author

வீடு “போ, போ” என்கிறது

This entry is part 11 of 16 in the series 31 ஜனவரி 2021

  ஜோதிர்லதா கிரிஜா (ஜனவரி 1976 கலைமகள்-இல் வந்தது. தொடுவானம் எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.)       சச்சிதானந்தம் தாம் படுத்திருந்த சாய்வு நாற்காலியின் பின் சட்டத்தின் மீது நன்றாகக் கழுத்தைப் பதித்துத் தலையை உயர்த்திய நிலையில், மோட்டுப் பக்கம் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அதைத் தவிர வேறு சோலி ஏதும் அவருக்கு இல்லை. சமையற்கட்டில் செங்கமலம் காப்பிக் கஷாயம் இறக்கிக்கொண்டிருந்த மணம் அந்த வீடு முழுவதும் பரவிக்கொண்டிருந்தது. வடிகட்டியின் மேல் அவள் […]

மற்றொரு தாயின் மகன்

This entry is part 8 of 14 in the series 24 ஜனவரி 2021

(7.6.1981 தாய் முதல் இதழில் ‘வழிகள் பிரிகின்றன’ என்று மாற்றப்பட்ட தலைப்பில் வெளியானது. மனசு எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் உள்ளது.)       அமுதாப்பாட்டி என்று அக்கம்பக்கத்தில் அழைக்கப்படும் அமுதம்மாள் தூக்கம் வராமையால் தன் சின்ன வீட்டின் வாசற்புறத்தில் வந்து உட்கார்ந்துகொண்டிருந்தாள். வானத்தைப் பார்த்து இரவு பதினொரு மணிக்கு மேல் ஆகியிருக்க வேண்டும் என்று நினைத்தவாறு நெடிய கொட்டாவி ஒன்றை விடுவித்தாள். கொஞ்ச நாள்களாகவே இப்படித்தான், தூக்கம் வருவது போல் இருக்கும், ஆனால், படுத்தால் நன்றாக விழிப்புக் […]

நீ இரங்காயெனில் ….

This entry is part 1 of 13 in the series 10 ஜனவரி 2021

திர்லதா கிரிஜா (அமரர் மணியனின் “சிறு கதைக் களஞ்சியம்” முதல் இதழில் 1985ல் வெளிவந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் “அம்மாவின் சொத்து” எனும் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.) – காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதன் பின்னர் நூறு ஆண்டுகள் ஓடிவிட்டன. நாடெங்கிலும் நூற்றாண்டு விழா ஆங்காங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. அடேயப்பா!  நூறு ஆண்டுகள்! ஆஞ்சநேயலு தம் வாழ்க்கைப் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டினார். அவர் பிறந்து வளர்ந்த தெல்லாம் மதுரை ஜில்லாவின் ஒரு சிறு கிராமத்தில். தாய் மொழி தெலுங்கானாலும், […]

மினி பாரதம்

This entry is part 8 of 11 in the series 3 ஜனவரி 2021

வணக்கம். Mini Bharath எனும் எனது ஆங்கில மூலம் என்னாலேயே தமிழாக்கம் செய்யப்பட்டு அதை நிவேதிதா பதிப்பகம், 1/3, வேங்கடேஷ் நகர் பிரதான சாலை,விருகம்பக்கம், சென்னை 600092, மினி பாரதம் எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளது என்பதைத் திண்ணை அன்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இது பதின்மர்க்கான புதினமாகும். ஜோதிர்லதா கிரிஜா

மறக்க முடியாத மரக்காயர் மாமா

This entry is part 3 of 11 in the series 3 ஜனவரி 2021

(24.4.1991  “தேவி” இதழில் வந்தது. “நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்”-இன் “அதென்ன நியாயம்?” எனும் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.)       காலியாய்க் கிடந்த பக்கத்து வீட்டு மனையின் எதிரே வந்து நின்ற ஆட்டோவிலிருந்து, குஞ்சம் வைத்த அந்தக் காலத்துப்பாணித் தொப்பியுடனும், கையில் ஒரு தடியுடனும் இறங்கிய பெரியவரைப் பார்த்ததும், விசாலாட்சி, ‘பக்கத்து மனை யாரோ சாயபுக்கு சொந்தம்னு பேசிண்டாளே, அது இவராத்தான் இருக்கணும்’ என்று தனக்குள் எண்ணிக்கொண்டாள். ‘மனையை வெறுமனே பார்வையிட்றதுக்கு வந்தாரோ, இல்லேன்னா வீடுகீடு கட்டப் […]

“அப்பா! இனி என்னுடைய முறை!”

This entry is part 5 of 12 in the series 27 டிசம்பர் 2020

(மங்கை ஆகஸ்ட், 1988 இதழில் வெளியானது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் “மகளுக்காக” எனும் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.)       ”லலிதா! ஏ, லலிதா! சீப்பைக் காணோமே?” என்று இரண்டு நிமிடங்கள் போல் சீப்புக்காக அது இருக்கக்கூடிய  இடங்களையெல்லாம் ஆராய்ந்து, பிறகு சோர்ந்து போய்க் கூச்சல் போட்ட ஜனகராஜனுக்குப் பதில் கிடைக்கவில்லை. சீப்பைத் தேடி எடுக்க முடியாததால் தாமதம் விளைந்து கொண்டிருந்தது என்பதைக் காட்டிலும், லலிதாவிடமிருந்து தனது கூச்சலுக்குப் பதிலேதும் வரவில்லை என்பது அவனை அதிகப்படியான எரிச்சலுக்கு உட்படுத்தியது.       […]

மன்னிப்பு

This entry is part 5 of 9 in the series 20 டிசம்பர் 2020

                         (11.6.1978 குங்குமம் வார இதழில் வந்தது. “விடியலின் வருகையிலே” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.)       அந்தக் கிழவர் இடிந்து போய்விட்டார். கண்ணீர் மல்கிய கண்களைத் துடைத்துக்கொண்டு மறுபடியும் மறுபடியும் அந்தத் தந்தியைப் படித்தார். தந்தியில் கண்ட செய்தியை நம்ப முயன்றார். முடியவில்லை.  அது தாங்கியிருந்த செய்தி அவர் சிறிதும் எதிர்பாராததாகும். அது மாதிரியான கனவு வந்திருந்தால் கூட அவர் திடுக்கிட்டு விழித்துப் பதறிப் போய் அதற்குப் பின்னர் […]

அமரர் “கலைஞன்” மாசிலாமணி – கலைஞன் பதிப்பகம்

This entry is part 14 of 15 in the series 13 டிசம்பர் 2020

ஜோதிர்லதா கிரிஜா      நான் அறிந்த தமிழ்ப் புத்தக வெளியீட்டாளர்களில் கலைஞன் பதிப்பகத்தைத் தோற்றுவித்த அமரர் “கலைஞன்” மாசிலாமணி அவர்கள் சற்றே வித்தியாசமானவர். சமுதாயப் பிரச்சினகள் பற்றிக் கவலைப்பட்டு அலசக்கூடியவராக அவர் இருந்துள்ளார்.      அவரை நான் சந்திக்க வாய்த்தது தற்செயலாகத்தான். ஒரு நாள் தியாகராய நகர்ப் பேருந்து நிறுத்தம் ஒன்றில் என் தோழி ருக்மிணியும் நானும் நின்றிருந்தபோது எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது. ருக்மிணியைச் சந்தித்துவிட்டு அன்று எங்கள் வீட்டுக்குச் செல்லும் பொருட்டு நான் பேருந்து நிறுத்தத்தில் […]

ஆல்- இன் – வொன் அலமேலு

This entry is part 3 of 15 in the series 13 டிசம்பர் 2020

  (14.8.1987 குங்குமம் இதழில் வந்தது. “அம்மாவின் சொத்து” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.)       சட்டென்று வந்த விழிப்பில் அலமேலு வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து, மெதுவாய் நகர்ந்து சுவர்க் கெடியாரத்தில் நேரம் பார்த்தாள். மணி ஐந்து என்று அது அறிவிக்க, அவள் பதற்றமாய்ப் படுக்கைக்குத் திரும்பி வந்து கணவனைத் தொட்டு அசைத்து எழுப்ப முற்பட்டாள். கைகால்களை நீட்டி விறைத்துச் சோம்பல் முறித்துப் பெரிய ஓசையுடன் கொட்டாவி விட்ட பிறகும் உடனே எழாமல், “மணி […]

இளிக்கின்ற பித்தளைகள்

This entry is part 5 of 10 in the series 6 டிசம்பர் 2020

ஜோதிர்லதா கிரிஜா (29.5.1981 தினமணி கதிரில் வந்தது. “மனசு” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.)       கண்ணப்பன் கையில் பிடித்திருந்த தந்தியை வெறித்துப் பார்த்தான். அதில் இருந்த சொற்கள் அவனைக் கேலி செய்தன. அவன் படித்தது ஆறாம் வகுப்பு வரையில்தான். ‘மதர் சீரியஸ். ஸ்டார்ட் இம்மீடியெட்லி’ என்று தந்தியாளர் கிறுக்கியிருந்ததை அவனால் எழுத்துக்கூட்டிக்கூடப் படிக்க முடியவில்லை. படிக்க முடிந்திருந்தால், ஒருவேளை அவ்வப்போது ஆங்கிலத்தில் உரையாடுகிற அலுவலக அதிகாரிகளிடையேயும் ஊழியர்களிடையேயும் இருந்து பழக்கப்பட்டுக் […]