author

இராத்திரியின் சக்கரங்கள்

This entry is part 11 of 42 in the series 25 நவம்பர் 2012

இன்று, இப்பொழுது, இங்கு இயந்திரத்தின் மனசாட்சி ஒன்றை ஒளியில் ஒட்டி எனக்கு முன் வைத்தது மின்னணுக்களின் அசுரப் பயணங்கள்   அதை அழுது தீர்த்திராத இந்த இரவின் தனிமையிலிருந்தவாறு என்னுடனே வந்து கொண்டிருக்கும் இருளிற்கு பரிசளித்தபடி யாத்திரைகள் நீடிக்கின்றன   வேகமாகச் சுழலும் இரு சக்கரங்களை எனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன்   பாதுகாவலற்ற மனதின் இன்பத்தையும் இனம் புரியாததொரு பயத்தையும் இந்த இரவிற்கு வரமெனக் கொடுத்தது யார்..?   பார்வையற்றிருக்குமிந்த கொடூர இராத்திரியின் சக்கரங்கள் ஓய்வற்று சுழல்கின்றன … *** கலாசுரன்

பாதைகளை விழுங்கும் குழி

This entry is part 29 of 43 in the series 29 மே 2011

* ஒரு கணம் மகிழ்வெனத் திகழ்ந்ததோர் ஒளியென் கனவுகளைப் பிளக்கும்   தெளிவற்ற பாதையின் குழியொன்று நகைப்புடன் எனதிந்த பாதையை விழுங்கி விடக்கூடும்   பாதங்களின் தீண்டல் பயணிக்கவேண்டிய பாதைகளை நிர்ணயித்துக் கொண்டிருக்க   இந்த இருளென்னை மிகவும் அழுத்துகிறது * ***   கலாசுரன்  

முகபாவம்

This entry is part 19 of 42 in the series 22 மே 2011

* முன்னோர்களின் மண்டையோட்டுக்களை மிகக் கவனமுடன் பார்த்துக்கொண்டொரு முகபாவத்தை வெளிப்படையாகப் பத்திரப்பத்துகிறேன் அவர்கள் எல்லோரும் ஒரே முகபாவம் கொண்டிருந்தனர்   அடிக்கடி நானே என்னிடம் சொல்லிக்கொள்வதுண்டு அவர்களை விட நான் மிகவும் வித்யாசமானவன் என்று அவர்களது முகபாவமொன்று என் சதைக்குப் பின்னால் கொடிய நகைப்புடன் ஒளிந்திருப்பதை அறியாமல்   குருதிச் சுழியிலென் மண்டையோடுகள் ஓய்வற்றுச் சுழல்கின்றன * *** கலாசுரன்  

இனிவரும் வசந்தத்தின் பெயர்

This entry is part 10 of 48 in the series 15 மே 2011

  வெளிறிய கோடை இலைகளே..  வறண்டு போன நடை பாதைகளே.. நீருடை பூணும் கானல்களே.. ரத்தமற்று சுருங்கிப் போன நதி தமநிகளே.. கருகி விழுந்த பூவிதழ்களே.. எனதிந்த வெற்றுக் காகிதங்களிடம் இனிவரும் வசந்தத்தின் பெயரை மட்டும் சொல்லுங்கள்.. * ***