author

துப்பறியும் புதினம் “WHODUNIT – A HE OR A SHE?”

This entry is part 9 of 23 in the series 26 ஜூலை 2020

அன்புமிக்க திண்ணை ஆசிரியர்க்கும் வாசகர்களுக்கும் வணக்கம். சில ஆண்டுகளுக்கு முன் குமுதம்-மாலைமதியில் தொடராக வெளிவந்த ‘சிக்குவானா, சிக்குவாளா?’ எனும் எனது துப்பறியும் புதினம் “WHODUNIT – A HE OR A SHE?” எனும் தலைப்பில் என்னால் ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டு அமேசான் கிண்டில் பதிப்பாக வெளிவந்துள்ளது. விரும்புவோர் வாசிக்கலாம்! அதன் லிங்க் கீழே – ஜோதிர்லதா கிரிஜா

மதுபானக்கடைகளைத் திறக்க இதுதானா நேரம்?

This entry is part 6 of 8 in the series 17 மே 2020

      கொரோனா கிருமியால் விளைந்துள்ள நோய்த்தொல்லையின் விளைவாய்க் கடந்த சில நாள்களாக மதுக்கடைகள் மூடப்பட்டுவந்துள்ளன. இதையே வாய்ப்பான ஒரு தருணமாய்ப் பயன்படுத்தி நாடு முழுவதிலும் மதுவிலக்கை அமலுக்கு எல்லா மாநில அரசுகளும் கொண்டுவரும் என்கிற நம்பிக்கையை வளர்த்துக்கொண்டிருந்த பெண்களின் தலைகளில் இப்போது இடிவிழுந்துள்ளது. இந்த அளவுக்கு நம்பிக்கை கொள்ள முடியாதுதானென்றாலும், அப்படிச் செய்தால் நன்றாக இருக்குமே என்கிற எண்ணம் பெண்களின் மனங்களில் ஓடிக்கொண்டிருந்த தென்னவோ உண்மை.       கோரோனாவை எதிர்கொள்ள நேர்ந்த எதிர்பாராத நடவடிக்கைகளின் விளைவாக நாட்டின் […]

குடியுரிமைச் சட்டம்

This entry is part 8 of 10 in the series 29 டிசம்பர் 2019

திண்ணை ஆசிரியருக்குவணக்கம்.குடியுரிமைச் சட்டம் பற்றிய விவாதங்கள் திண்ணையில் வந்துகொன்டிருக்கின்றன.அவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ளக் கீழ்க்காணும் தமிழ், ஆங்கில இதழ்களைத் திண்ணை வாசகர்கள் படிப்பது நன்று:           துக்ளக்                       –                                 1.1.2020             தலையங்கம்  […]

இந்தியாவின் உண்மையான கம்யூனிஸ்ட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்

This entry is part 4 of 8 in the series 15 டிசம்பர் 2019

மிகப் பெரிய பொது உடைமை நாடாக விளங்கிவந்த சோவியத் ஒன்றியத்திலேயே கம்யூனிசம் எடுபடாமல் போயிற்று என்பது அண்மைக்கால வரலாற்று உண்மை என்பதை நாம் அறிவோம். மனிதர்களில் பேரும்பாலோர் நாணயமற்றவர்களாகவும், தன்னலக்காரர்களாகவும் இருக்கின்ற வரையில் எந்த “இசமும்” – அது எவ்வளவுதான் உயர்ந்த “இசமாக” இருந்தாலும் – எடுபடாது என்பதையே இது காட்டுவதாய்க் கொள்ளலாம். எந்த “இச”த்தின் மீதும் தனிப்பட்ட பற்று இல்லாமல் ஆராயத் தொடங்கினால் எல்லா “இசம்”களுமே சிறந்தவையே என்பது புலப்படும்.       முதலாளித்துவமும் சிறந்த ஒன்றே […]

தலை தெறிக்க ஆடினால், விலை கொடுக்க நேரிடும் !

This entry is part 6 of 5 in the series 8 டிசம்பர் 2019

ஜோதிர்லதா கிரிஜா       பெரும்பான்மையினராக எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அக்கட்சி செருக்குடன்தான் செயல்படுகிறது. முந்தைய ஆட்சி பிடிக்காததால் மக்கள் தங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்பதை அறவே மறந்து அவர்கள் தேன் குடித்த நரிகளாகிவிடுகிறார்கள். மக்களுக்குப் பிடிக்காதவற்றையும் அவர்கள் சற்றும் ஆதரிக்காத கொள்கைத் திணிப்பையும் செய்யத் தலைப்பட்டு விடுகிறார்கள். ஒரே நாடு, ஒரே மொழி எனும் பாரதிய ஜனதா கட்சியின் அறைகூவலும் அதன் விளைவுதான். “ஒரே மொழி” என்று கூவிவிட்டு அது இந்தித் திணிப்பன்று என்று கூறுவது இந்தி […]

மேலான படைப்பாளி மேலாண்மை பொன்னுச்சாமி

This entry is part 13 of 15 in the series 5 நவம்பர் 2017

தன்னிகரற்ற எழுத்தாளர் 30.10.2017 இல் மறைந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி ஆவார். ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே பள்ளிக்கல்வி பயின்று இந்த அளவுக்குப் பேசப்படும் ஓர் எழுத்தாளர் வேறு எவரும் தமிழ்நாட்டில் இருந்ததாய்த் தெரியவில்லை. அடித்தட்டு மக்களில் ஒருவரான இவர் அடித்தட்டு மக்களின் வாழ்வு, அவர்களின் பிரச்சினைகள், இயல்புகள் ஆகியவை பற்றியே பெரும்பாலும் எழுதினார். இவரது தமிழ்நடை வேறு எவரும் பின்பற்ற முடியாத  ஒன்றாகும். சிற்றிதழ்களில் எழுதத் தொடங்கிய இவர் ஆனந்தவிகடனில் முத்திரைக் கதைகள் எழுதுகிற அளவுக்கு உயர்ந்தவர். […]

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 20 (முற்றும் )

This entry is part 4 of 12 in the series 16 ஜூலை 2017

21. கிஷன் தாஸ் பங்களாவின் நடுக்கூடம். சுமதியும் சுந்தரியும் வந்து சேர்ந்தாகிவிட்டது. கிஷன் தாஸ், பிரகாஷ், சுமதி, சுந்தரி, பீமண்ணா ஆகியோர் காப்பி குடித்துக்கொண்டிருக்கிறார்கள். கிஷன் தாஸ், “பிரகாஷ்! நான் சுமதியோடு கொஞ்ச நேரம் தனிமையில் பேச வேண்டிய திருக்கிறது.… ” என்கிறார். குறிப்பறிந்து எழுந்து கொள்ளும் பிரகாஷ், தன்னோடு வருமாறு சுந்தரிக்கும் பீமண்ணாவுக்கும் சைகை செய்த பின், “அப்பா! விமானதளத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது நான் சுமதிக்கு உங்கள் குழந்தைப் பருவத்துக் கதை முழுவதையும் […]

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 20

This entry is part 2 of 16 in the series 9 ஜூலை 2017

(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)   கிஷன் தாசின் பங்களா. கிஷன் தாஸ் பீமண்ணாவுடன் நுழைகிறார்.  சமையல்காரர் நகுல் சமையலறையிலிருந்து எட்டிப் பார்க்கிறார். படித்துக்கொண்டிருக்கும் பிரகாஷ் தன் தலை உயர்த்தி ஒரு சிறுவனுடன் உள்ளே வரும் கிஷன் தாஸைக் கேள்விக்குறியுடன் நோக்குகிறான். “யாரப்பா இந்தப் பையன்? அவனுக்கு உடம்பு சரி இல்லையா? உடம்பில் யூகலிப்டஸ் ஆயில் தடவிக்கொண்டிருக்கிறானா, என்ன! இந்தப் பையனைக் கூட்டிக்கொண்டு வருவதற்காகத்தான் நீங்கள் ஜெய்ப்பூருக்குப் போனீர்களா?” என்று பிரகாஷ் கேள்விகளை அடுக்குகிறான். சோபாவில் விழாத குறையாய்ப் […]

English translation in poetical genre of Avvaiyaar’s poems

This entry is part 8 of 16 in the series 9 ஜூலை 2017

Dear editor,   VanaKkam. This is to inform Thinnai readers that my English translation in poetical genre of Avvaiyaar’s poems – except Gnaanak Kural – has been published by Cyberwit.net Publishers of Allahabad this month, under the heading All-time Adages of Avvaiyaar, the Tamil Poetess. Thanks.    

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 19

This entry is part 18 of 18 in the series 2 ஜூலை 2017

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! ஜோதிர்லதா கிரிஜா (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 19. ஜெய்ப்பூரில் மீராபாய் கண்ணாடித் தொழிற்சாலையில் இருக்கும் கிஷன் தாஸ் பிரகாஷுடன் பேசி முடித்த பின் மேலாளர் கொடுத்துச் சென்றிருந்த புகாரின் நகலை எடுத்துப் பிரித்துப் படிக்கிறார். அதைப் படித்துக்கொண்டிருக்கும் போதே அவரது முகம் வெளுத்துப் போகிறது கண்கள் பனிக்கின்றன. அவர் உடனே மேலாளர் சேகரை அவசரமாய் அழைக்கிறார். தம்முன் வந்து கைகட்டி நிற்கும் அவரிடம், “அந்தப் பையனை மிகவும் பலமாக அடித்துவிட்டீர்களா?” என்று […]