நிகழ்கிறது. இது இந்த திருப்பம், இது இந்தத் திருப்பம் என்று நாடக நடிகர் ஒவ்வொரு திருப்பமாக அந்த வட்ட அரங்கில் செல்லும் போது ஊர்வலம் ஆகிறது. […]