Articles Posted by the Author:

 • இரங்கலுரை: பெரும்புலவர் முகமட் ஹன்ஸீர்

  இரங்கலுரை:   பெரும்புலவர் முகமட் ஹன்ஸீர்   குரு அரவிந்தன் பெரும் புலவர் முகமட் ஹன்ஸீர் அவர்கள் மே மாதம் 5 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு கனடாவில் இறையடி சேர்ந்தார். கனடா தமிழ் இலக்கிய உலகிற்கு இவரது மறைவு பெரும் இழப்பாகும். சிறந்த கல்வியாளரான இவர் மதங்களைக் கடந்து கனடாவில் தமிழ் மொழி வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர். கனடாவில் இருந்து வெளிவந்த முரசொலி பத்திரிகை ஆசிரியராகக் கடமையாற்றிய போது, மரபுக் கவிதையை வளர்ப்பதற்காக அந்தப் பத்திரிகையில் […]


 • இரங்கலுரை: மகாஜனா தந்த மயிலங்கூடல் நடராஜன்

      பிள்ளையினார் நடராஜன் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும். 1939 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி பிறந்த இவர், 2022 மே மாதம் 12 ஆம் திகதி எம்மைவிட்டுப் பிரிந்தார். இவர் யாழ்ப்பாணத்தில் கீரிமலைக்கு அருகே உள்ள மயிலங்கூடல் என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பிள்ளையினார் தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகனாவார். திருமணமானபின் நாயன்மார்காட்டில் வசித்து வந்தார். ஆரம்ப கல்வியை மெய்கண்டான் மகாவித்தியாலயத்தில் பெற்றார். மகாஜனக் கல்லூரியின் பழைய […]


 • கனடாவில் சர்வதேச சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா

    ‘கனடாவில் கடந்த 29 வருடங்களாக இயங்கிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் உலகெங்கும் இயங்கும் இலக்கிய அமைப்புக்களின் மத்தியில் தனித்துவம் பெற்ற ஒன்றாக விளங்குகின்றது. இந்த வெற்றிகரமான அமைப்பு உலகின் பல நாடுகளிலும் வாழும் எழுத்தாளர்களிடையே சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தி, அதில் பரிசு பெற்ற சிறுகதைகளை தொகுத்து சாதனை புரிந்துள்ளது. இதற்காக கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் பாராட்டுக்குரிய ஒரு இலக்கிய அமைப்பு என்ற வகையில் கனடா வாழ் தமிழ் மக்களும், மக்கள் அமைப்புக்களும் […]


 • தமிழர்களின் புத்தாண்டு எப்போது?

  தமிழர்களின் புத்தாண்டு எப்போது?

      குரு அரவிந்தன்   தமிழர்களின் புத்தாண்டு தை மாதத்திலா, அல்லது சித்திரை மாதத்திலா என்ற கேள்வியால் எழுந்த குழப்ப நிலையில் அதிகம் பாதிக்கப்பட்டது இலங்கைத்தமிழ் மக்கள்தான் என்றால் மிகையாகாது.   இலங்கைத்தமிழர்கள் காலாகாலமாய் இந்து மதத்தைப் பின்பற்றிச் சைவசமயத்தவர்களாகவே இருந்தார்கள். சைவமும் தமிழும் ஒன்றாகவே வளர்ந்தன. அதனால்தான் எந்த வேற்றுமையும் பாராட்டாது, தென்னிந்தியாவில் இந்துக்கள் கடைப்பிடித்தது போலவே, சித்திரைத் திருநாளையே தமிழர்களின் புதுவருடமாகக் கொண்டாடினார்கள். தைமாதத்தில் உழவர்களின் திருநாளாகத் தைப்பொங்கலைக் கொண்டாடினார்கள். மக்கள் மனதில் […]


 • ஒஸ்கார் விருது வழங்கும் விழா – 2022

    குரு அரவிந்தன்     இந்த வருடம் ஒஸ்கார் விருது வழங்கும் விழா சென்ற 27 ஆம் திகதி மார்ச் மாதம், ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கோவிட் – 19 காரணமாக கடந்த வருடம் இந்த விழா சிறிய வட்டத்திற்குள் நடத்தப்பட்டது. இம்முறை, சென்ற வருடத்திற்கான சிறந்த திரைப்படத்திற்கான விருது ‘கோடா’ படத்திற்குக் கிடைத்தது. போட்டியில் இறுதிச் சுற்றுக்கு வந்த 10 படங்களில் இருந்து கோடா திரைப்படம் தெரிவானது. ‘த பவர் ஒவ் த […]


 • ரஸ்ய அதிபர் புதினுடைய சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

    குரு அரவிந்தன்     ரஸ்ய அதிபர் புதினுடைய சொத்து மதிப்பு என்ன தெரியுமா?  பிரபல்யமானவர்களின் சொத்துக்களை மதிப்பீடு செய்யும் நிறுவனமான ஹெர் மிட்டேஜ் கப்பிட்டல் என்ற நிறுவனம் சமீபத்தில் புதினுடைய சொத்துக்களை மதிப்பீடு செய்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன்படி புதினிடம் 15 லட்சம் கோடி அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள் இருப்பதாகத் தகவல் வெளிவந்திருக்கின்றது. கருங்கடற்கரையில் உள்ள சொகுசு மாளிகை மட்டும் 1.4 பில்லியன் அமெரிக் டொலர் பெறுமதியானது. இதைவிட சொகுசு விமானம், […]


 • உக்ரைன் மீது ரஸ்யாவின் ‘கைப்பர்சோனிக்  ஏவுகணைத்’ தாக்குதல்

  உக்ரைன் மீது ரஸ்யாவின் ‘கைப்பர்சோனிக்  ஏவுகணைத்’ தாக்குதல்

      குரு அரவிந்தன்   துடுப்பாட்டத்தில் ஓட்டங்களை எண்ணுவது போல, ரஸ்ய – உக்ரைன் யுத்தத்தில் நாட்களை எண்ண வேண்டிய துர்ப்பாக்கிய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கின்றது. சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது, கனடாவில் அந்தந்த நாட்டு ரசிகர்கள் தங்கள் நாட்டுக் கொடிகளைத் தங்கள் வண்டிகளில் பறக்கவிடுவது சாதாரண நிகழ்வாக இருக்கும். ஆனால் இம்முறை உக்ரைன் கொடிகளைப் பறக்க விட்டபடி செல்லும் பல வண்டிகளை வீதிகளில் காணமுடிகின்றது. இன்றுடன் யுத்தம் ஆரம்பித்து 27 நாட்களாகிவிட்டன. ரஸ்யா […]


 • உக்ரைன் தலைநகர் கிவ்வில் ‘ஸ்னைப்பர் வாலியின்’ நடமாட்டம்

  உக்ரைன் தலைநகர் கிவ்வில் ‘ஸ்னைப்பர் வாலியின்’ நடமாட்டம்

      குரு அரவிந்தன்.   யார் இந்த சினைப்பர் வாலி? என்பது உங்களுக்கு ஆச்சரியம் தரலாம். கனடாவின் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரரான ‘ஸ்னைப்பர் வாலி’ என்ற புனைப் பெயரைக் கொண்ட இவர் கனடாவின் 22வது படைப்பிரிவில் 12 வருடங்கள் கடமையாற்றியவர். உக்ரைனின் அழைப்பை ஏற்று 40 வயதான கணனி மென்பொறியியலாளரான இவர் அங்கு சென்று சுயவிருப்பத்தின் பெயரில் படையில் இணைந்திருக்கின்றார். ஸ்னைப்பர் மூலம் யாரையும் குறிபார்த்து வீழ்த்துவதில் வல்லவர். ஆப்கானிஸ்தான், ஈராக், […]


 • துருக்கி நாட்டில் நடந்த ரஸ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தையின் அடுத்த கட்ட நகர்வு  என்ன?

  துருக்கி நாட்டில் நடந்த ரஸ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தையின் அடுத்த கட்ட நகர்வு  என்ன?

              குரு அரவிந்தன்   ‘ரஸ்யாவால் உக்ரைனின் சில நகரங்களைக் கைப்பற்ற முடியுமே தவிர முழுநாட்டையும் கைப்பற்ற முடியாது’ என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்தார். பேச்சு வார்த்தை மூலம் இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு துருக்கி நாடு இரண்டு நாடுகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தது. ரஸ்யா – உக்ரையின் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் துருக்கி நாட்டில் நடந்த பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் வெளிவிவகார அமைச்சரான டெம்ரோ குலீபாவும், […]


 • என் ஜீவப்ரியே ஷ்யாமளா

  என் ஜீவப்ரியே ஷ்யாமளா

      குரு அரவிந்தன்   சியாமளா அம்மாளின் பாட்டைக் கேட்ட நாளில் இருந்து அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என் மனதில் துளிர்விட்டிருந்தது. கணீரென்ற அந்தக் குரல் என்னை எங்கோ இழுத்துச் சென்றது.    ஈழமண்ணில் பிறந்து, ஜேர்மனிக்குப் பெற்றோர் புலம் பெயர்ந்ததால் ஜெர்மனியில் தான் நான் வளர்ந்தேன். படிப்பிலே கவனம் செலுத்தினாலும், ஓய்வு நேரங்களில் பாட்டுக் கேட்பது, அதைப்போலப் பாடிப்பார்ப்பது, சினிமா படங்கள் பார்ப்பது என்று என் வாழ்க்கை சந்தோஷமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. […]